இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தன்னை இறைவனுடைய மகன் என்று கூறினார்களா...?

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தன்னை இறைவனுடைய மகன் என்று கூறியதாக எதிர்கள் ஆட்சேபனை செய்து வருகின்றனர். அவர்கள் வைக்கும் ஆட்சேபனை: 
இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்களைப் பற்றி வானம், பூமி இடிந்து விழப் பார்க்கின்றன. மேலும் "அந்த அவ்லிர்ரஹ்மானி வலதா. வத்தஹத ஷாஹிபத்தன் வலா வலதாஇறைவன் மகன்களை எடுத்துக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனரா? அவன் மனைவியை எடுத்துக் கொள்ளவில்லை, மகன்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. என்று அல்லாஹ் திருக்குரானில் கூறுகின்றான். ஆனால் அல்லாஹ் தன்னை நோக்கி கூறியதாக ஹக்கிகத்துல் வஹீ பக்கம் 86 இல் "அந்த மின்னி பி மன்ஸிலத்த வலதி" "நீ என்னுடைய மகனுடைய அந்தஸ்தில் இருக்கின்றாய்" என்று கூறுகின்றார். இப்படிப்பட்டவர் ஒரு இறைத்தூதராக இருக்க முடியுமா?இதுதான் இந்தப் எதிரிகள் வைக்கும் குற்றச்சாட்டு.
இதற்கான பதில்:
எதிரிகள் கருத்தில் இந்த ஆட்சேபனையை வைக்கிறார்களோ அந்த கருத்தில் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தன்னை இறைவனுடைய மகன் என்று எங்கும் குறிப்பிடவில்லை. இங்கு இறைவன் அவர்களை நோக்கி " என்னுடைய மகனுடைய அந்தஸ்தில் இருக்கின்றாய்" என்று குறிப்பிடுகிறான். மகனாக இருப்பதற்கும் மகனுடைய அந்தஸ்தில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. தன்னை இறைவனுடைய மகன் என்று குறிப்பிடாவிட்டாலும், இறைவனுடைய மகனுடைய அந்தஸ்தில் இருக்கின்றாய் என்று குறிப்பிட்டதனால் ஒரு வேளை இறைவனுக்கு மகன் உண்டு என்று இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுவதாக கூட சொல்ல வாய்ப்பிருக்கிறது. இதற்கு இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தெளிவான விளக்கத்தை, இந்த எதிரிகள் எந்த நூலிலிருந்து ஆட்சேபனை செய்கின்றார்களோ  அதே புத்தகத்தில் அதே பக்கத்தில் குறிப்பிடுகின்றார்கள்:

"நினைவில் கொள்ளுங்கள் இறைவன் மகன்களை விட்டும் தூயவன். அவனுக்கு எந்த இணையும் இல்லை. தன்னை இறைவன் என்றோ இறைவனுடைய மகன் என்றோ சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இங்கு என்னை நோக்கி கூறப்பட்டுள்ள இவ்வாக்கியம் (அந்த மின்னி பி மன்ஸிலத்த வலதி) என்பது உவமையாகவும், உருவகமாகவும் கூறப்பட்டுள்ளது.
இறைவன் திருக்குரானில் நபி (ஸல்) அவர்களின் கையை தன்னுடைய கையாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். "யதுல்லாஹி பஃவ்க்க ஐதீஹிம்" "அவர்களின் கரங்களின் மீது அல்லாஹ்வின் கரம் இருந்தது" (48:11)
மேலும் இறைவன் 
திருக்குரானில் "குல் யா இபாதல்லாஹி" என்பதற்கு பதிலாக "குல் யா இபாதி" என்றும் குறிப்பிடுகின்றான்" நபியே நீர் கூறுவீராக என்னுடைய (நபி (ஸல்) ) அடியார்களே மேலும் இறைவன் திருக்குரானில் ஃபதுக்குறுல்லாஹ க திக்றீக்கும் ஆபா அக்கும்" என்றும் குறிப்பிடுகின்றான்."
நபி (ஸல்) அவர்கள் சஹாப்பக்களிடம் பையத் (உடன்படிக்கை) வாங்கினார்கள். அந்த நிகழ்ச்சியைப் பற்றி அல்லா திருக்குரானில் 48 அதிகாரம் 11 வசனத்தில் குறிப்பிடுகின்றான் "அவர்களின் கரங்களின் மீதி அல்லாஹ்வின் கரம் இருந்தது". ஆனால் உடன்படிக்கை வாங்கும் போது நபி (ஸல்) அவர்கள் கரங்கள்தான் சஹாபாக்களின் கரங்களின் மேல் இருந்தது. தன்னுடைய கையை அல்லாஹ்வுடைய கை என்று இறைவன் கூறியதால் நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ் என்று வாதித்துவிட்டார்களா? இந்த வசனத்தை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தன்னை அல்லாஹ் என்று வாதித்து விட்டதாக எவராவது கூறுவார்களா? அல்லது இந்த எதிரிகள் தான் கூறுவார்களா? இந்தத் திருக்குர்ஆன் வசனம் உவமையாக கூறப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்களைப் பற்றி திருக்குரானில் 39 அதிகாரம் 54 வசனத்தில் வருகிறது "குல்யா இபாதி" நபியே நீர் கூறுவீராக் "என்னுடைய அடியார்களே". நாம் யார் என்றால் இறைவனுடைய அடியார்கள். ஆனால் இறைவன் திருக்குரானில் குறிப்பிடுகின்றான் நபியே நீர் கூறுவீராக! என்னுடைய அடியார்களே! என்று அதாவது நபி (ஸல்) அவர்களின் அடியார்கள் என்று, இது உவமையாக கூறப்பட்ட வசனம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த வசனத்தை வைத்து நபி (ஸல்) அவர்கள் தன்னை அல்லாஹ் என்று வாதித்து விட்டதாக எவராவது கூறத் துணிவாரா? அல்லது இந்தப் தான் கூறத் துணிவானா? இல்லை.
இறைவன் திருக்குரானில் குறிப்பிடுகின்றான், ஃபதுக்குறுல்லாஹ நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். எப்படி நினைவு கூறவேண்டும் என்றால்க திக்ரீகும் ஆபா அக்கும் உங்கள் முன்னோர்களை நினைவு கூறுவதுபோன்று, என்று வருகிறது. அப்படியன்றால் முன்னோர்களும், அல்லாஹ்வும் சமாமாகி விட்டார்களா? இல்லைஎன்றால் முன்னோர்கள் எல்லாம் அல்லாஹ்வாக மாறிவிட்டார்களா? (நவூதுபில்லாஹ்) இப்படி இந்த எதிரிகள் இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுப்பார்களா?
மேலும் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்.
இறைவனின் இந்தக் கலாமை விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் படியுங்கள். உவமை வடிவிலானவற்றை புரிந்து ஈமான கொள்ளுங்கள். மேலும் மகனை ஏற்ப்படுத்துவதை விட்டும் இறைவன் தூயவன் என்பதை உறுதி கொள்ளுங்கள். என்னைப் பற்றி தெளிவான இறையறிவிப்பு இதுவாகும். அது பராஹீனே அஹ்மதிய்யா என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குல் இன்னமா அன பஸருன் மிஸ்லுக்கும் யுஹா இலைஹி அன்னமா இலாஹுக்கும் இலாஹுன் வாஹித்" நீர் கூறுவீராக நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். மேலும் வணக்கத்திற்குரியவன் ஒருவன் மட்டும்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது. "வல் ஹைரு குல்லுஹூ பில் குர் ஆன்" மேலும் எல்லா நன்மையையும் திருக்குரானில் இருக்கிறது என்றும் கூறுவீராக.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தன்னை இறைவனுடைய மகன் என்று குறிப்பிடவில்லை என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.
வீடியோவாக கேட்க; https://www.youtube.com/watch?v=m6L7iv9XXto

1 comment:

  1. ஒருவருக்கு மகன் இருந்தாலோ அல்லது தேவைபட்டாலோ மட்டும் தான் மகனுடைய அந்தஸ்தை தருவதாக கூற முடியும்.
    எனக்கு பிடித்த ஒருவரை நான் இறைவன் அந்தஸ்தில் வைக்கிறேன் என்றால் உங்கள் கொள்கை படி அது ஷிர்க் ஆகாதே !! ஏனெனில் இறைவனாக வைப்பதும் இறைவன் அந்தஸ்து கொடுப்பதும் ஒன்றல்லவே !

    ReplyDelete

Powered by Blogger.