அற்புதங்கள் மற்றும் அடையாளங்களின் ஒளியில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைத்துவம்
தங்களிடம் ஏதாவது அடையாளம் வந்தால் நிச்சயமாக அதனை ஏற்றிருப்போம் என அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியான சத்தியங்கள் செய்துள்ளனர். நீ (அவர்களை நோக்கி) கூறுவீராக: அடையாளங்கள் அல்லாஹ்விடம் (ஏராளமாக) இருக்கின்றன. அந்த அடையாளங்கள் வந்தால் (கூட) அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஒன்றும் அல்லாஹ்விடமே உள்ளது. (6:110)
இவர்கள் உம்மைப் பொய்யாக்குகின்றனர் என்றாள், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (அவர்களுடைய தூதர்களை) பொய்யாக்கியிருந்தனர். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடனும், வேத ஏடுகளுடனும், ஒளியைத் தரக்கூடிய வேதத்துடனும் வந்தனர். (35:26)
இறைவனின் ஒளியிலிருந்து உலகம் தன் முகத்தை திருப்பும் போதெல்லாம், ஓர் இருள் சூழ்ந்து விடும்போதெல்லாம் அல்லாஹ் தஆலா தான் அடியார்களுள் தான் விரும்புவர் மீது தான் ஒளியை இறக்குகிறான். மேலும் அவரை முழுவதுமாக தன் ஓளீயால் நிறப்பிவிடுகின்றான். அந்த அடியார் இறைவனின் மடியில் இருக்கிறார். அவர் மீது அல்லாஹ் தஆலாவின் சிறப்பான கவனம் இருக்கிறது. அவரது வருகையை ஒட்டி அந்த ஒளி அக்கம் பக்கத்திலுள்ள தன் பிரகாசத்தை பரப்புகிறது. எந்த ஒரு புத்திசாலியும் அந்த ஒளியை பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் அது தன் வெளிச்சத்தை காட்டுகிறது. அந்த ஒளியானது முன்னர் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு மனித அறிவில் ஒளியையும் தூய்மையையும் ஏற்படுத்துகிறது. மக்கள் சத்தியத்தை தேடி அலைகிறார்கள். அப்போது மறைவிலிருந்து ஒரு ஊக்கம் அவர்களின் சிந்தனைப் புலனில் உருவாகின்றது. இந்த எல்லா அறிவு வளர்ச்சியும் உள்ளத்தின் எழுச்சியும் இல்ஹாம் பெறக்கூடிய அந்த நபரின் வருகையால் பிறக்கின்றன. இறைவனின் இந்த சட்டத்தை விளக்கியவாறு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
"மார்க்கத்தை தேடி எல்லா மனிதர்களும் அலைவதை நீங்கள் கண்டால் மேலும் பூமியின் தண்ணீரில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருப்பதை கண்டால் எழுந்திருங்கள். சுதாரித்துக் கொள்ளுங்கள். வானத்திலிருந்து அடைமழை பொழிந்துள்ளது என்று உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். மேலும் ஏதோ ஒரு உள்ளத்தில் இறை இல்ஹாமின் மழை பொழிந்துவிட்டது என்றும் அறிந்து கொள்ளுங்கள். (இஸ்லாமிய போதனைகளின் தத்துவஞானம்)
அவர்கள் இன்னொரு இடத்தில் கூறுகின்றார்கள்:
"வானத்திலிருந்து இந்த ஒளி ஒரு மனிதர் மீது இறங்குவதை கண்டால், அந்த ஒளி இறங்கியதும் எல்லா திறைகளும் நீங்கி விடுகின்றன. முன்பு ஒரு போதும் இல்லாத அளவிற்கு மிகவும் நுட்பமான, இனிமையான, சுகமான ஓர் அன்பு உள்ளத்தில் உருவாகின்றது. ஒரு நேசத்திற்குரிய தோழர் வெகுநாட்களாக பிரிந்திருந்து திடீரென்று சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை போன்ற ஒரு மன நிம்மதியும் உளதிருப்தியும் அமைதியும் ஏற்படுகின்றது. மேலும் இறைவனின் பிரகாசமான, இனிமையான, அருளுக்குரிய, நிம்மதியளிக்கக்கூடிய, பொருட்செறிவு கொண்ட, நறுமனம் வீசக்கூடிய, மகிழ்ச்சியான செய்திகள் கொண்ட இறைவனின் வார்த்தைகள் அன்றாடம் எழும்போதும் உட்காரும் போதும் தூங்கும்போதும் குளிர்ந்த மனதை ஈர்க்கக் கூடிய, நறுமனம் வீசக்கூடிய அதிகாலை தென்றல் காற்று ஒரு தோட்டத்தின் வழியே கடந்து செல்வது போல் தன் மீது பொழியக் கண்டால், மேலும் இறைவனின் அன்பும் அவனது நேச உணர்வுமின்றி தன்னால் வாழவே முடியாது என்ற நிலையில் மனிதன் அவன் பால் ஈர்த்துச் செல்லக் கண்டால், மேலும் செல்வம், உயிர் கண்ணியம் மற்றும் தன் குழந்தைகள் ஆகியவற்றை தியாகம் செய்ய ஆயத்தமாக இருப்பது மட்டுமல்லாது தன் உள்ளத்தால் அவை அனைத்தையும் தியாகம் செய்துவிட்டால், தனக்கு என்ன நேர்ந்தது என்பது கூட தெரியாத அளவிற்கு அவன் பால் ஈர்க்கப்பட்டால் மேளும் பகல் வெளிச்சத்தைப் போன்று ஆன்மீக ஈர்ப்பு சக்தியானது தன் மேல் இறங்கக் கண்டால் மேலும் தன் மீது சத்தியம், அன்பு மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் நதிகள் வேகமாக பாயக் கண்டால் மேலும் இறைவன் தன் உள்ளத்தில் இறங்கிவிட்டான் என ஒவ்வொரு நொடிபொழுதும் தன்னில் உணரக் கண்டால் இவ்வெல்லா அடையாளங்களும் தன் மீது முழுமையாக இருப்பதை உணர்ந்தால் நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள் உங்களது உண்மையான நேசனாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். (ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம்-பக்கம்: 792)
இறைவனின் நேசத்திற்குரிய மனிதரைக் குறித்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை) கூறுகின்றார்கள்:
"அவர்கள் முன்னறிவிப்பு மட்டும் செய்து தமது முழுமைத் தன்மையை ஓர் எல்லைக்குட்பட்டதாக ஆக்கிக் கொள்வதில்லை. அவர்கள் மீது உண்மைகளும் இறை ஞானங்களும் இறங்குகின்றன. அவர்களுக்கு நுட்பமான அறிவு, இறைவனின் இரகசியங்கள், சமுதாயங்களின் உண்மைத் தன்மைகள் ஆகியவற்றின் அறிவு வழங்கப்படுகிறது. சிறப்பான முறையில் அவர்களின் உள்ளத்தில் நுட்பத்திலும் நுட்பமான திருக்குர்ஆனின் ஞானங்கள் மாற்று இறை வேதத்தின் வசனங்களுக்கு விளக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் இறை நேசர்களுக்கு நேரடியாக கிடைக்கக் கூடிய இறை இரகசியங்கள் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றிற்கு வாரிசாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறப்பான அன்பு வழங்கப்படுகிறது. இப்ராஹீமின் தன்மையுடைய சத்தியமும் நேர்மையும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பரிசுத்த ஆன்மாவின் நிழல் அவர்களின் உள்ளங்களில் இருக்கும். அவர்கள் இறைவனுக்காகவும் இறைவன் அவர்களுக்காகவும் ஆகிவிடுகிறான். அவர்கள் செய்யும் பிரார்த்தனைகள் அசாதாரணமான முறையில் விளைவுகளைக் காண்பிக்கின்றன. அவர்களுக்காக இறைவன் ரோஷம் கொள்கின்றான். அவர்கள் தம் எதிரிகளின் மீது எல்லா மைதானத்திலும் வெற்றிக் கொள்கின்றான். அவர்களின் முகங்களில் இறையன்பின் ஒளி தென்படுகின்றன. அவர்களின் வீடுகளின் சுவர்களில் கூட இறைவனின் கருணை பொழிவதைப் போன்று தென்படுகிறது. அவர்கள் அன்பான ஒரு குழந்தையைப் போன்று இறைவனின் மடியில் இருக்கின்றனர். ஒரு பெண் சிங்கத்திடமிருந்து அதன் குட்டிகளைப் பறிக்க எண்ணுபவர் மீது அந்த சிங்கம் சினம் கொள்வதை விட அதிகமாக அவர்களுக்காக இறைவன் ரோஷம் கொள்வான். அவர்கள் பாவங்கள் செய்யாதவர்களும் அவர்கள் எதிரிகளின் தாக்குதலை அறியாதவர்களும் அவர்கள் தவறாக கற்பிக்கப்படுவதிலிருந்து விலகியவர்களும் ஆவர். அவர்கள் வானத்தின் அரசர்கள் ஆவர்." (துஹ்ஃபா கோலடுவியா பக்கம்- 813)
அவர்களின் விருப்பங்கள் அல்லது அவர்களின் கோபம் கூட முன்னறிவிப்பு என்ற தன்மையைக் கொண்டதாகும். எந்த மனிதர் மீது அவர்கள் அதிகமாக விருப்பம் கொள்கின்றார்களோ அந்த மனிதர் வருங்காலத்தில் வெற்றி பெறுவார் என்ற முன்னறிவிப்பைக் கொண்டதாக அவர்களின் அந்த நேசம் இருக்கும். அவ்வாறே எவர் மீது அவர்கள் கடும் கோபம் கொள்கின்றார்களோ அந்த மனிதர் வருங்காலத்தில் அழிவை அடைவார் என்பதற்கு அது ஆதரமாகிவிடுகிறது. ஏனென்றால் அவர்கள் இறைவனிடம் தம்மை முழுமையாக மாய்ததன் காரணமாக அவர்கள் இறைவனின் அரவணைப்பில் இருப்பார்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகின்றார்கள்:
"இறைவன் தன் உயிருள்ள வாக்குகள் மூலம் எனக்கு நேரடியாக கூறியுள்ளான், நீர் இறைவன் புறமிருந்து வந்தவர் என்று நாங்கள் எவ்வாறு நம்புவது? என்று மக்கள் கேட்டால் நீர் அவர்களுக்கு கூறுவீராக, வானத்தின் அடையாளங்கள் எனக்கு சாட்சி பகர்கின்றன. துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மறைவான விஷயங்கள் முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்படுகின்றன. இறைவனைத் தவிர யாரும் அறிந்திடாத இரகசியங்கள் அவை நிகழ்வதற்கு முன்பே எனக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த அடையாளமே அவர்கள் ஏற்றுக் கொள்வதற்குப் போதுமானதாகும். இரண்டாவது அடையாளம், துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதும் அது குறித்து முன்கூட்டியே அறிவிப்பதும் மேலும் மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட மறைவான நிகழ்வுகள் குறித்தும் அவை நிகழ்வதும் குறித்தும் அறிவிப்பது ஆகியவற்றில் யாரேனும் உம்முடன் போட்டியிட்டால் அவர் தோல்வியடைவார். அவர் கிழத்தியவராக இருந்தாலும் சரி அல்லது மேற்கத்தியவராக இருந்தாலும் சரி. இந்த இரண்டு அடையாளங்களும் எனக்கு வழங்கப்பட்டவையாகும். (ஜிஹாது பக்கம் 8)
எவனுடைய கையில் எனது உயிர் உள்ளதோ அந்த இறைவன் மீது ஆணையிட்டு நான் கூறுகிறேன். எனக்கு ஆதரவாக வெளிப்படுத்தப்பட்ட அடையாளங்களுக்கான சாட்சிகளை ஓரிடத்தில் ஒன்று திறட்டினால், உலகில் எந்த ஒரு அரசனுடைய இராணுவத்தின் எண்ணிக்கையும் அதைவிட அதிகமாக இருக்காது. எனினும் உலகில் என்னென்ன பாவங்கெளெல்லாம் நிகழ்கின்றன அவ்வாறே இந்த அடையாளங்களையும் மக்கள் பொய்படுத்துகின்றனர். எனக்காக வானமும் சான்று பகர்ந்தது பூமியும் சான்று பகர்ந்தது. (இஃஜாஸே அஹ்மதி பக்கம் 2)

"நான் இக்காலத்து அரபி கவிஞர்களின் கவிதைகளை விரும்பவில்லை ஆனால் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த கவிதைகளை நான் மனனம் செய்வேன் என்று கூறினார்."
அதன் பிறகு ஸயீத் சாஹிப் காதியான் வந்து ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களிடம் பையத் செய்தார்கள். அதைத் தொடர்ந்து பனிரெண்டு அரபி ஆலிம்களும் சான்றோர்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுடைய பையத்தில் இணைந்தார்கள்.
இதுவே அல்லாஹ் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு வழங்கிய அரபி மொழி புலமையின் அடையாளமாகும். அல்லாஹ் தஆலா அவர்களுக்கு தான் அருளால் ஒரே இரவில் அரபி மொழியின் நாற்பதாயிரம் மூலச் சொற்களை கற்பித்தான் என்று நான் ஏற்கனவே கூறினேன். அரபிகள் மற்றும் அரபி அல்லாதவர்களின் முன் இதனை நிரூபிப்பதற்காக அவர்கள் பல நூட்களை அரபி மொழியில் எழுதினார்கள். இவ்வாறு அவர்கள் எழுதிய நூட்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆகும். அதில் ஒன்று "குத்பா இல்ஹாமியா" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் ஹஜ் பெருநாளின் போது நிகழ்த்திய குத்பா உரையாகும். இது தொடர்பாக அவர்களுக்கு முன்னதாக கூட்டத்தில் "நீர் அரபியில் உரை நிகழ்த்துவீராக உமக்கு அதற்கான சக்தி வழங்கப்பட்டுள்ளது" என்று இல்ஹாம் இறங்கியது. மேளும் "கலாமுன் உஃப்ஸிஹத் மில்லதுன் ரப்பின் கரீம்" என்றும் இல்ஹாம் இறங்கியது. (அதாவது கண்ணியம் மிகுந்த இறைவன் புறமிருந்து உமக்கு இந்த வசனங்கள் விளக்கப்பட்டுள்ளன). அவர்கள் அரபி மற்றும் அரபி அல்லாத பேரறிஞர்களுக்கு அவர்களின் அரபி மொழிப் புலமை மற்றும் விரிவுரைகள் ஆகியவற்றில் தம்முடன் போட்டியிடுமாறு அறைகூவல் விடுத்தார்கள். இன்று வரை அவர்களின் அறைகூவல் அப்படியே நிலைத்திருக்கிறது. இன்று வரை அவர்களிடம் போட்டியிடும் தைரியம் யாருக்கும் வரவில்லை. எதிர்க்க வந்த அனைவரும் கடும் தோல்வியை கண்டனர். மேலும் இழிவடைந்து இவ்வுலகை விட்டு சென்றனர். இன்று வரை அவர்களின் இந்த அறிவு சார்ந்த அற்புதங்கள் திருக் குர்ஆனுக்கு அவர்கள் அரபியில் வழங்கிய விளக்கங்கள் என்ற வடிவில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இது சூரியனைப் போன்று அவர்களின் உண்மைக்கு சான்று பகர்ந்து வருகின்றது.
அல்லாஹ் தஆலா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு வழங்கிய அடையாளங்களின் இரண்டாவது அம்சம் துஆக்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதற்கான அடையாளம் ஆகும். இது ஆயிரக் கணக்கில் உள்ளது. அவர்கள் கூறுகின்றார்கள்:
"அரபி நூட்கள் எழுதி கொண்டிருக்கும்போது எனது துஆக்கள் எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று நான் அனுபவித்துப் பார்த்துள்ளேன். நான் ஒவ்வொரு வார்த்தைக்கும் துஆ செய்துள்ளேன். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக (ஏனென்றால அவர்களின் அடிச்சுவட்டில் தான் நான் தோன்றியுள்ளேன்) வேறு யாருக்கும் இவ்வளவு அதிகமாக துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காது. எனக்கு அவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். பத்தாயிரம் அல்லது இரண்டு இலட்சம் அல்லது எத்தனை துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளனவென்று என்னால் சொல்ல முடியாது. இவற்றை முழு உலகமும் அறியும்.
இங்கு நான் உதாரணத்திற்காக ஒரு சம்பவத்தை கூறுகிறேன். இது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் துஆவின் அற்புதமாகும். மேலும் இது மரணித்தவர்களுக்கு இறைவன் உயிரூட்டுபவன் ஆவான் என்பதை எடுத்துக் காட்டும் சமபவமும் ஆகும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் 1907 ஆம் ஆண்டு நிக்ழ்ந்த இந்த அற்புதத்தைக் குறித்து கூறுகின்றார்கள்:
"தெற்கு ஹைதராபாதைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவரது மகன் அப்துல் கரீம் மதரசாவில் படித்து வருகின்றான். இறைவனின் நியதிக்கு ஏற்ப அவனை ஒரு கோட்டி நாய் கடித்துவிட்டது. அவருக்கு சிகிச்சைக்காக அவரை நாம் கஸோலி என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு சில தினங்களாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அவர் திரும்ப காதியானுக்கு வந்தார். சில நாட்களுக்குப் பிறகு கோட்டி நாய் கடித்ததால் ஏற்படும் பைத்தியத்திற்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட ஆரம்பித்தன. தண்ணீரைக் கொண்டு கண்டு பயப்பட ஆரம்பித்தார். மிகவும் பயங்கரமான நிலைக்கு ஆளானார். இன்னும் சில மணி நேரத்தில் இந்த பையன் இரண்டு போவான் என்றே எல்லாரும் கருதினார். பாவம். அந்த பையனை போர்டிங்கிலிருந்து வெளியே தனி அறையில் மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக வைத்தனர். கஸோலியின் மருத்துவர்களுக்கு தந்தி அனுப்பப்பட்டது. இதற்கு ஏதேனும் மருத்துவம் இருக்கிறதா? என்று கேட்டு அனுப்பப்பட்டது. இனி இதற்கு எவ்வித மருத்துவமும் இல்லை என்று அங்கிருந்து பதில் வந்தது. ஆனால் இந்த ஏழை மற்றும் தான் வீட்டிவிட்டு தனியாக வாழ்ந்து வரும் இந்த சிறுவனுக்காக என் உள்ளத்தில் அதிக கவனம் ஏற்பட்டது. அவருக்காக துஆ செய்யுமாறு என் நண்பர்களுக்கு அதிகமாக வலியுறுத்தினார். ஏனென்றால் ஏழ்மையில் அந்த நிலையில் அந்த சிறுவன் மிகவும் கருணைக்குரியவனாக இருந்தான். அவன் இறந்து விட்டால் எதிரிகளின் ஏளனத்திற்கும் காரணமாக அமையலாம் என்று அச்சமும் ஏற்பட்டது. அப்போது என் உள்ளம் அவருக்கான அதிக வேதனையில் மூழ்கியது. இதனால் அசாதாரண முறையில் கவனம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட எண்ணம் சுயமாக ஏற்படுவதில்லை மாறாக அல்லாஹ்வின் புறமிருந்து வழங்கப்படுகிறது. அவ்வாறு ஏற்படுகின்ற எண்ணத்தால் விளையும் விளைவுகள் அல்லாஹ்வின் கட்டளையாள் இறந்தவர் கூட உயிர் பெற்றெழுந்துவிடுகின்றார். அவருக்காக இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும் நிலை ஏற்பட்டது. அந்த கவனம் அதன் எல்லையை அடைந்தது. வேதனையானது எனது உள்ளத்தை முழுமையாக ஆட்கொண்டது. ஏறக்குறைய மரணித்தே போன அந்த நோயுற்ற சிறுவனிடம் எனது ஈடுபாட்டின் விளைவு தென்பட ஆரம்பித்தது. தண்ணீரைக் கண்டு பயந்தும் ஒளியைக் கண்டதும் ஓடியும் கொண்டிருந்த சிறுவன் இப்போது திடீரென்று குணமடையத் தொடங்கினான். இப்போது எனக்கு தண்ணீரைக் கண்டு அச்சம் ஏற்படுவதில்லை என்றான். அவனுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது எந்த அச்சமும் இன்றி அவன் தண்ணீர் கிக் குடித்தான். அவன் தண்ணீரால் ஒலுவும் செய்து தொழுதான். இரவு முழுதும் நன்றாக தூங்கினான். அச்சதிற்குரிய நிலையும் மிருகம் போன்ற நிலையும் மாறியது. கொஞ்ச நாளிலேயே அவர் முழுவதுமாக குணமடைந்தார். அவருக்கு ஏற்பட்ட பைத்தியத்திற்கான அறிகுறியானது அவரை மரணமடையச் செய்வதற்காக வரவில்லை மாறாக இறைவனின் அடையாளம் நிகழ வேண்டும் என்பதற்காக தோன்றியதாகும். ஒருவரை கோட்டி நாய் கடித்து அவருக்கு பைத்தியம் பிடித்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தப்பின் அவர் உயிர் பெறுவது இது வரை உலகில் எங்கும் நிகழ்ந்ததே இல்லை என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
(தாரீக்கே அஹ்மதிய்யத் பாகம்;2 பக்கம்: 485,486)
அன்பிற்குரியவர்களே! மூன்றாவது வகையாக மாபெரும் முன்னறிவிப்புகள் என்ற வடிவில் இறைவன் அவர்களுக்கு வழங்கிய அடையாளங்களாகும். இது பற்றி அவர்கள் கூறுகின்றார்கள்:
"இன்றய தேதியாகிய 16 ஆம் ஜூலை 1906 வரை இறைவன் எனக்கு ஆதரவாக வழங்கிய அடையாளங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக எண்ணினால் அவை மூன்று இலட்சத்திற்கும் மேலாகும் என்று நான் இறைவன் மீது சத்தியம் செய்து கூறுகின்றேன். எனது சத்தியத்தை நம்பாதவருக்கு நான் இதற்கான அத்தாட்சியை வழங்க முடியும். சில வகை அடையாளங்களில் இறைவன் என்னை எல்லா தருணத்திலும் தான் வாக்குறுதிக்கு ஏற்ப எதிரிகளுடைய தீங்கிலிருந்து பாதுகாத்தான். சில வகையான அடையாளங்களில் இறைவன் தான் வாக்குறுதிக்கு ஏற்ப எல்லா நேரங்களிலும் எனது தேவைகளை பூர்த்தி செய்தான். இன்னும் சில வகையான அடையாளங்களில் இறைவன் "இன்னீ முஹீனுன் மன் அராத இஹானத்தக" என்ற தான் வாக்குறுதிக்கு ஏற்ப என் மீது தாக்குதல் கொடுத்தவர்களை இழிவு படுத்தினான். இன்னும் சில வகை அடையாளங்களில் என் மீது வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராக இறைவன் தன் வாக்குறுதிக்கு ஏற்ப வெற்றி வழங்கினான். இன்னும் சில வகையான அடையாளங்கள் நான் தோன்றிய பிறகு கடந்த காலத்தினால் ஏற்பட்டவையாகும். ஏனென்றால் இவ்வுலகம் உருவாகியதிலிருந்து இத்தனை நீண்ட காலம் எந்த ஒரு பொய்யருக்கும் கிடைத்ததே இல்லை. இன்னும் சில வகையான அடையாளங்கள் காலத்தின் எதிர்ப்பினால் உருவாகின்றன. அதாவது இக்காலகட்டமானது ஒரு இமாம் தோன்ற வேண்டும் என்ற அவசியத்தை ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் சில வகையான அடையாளங்கள் என் நண்பர்களுக்காக நான் செய்திட்ட துஆக்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதனால் வெளிப்பட்டவையாகும். இன்னும் சில வகையான அடையாளங்கள் எனது கடுமையான எதிரிகளுக்காக நான் செய்த பத்துஆக்களின் விளைவுகள் வெளிப்பட்டதன் அடிப்படையிலானவையாகும். இன்னும் சில வகையான அடையாளங்கள் நான் துஆ செய்ததால் சில பயங்கரமான நோயிலிருந்து சிலர் குணமடைந்ததாகும். அவர்கள் சுகமடைவார்கள் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இன்னும் சில வகையான அடையாளங்கள் எனது உண்மைத்துவத்திற்காக இறைவன் சில இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுத்தியதாகும். அவை வானம் மற்றும் பூமியில் தோன்றிய அடையாளங்களாகும். இன்னும் சில அடையாளங்கள் மிகவும் பிரசித்து பெற்ற சான்றோர்களுக்கு கனவுகளின் மூலம் காட்டப்பட்டவையாகும். அவர்கள் ஹஸ்ரத் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களை தம் கனவில் கண்டார்கள். ஒரு இலட்சம் முரீதுகளைக் கொண்ட சிந்து மகாணத்தைச் சேர்ந்த அறிவு மிகுந்த சான்றவர் மற்றும் சாச்டா(ன்) வைச் சேர்ந்த க்வாஜா குலாம் ஃபரீத் ஆகியவர்கள் கண்ட கனவு இதற்கு ஓர் உதாரணமாகும். மேலும் சில வகையான அடையாளங்கள் ஆயிரக் கணக்கானோர் தம் கனவில் இவர் ஓர் உண்மையாளர் என்றும் இவர் இறைவன் புறமிருந்து வந்தவரும் ஆவார் என்று கண்டதன் அடிப்படையில் என்னிடம் பைஅத் செய்ததாகும். சிலருடைய கனவில் ஹஸ்ரத் ரஸுல் (ஸல்) அவர்கள் தோன்றி உலகம் அழியப் போகிறது. இவர் இறைவனின் கடைசி கலீஃபாவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் ஆவார் என்று கூறியதாக கனவில் கண்டு என்னிடம் பைஅத் செய்தனர். இன்னும் சில வகையான அடையாளங்கள் நான் பிறப்பதற்கு முன் அல்லது நான் பெரியவன் ஆவதற்கு முன் சில சான்றோர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு நான் தான் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆவேன் என்று முன்னறிவிப்பு செய்ததாகும். நிஃமதுல்லாஹ் வலி மற்றும் லூதியானா ஜமால் பூரைச் சேர்ந்த மியா(ன்) குலாப் சா அவர்கள் கூறியது இதற்கு உதாரணமாகும்.
(ஹக்கீகத்துல் வஹீ பக்கம்: 64,68)
அல்லாஹ் தஆலா அவர்களுக்கு வழங்கிய நான்காவது அடையாளம் திருக்குர்ஆனின் நுட்பமான ஞானங்களாகும். ஏனென்றால் தூய்மையாக்கப்பட்டவரைத் தவிர வேறு யாருக்கும் திருக்குர்ஆன் ஞானங்கள் வழங்கப்படுவதில்லை. ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"எனது எதிரிகளும் திருக்குர்ஆனின் ஒரு அதிகாரத்திற்கு விளக்கம் எழுதட்டும். நானும் எழுதுகிறேன் பிறகு அவ்விரண்டிற்கும் மத்தியில் எது சிறந்தது என்று பாருங்கள் என்று பல முறை கூறியுள்ளேன். ஆனால் இதை எதிர் கொள்ள யாருக்கும் தைரியம் வரவில்லை."
இதன்படி இன்று வரை ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் விளக்கவுரைகள் அடங்கிய நூட்கள் ஹல்மிம் முபாரிஸ் ஹல்மிம் முபாரிஸ் (பதிலளிப்பவர் யாரும் உண்டா) என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறது.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் தஆலா ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை குறித்து கூறுகின்றான்; இந்த நபி எம்மை நோக்கி சில பொய்யான இல்ஹாம்களை இட்டுக் கட்டினால் அவரை நாம் எமது வலக்கரத்தால் பிடித்து அவரது உயிர் நாடியை தூண்டித்திருப்போம். உங்களில் யாரும் அவரை காப்பாற்றுபவர் இல்லை." (சூரா: அல்-ஹாக்கா)
இந்த வசனத்தின் கருத்திலிருந்து, பொய்யான இல்ஹாம்களை புனைந்து கூறி எந்த மனிதரும் வெற்றியை ஒரு போதும் பெறவே முடியாது என்று புறிகின்றது. எனவே ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் எந்த முன்னறிவிப்புகளை தமது உண்மைக்கு சான்றாக எடுத்துரைக்கின்றார்களோ அவை நிறைவேறியதன் அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்த வெற்றியும் அவர்களின் எதிரிகளுக்கு ஏற்பட்ட அவமானமும் இழிவும் அடைந்தது அவர்களின் உண்மைத்துவத்திற்கு ஏற்ற சான்றல்ல என்றால் வேறென்ன? ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்க்ளின் முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயினால் அவர்களின் எதிரிகள் மரணித்தார்கள்? மேலும் ஏன் அல்லாஹ் தஆலா அவர்களை காப்பாற்றினான்?
இது மட்டுமல்ல, அவர்கள் மீது கொலை வழக்குகள் தொடரப்பட்டன. எதிரிகள் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் இறைவன் அவர்களுக்கு இல்ஹாம் மூலம் இவ்வாறு அறிவித்தான்; "யஃசிமுகல்லாஹு வலவ் லம் யஃசிமுகன் நாஸு" இது தொடர்பாக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;
"பராஹீனே அஹ்மதிய்யா-வில் ஒரு முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. யஃசிமுகல்லாஹு மின் இன்திஹீ வலவ் யஃசிமுகன் நாஸு" அதாவது நீர் ஆபத்துகளிலிருந்து தப்ப வேண்டும் என்று மக்கள் விரும்பாவிட்டாலும் உம்மை எல்லா ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ்வே காப்பாற்றுவான். இது நான் யாரும் அறியாத மனிதனாக தன்னந்தனியே இருந்த நேரத்தின் முன்னறிவிப்பாகும். யாரும் என்னிடம் பைஅத்தும் செய்யவில்லை அவ்வாறே யாரும் என் மீது பகைமையும் கொள்ளவில்லை. அதன் பிறகு நான் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்று வாதம் புரிந்த பின் எல்லா மவ்லவிமார்களும் அவர்களைப் போன்றோர்களும் நெருப்பைப் போன்று ஆகிவிட்டார்கள். அந்த நாட்களில் டாக்டர் மார்டின் கிளார்க் என்ற ஒரு பாதிரி என் மீது கொலை வழக்கு தொடுத்தார். இந்த வழக்கிற்குப் பிறகு பஞ்சாபைச் சார்ந்த மவ்லவிகள் என் மீது இரத்த வெறியுடன் இருப்பதை நான் அறிந்து கொண்டேன். அவர்கள் என்னை ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை ஏசிப் பேசுகின்ற ஒரு கிறிஸ்தவ எதிரியை விட மோசமானவனாக கருதினார்கள். ஏனென்றால் சில மவ்லவிகள் இந்த வழக்கில் என்க்கு எதிராக பாதிரிகளுக்கு ஆதரவாகவும் சாட்சிகள் கூறினர். பாதிரிகள் வெற்றியடைய வேண்டும் என்று சிலர் கடும் பிரார்த்தனையில் கூட ஈடுபட்டனர். இறைவா! இந்தக் பாதிரிக்கு நீ உதவி செய் இவருக்கு வெற்றியை வழங்குவாயாக என்று சில பள்ளிவாசல்களில் அழுது அழுது துஆ செய்ததாக நான் நம்பகமான வழியில் கேள்விபட்டேன். ஆனால் எல்லா அறிந்த இறைவன் அவர்களின் எந்த வேண்டுதலையும் ஏற்கவில்லை. சாட்சிகள் சொன்னவர்கள் தம் சாட்சிகளில் வெற்றியடையவுமில்லை. அவ்வாறே துஆ செய்தவர்களின் துஆவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மார்க்கத்திற்கு ஆதரவளிக்கும் உலமாக்கள் இவர்களேயாவார்கள்! இவர்களுக்காகவே சமுதாயம் முழுவதும் கூச்சலிடுகின்றது. இவர்கள் எனக்கு தூக்கு தண்டனை வாங்கித் தருவதற்காக தம் எல்லா திட்டங்களின் மூலமும் கடுமையாக முயற்சி செய்தனர்.......................சமுதாயத்தின் எல்லா மவ்லவிகளும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் எனது உயிரைக் குடிக்கும் எதிரிகளானப் பின் நான் குற்றவாளி என்பதற்கு எழெட்டு சாட்சிகள் முன் இருந்து யார் என்னை இந்த எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றியது? என்ற கேள்வி இயல்பாகவே எழலாம்.இருபத்தைந்து வருடங்களுக்கு முன் உமது சமுதாயம் நீர் அழிய வேண்டும் என்று எதிர் பார்க்கும் உம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றாது ஆனால் நான் உம்மை பாதுகாப்பேன் என்று வாக்குறுதியளித்த அந்த இறைவனே என்னை காப்பாற்றினான். இன்றிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பராஹீனே அஹ்மதிய்யாவில் எழுதப்பட்டுள்ளது. "ஃபபர்ரஉஹுல்லாஹு மிம்மா காலூ வகான இன்தல்லாஹி வஜீஹா" அதாவது அவர் மீது சுமத்தப்பட்ட பழியை விட்டு இறைவன் அவரை விலக்கினான். மேலும் அவர் இறைவனின் பார்வையில் புனிதமானவர் ஆவார். (ஹக்கீகத்துல் வஹீ பக்கம் 231)
இவ்விடத்தில் நான் இன்னொன்றையும் கூற விரும்புகிறேன், அதாவது 1898 ஆம் ஆண்டு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு ஓர் இல்ஹாம் வந்தது. "மே தெரி தப்லீக் கோ ஸமீன் கே கினாரோ தக் பஹுன்சாவூங்கா". அவர்கள் ஒரு வகையில் ஏழ்மையில் அறியப்படாத நிலையில் இருந்த சமயத்தில் இந்த இல்ஹாம் அவர்களுக்கு இறங்கியது. இது பற்றி அவர்கள் ஒரு கவிதையில் இவ்வாறு கூறுகின்றார்கள்;
"நான் ஏழையாகவும் யாரும் அறியாதவனாகவும் திறமைகளற்றவனாகவும் இருந்தேன், காதியான் எங்கிருக்கின்றது என்று கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது."
இன்று அவர்களின் தப்லீக் காதியான், பஞ்சாப், பிறகு முழு இந்தியாவிலும் பரவி அதற்கு வெளியே உலகின் 206 நாடுகளில் பரவி விட்டது. இவ்வாறு அவர்களின் மகத்துவம் மிக்க அடையாளங்களையும் பிரகாசமான அடையாளங்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த இறை அமைப்பில் இணைந்து கொண்டிருக்கின்றனர். தீய உலமாக்கள் கூறுவது போன்று ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் நஊதுபில்லாஹ் ஒரு பொய்யர் என்றால் சூரத்துல் ஹாக்காவின் அந்த வசனத்தின் அடிப்படையில் உலகத்தின் 206 நாடுகளில் அவர்களின் செய்தி பரவுவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல இதே காதியானில் தோல்வியடைந்து யாருக்கும் தெரியாமல் போயிருக்க வேண்டும். ஆனால் ஒரு நபர் இறைவனின் இல்ஹாமைப் பெற்று நான் உமது தப்லீக்கை உலகத்தில் எல்லை வரை எட்ட வைப்பேன் என்று இறைவன் என்னிடம் கூறுகின்றான் என்கிறார். பிறகு நூறு ஆண்டுகள் கழித்து இறைவன் மிகவும் விமர்சனமாக முழு உலகிலும் அவரது தப்லீக்கை பரவச் செய்கின்றான். உலகின் எல்லா பகுதிகளில் வாழ்பவர்களும் நிற இன பாகுபாடின்றி எல்லோரும் அரபி மற்றும் அரபியல்லாத அனைவரும் ஏழையும், பணக்காரரும் படித்தவரும், அரசரும் ஆகிய அனைவரும் அவரை ஈமான் கொண்டு அவருக்காக துஆ செய்து வருகின்றனர்.
அல்ல்ஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வஅலா அப்திகல் மஸீஹில் மவ்வூதி வபாரிக் வஸல்லிம் இன்னக ஹமீதும் மஜீத்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்;
"நான் உண்மையாளன் என்று மிகவும் உறுதியுடன் வாதம் செய்து கூறுகின்றேன். இறைவனின் அருளால் இந்த மைதானத்தில் எனக்கே வெற்றி. எனது தொலைநோக்குப் பார்வையுடன் நான் பார்க்கும் போது முழு உலகமும் எனது உண்மையை எடுத்துக் கூறுவதை காண்கிறேன். நான் வெகு விரைவில் ஒரு மாபெரும் வெற்றியை அடையப் போகின்றேன். ஏனென்றால் எனது நாவுக்கு ஆதரவாக இன்னொரு நாவு பேசிக் கொண்டிருக்கிறது. எனது கைகளுக்கு வலிமை சேர்க்க இன்னொரு கரம் இயங்குகிறது. அதை உலகம் பார்க்கவில்லை ஆனால் நான் பார்க்கிறேன். என்னுள்ளே வானத்தின் ஓர் ஆன்மா பேசிக் கொண்டிருக்கிறது. அது எனது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் உயிரூட்டுகின்றது. வானத்தில் ஓர் எழுச்கியும் உத்வேகமும் உருவாகியுள்ளது. அது ஒரு பிடி மண்ணாக இருந்தவனை ஒரு சிலையாக எழுந்து நிற்க வைத்தது. தம் மீது தவ்பாவின் வாசல் அடைபடாதவர்கள் வெகு விரைவில் நான் என்னிலிருந்து சுயமாக உருவானவன் இல்லை என்பதை புறிந்து கொள்வார்கள். உண்மையாளரை அடையாளம் கண்டு கொள்ளாத கண்கள் ஒளியுடையவையா? வானத்தின் இந்த சப்தத்தை உணராதவர் உயிருள்ளவரா?
(இஸாலாயே அவ்ஹாம், ரூஹானி கஸாயின் பாகம் 3 பக்கம் 403)
அல்லாஹ் தஆலா உலகின் கண்களை திறப்பானாக. அவர்களுக்கு ஆன்மீக கண்களை நல்குவானாக. இதன் விளைவாக அவர்களுக்குள் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அற்புதமான அடையாளங்களும் ஆதாரங்களையும் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் உரிய சக்தியை வழங்குவானாக. ஏனென்றால் சூரியன் உதித்தப் பிறகும் அதன் ஒலி மற்றும் வெப்பத்திலிருந்து விலகியிருப்பது பெரிய பெரிய இழப்பை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும். இன்று இவ்வுலகம் இதில் தான் அகப்பட்டுள்ளது. அல்லாஹ் எல்லா வித ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பானாக. இஸ்லாத்தின் வெற்றி என்ற சூரியனை முழு உலகிலும் பிரகாசமடையச் செய்வானாக. ஆமீன்.
அன்பிற்குரியவர்களே! ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் அய்யதகுல்லாஹூ..) அவர்கள் கடந்த தினங்களில் செயல் சீர்திருத்தம் தொடர்பாக தொடர்ச்சியாக குத்பா நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் ஈமனை வலுவூட்டுவதற்காக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அடையாளங்களையும் அற்புதங்களையும் மீண்டும் மீண்டும் ஜமாஅத் மக்கள் முன் எடுத்துரைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் இறுதியில் ஹூஸூர் அவர்களின் சில மேற்கோள்களை வாசித்து என் சொற்பொழிவை முடிக்கிறேன். ஹுஸூர் கூறுகின்றார்கள்:
"முதல் சிகிச்சை தர்பிய்யத் கொடுத்து ஈமானை உறுதிப்படுத்துவது அவசியமாகும். இதற்காக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அடையாளங்கள், அவர்களுக்கு வந்த வஹீ, அவர்களுக்கு அல்லாஹ்வுடன் இருந்த தொடர்பு மேலும் அவர்களின் மூலமாக அவர்களை ஏற்றுக் கொண்டவர்களின் ஏற்பட்ட ஆன்மீகப் புரட்சி ஆகியவற்றை எடுத்துக் கூற வேண்டும். இதை மீண்டும் மீண்டும் தொடர்ந்து எடுத்துக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்."
பிறகு ஹுஸூர் கூறினார்கள்:
"நம்மிடமுள்ள இறை அடையாளங்கள் மற்றும் உயிருள்ள அற்புதங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலகத்திற்கு இறைவனின் இருப்பைக் காட்டுங்கள். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுடன் உள்ள அல்லாஹ்வின் செயல் பூர்வமான ஆதாரங்களை வைத்து மக்களின் உள்ளங்களை வெல்லுங்கள்."
பிறகு ஹுஸூர் கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற புத்தம் புதிய அடையாளங்கள் மற்றும் நம்முடன் இருக்கின்ற அல்லாஹ்வின் செயல் பூர்வமான சாட்சியங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுங்கள். ஆனால் பிறகு மீண்டும் அதே கருத்து தான் வருகின்றது உங்களுடைய நிலைகளையும் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள். ஜமாஅத்தின் செயல் திறனை உறுதி படுத்துங்கள். ஜமாஅத்தின் குழந்தைகள், பெண்கள், மற்றும் ஆண்களின் முன் மீண்டும் மீண்டும் இந்த கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்."
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அடையாளங்களையும் அற்புதங்களையும் ஹஸ்ரத் கலீஃபதுல் மஸீஹ் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப புரிந்து கொள்வதற்கும் நாம் நமது செயல் திறனை உறுதிப்படுத்துவதற்கும் இதன் மூலமாக உலகில் அவர்களின் உண்மைத்துவத்தை எடுத்துரைப்பதற்கும் அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் நல்வாய்ப்பு நல்குவானாக. ஆமீன்.
உரை (உருது மொழியில்) : மௌலானா முனீர் அஹ்மத் சாஹிப் காதிம்
Post a Comment