ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு வந்த ஆங்கில வஹியில் தவறு இருந்ததா...?

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) கூறும் வாசகத்தை சரியாக அறியாத, புரியாத அவர்களின் எதிரிகள் இவ்வாறு ஆட்சேபனை செய்கிறார்கள்: 
"தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்ததாகச் சில வாசகங்களைக் கூறினான் (நவூதுபில்லாஹ்) ஆனால் அது இலக்கணப் பிழையுடன் இருந்தது. வஹீ வேகமாக வருவதால் இது போன்ற பிழைகள் வருவது சகஜம்' என்று உளறினான். (நூல் ஹக்கீகத்துள் வஹீ . பக்கம்:317) அல்லாஹ்வே பிழையாகக் பேசுவான் என்று கூறியவன் நபியா?

சகோ பி.ஜெயினுல் ஆபிதீன் கோயம்புத்தூர் விவாதத்தின் போது இந்த ஆட்சேபனையுடன் சேர்த்து இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்தார்  திருக்குரானில் வருகிறது "மா அர்ஸல்னா மின் ரசூலின் இல்லாபி லிசானிக் கவ்மிஹி லியு பய்யின லஹும்" நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை அவருடைய சமுதாய மொழியிலேயே அன்றி, அவர் அவர்களுக்கு விளக்கிச்சொல்வதற்க்காக ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை அனுப்புகிறான் என்றால் அந்த சமுதாய மொழியில் தான் வஹி இறங்க வேண்டும். ஆனால் இவருடைய சமுதாய மொழி பஞ்சாபி, மற்றும் உருது மொழியாகும். இவர் தனக்கு ஆங்கிலத்தில் வஹி இறங்கினதாக குறிப்பிடுகின்றார். இந்த திருக்குரானுடைய வசனத்திற்கு இவர் முரண்படுகிறார். என்று எடுத்துவைத்தார். இதற்கு அஹ்மதியா தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. 

இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை அனுப்புகிறான் என்றால் அந்த சமுதாய மொழியை அவர் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பதே. இங்கு மொழியைப் பற்றி வருகிறதே தவிர அந்த இறைத்தூதருக்கு இறைவன் இறக்குகின்ற வஹியைப் பற்றி வரவிலலை.
ஏனென்றால் திருக்குரானில் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியில் வஹி இறங்கியதாக வருகிறது.

"உல்லிம்னா மந்திக்க தைர்" நாம் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியைக் கற்றுக் கொடுத்தோம் என்று வருகிறது. எந்த சமுதாயத்திற்கு சுலைமான் நபி தூதராக அனுப்பப்பட்டாரோ அந்த சமுதாயத்தினுடைய மொழி பறவையின் மொழியாக இருந்ததா? உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தில் வஹி இறங்கியதை ஆட்சேபனையும் செய்யும் இவர்கள், சுலைமான் நபிக்கு பறவையின் மொழியின் வஹி இறங்கியதை எந்த அளவுக்கு ஆட்சேபனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆட்சேபனை செய்யும் இவர்கள் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீது எந்த ஆட்சேபனை செய்தாலும், அந்த ஆட்சேபனைகள் மற்ற நபிமார்களையும் நிராகரிக்கும்படி தானாகவே வந்து அமைந்துவிடும்.

வஹி இறங்கும் போது ஒரு வேகம் வருகிறது என்று இமாம் மஹ்தி (அலை) கூறியதை ஆட்சேபனை செய்யும் எதிரிகள் கிண்டல் அடித்தவாறு கூறுகிறார்கள். ஆனால்,

வஹீ இறங்கும் போது ஒரு வேகம் வருகிறது என்பதை ஹதீதும், திருக்குரானும் கூறுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குரானுடைய வசனங்கள் வஹியாக இறங்கும்போது மனனம் செய்ய வேண்டும் என்பதற்காக தம்முடைய நாக்கை மிக வேகமாக அசைத்ததாக வருகிறது . இதைப் பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது "வலா துகர்றிக் பி லிசானிக்க" நீர் உம்முடைய நாக்கை அசைக்கவேண்டாம். இதனை தொகுப்பது தம்முடைய பொறுப்பாகும் என்று வருகிறது.

வஹீ இறங்கும்போது இது போன்ற பிழைகள் வருவது சகஜம் என்று உளறினான். என்று எதிரிகள் குறிப்பிடுகின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகள் திருக்குரானிலிருந்து இந்தமாதிரியான ஆட்சேபனையை கிளப்பினார்கள். உதாரணமாக திருக்குரானில் வருகிறது
"காலு இன்ஹாசாணி ல ஷாஹிரானி" 'இவ்விருவரும் இரு ஷாஹிர்கள் (மந்திரவாதிகள்) என்று வருகிறது.

அரபி இலக்கணத்தின்படி இன் என்று வந்தால் ஹாஷானி என்று வரக்கூடாது, ஹாஷைனி என்று தான் வரவேண்டும் என்று கூறினார்கள். இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய விளக்கம் என்னவென்றால் இலக்கணம் என்பது மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இதன் பின்னால் இறைவன் போக வேண்டிய அவசியமில்லை. என்று விளக்கம் கொடுத்தார்கள்.

இஸ்லாத்தினுடைய எதிரிகள் திருக்குரானில் இருந்து எடுத்துக் காட்டும் இந்த ஆட்சேபனையை வைத்து இந்த எதிரிகள் "அல்லாஹ் திருக்குரானில் பிழையாகப் பேசியுள்ளான் (நவூதுபில்லாஹ்) என்று கூறுவார்களா?

ஆட்சேபனை செய்யும் இவர்கள்  கூறுவதைப் பாருங்கள் 'அல்லாஹ்வே பிழையாகப் பேசுவான் என்று கூறியவன் நபியா?என்று குறிப்பிடுகின்றார்கள். இறைவன் இறக்கக்கூடிய வஹீ பிழையாக இருக்கும் என்று இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சொன்னதாக இவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் வஹி இறங்கும்போது ஒரு வேகம் ஏற்படுகிறது இதன் காரணமாக பிழைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் "அல்லாஹ்வே பிழையாகப் பேசுவான் என்று இமாம் மஹ்தி(அலை) அவர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றார்கள். இது புறம் பேசுவதை விட கீழ்த்தரமானது என்பதை இவ்வாறு ஆட்சேபனை செய்பவர்களை பின்பற்றி அதை உண்மைதான் என்று நம்புவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

No comments

Powered by Blogger.