ஹஸ்ரத் மூஸா (அலை) உயிரோடு வானத்தில் உள்ளார்கள் என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) கூறினார்களா? உண்மை என்ன?

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மீது இவ்வாறும் ஆட்சேபனை செய்யப்படுகிறது அதாவது  இதோ மூசா இருக்கிறார்களே அவர் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட ஒரு இளைஞர் . அவர் இன்று வரைக்கும் ஹயாத்தாக இருக்கிறார் என்று அல்லாஹ்வே தன்னுடைய வேதத்தில் சொல்லிக்காட்டுகின்றான். மூஸா நபி வானத்தில் இன்றுவரை உயிருடன் இருக்கிறார் என்று நம்ப வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கடமையாக்கியிருக்கின்றான். அவர் இன்று வரை மௌத்தாகவில்லை. அவர் மையத்தில் ஒரு ஆள் இல்லை என்று மூஸா நபியைப் பற்றி அல்லாஹ் சொல்லுவதாக எழுதிவைத்திருக்கின்றார். இதை தொடர்ந்து இந்த எதிரிகள்  கூறுவது,. ஈசா நபி உயிரோடு இருப்பது ஷிர்க் என்று மிர்ஸா குலாம்  கூறுகின்றார். ஆனால் அவரே மூஸா நபி உயிரோடு இருப்பத்தாக சொல்கிறார். அவருடைய கூற்றின்படியே அவர் முஷ்ரிக்காக ஆகவில்லையா? இதுதான் ஆட்சேபனை...உண்மை என்ன....!

நூருல் ஹக் என்ற புத்தகத்தில் அறுபத்தி ஒன்பதாம் பக்கத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறியதை இவர் எடுத்துவைத்திருக்கிறார். இதற்க்கு அடுத்தபக்கத்தில் எழுபதாம் பக்கத்தில். கூறுகின்றார்கள். "மரணத்தை கொடுப்பது நிரூபிக்கப்பட்ட ஒரு விசயமாகும் என்பதையும். நிரந்தரமாக நடைபெற்று வரும் ஒன்று என்பதையும் இறைவனின் பழமையான சுன்னத்துகளை சார்ந்தது என்பதையும் நீர் அறிவீர். மரணமடையாத எந்த ஒரு ரசூலும் இல்லை. ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு முன் வந்த தூதர்கள் மரணமடைந்து விட்டார்கள்."
இங்கு இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுவதைப் பாருங்கள் மரணமடையாத எந்த ரசூலும் இல்லை. ஆக எல்லா நபிமார்களும் (மூசா (அலை) அவர்கள் உட்பட) மரணமடைந்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள் தொடர்ந்து கூறுகிறார்கள் ஈசா (அலை) அவர்களுக்கு முன்னால் வந்த தூதர்கள் மரணமடைந்து விட்டார்கள். ஈசா (அலை) அவர்களுக்கு முன்னால் வந்த தூதர் மூஸா (அலை) அவர்கள் ஆவார்கள். எனவே அவர்களும் மரணித்துவிட்டார்கள் என்றே இமாம் மஹ்தி (அலை)அவர்கள் கூறுகிறார்கள் 

இமாம் மஹ்தி (அலை) அவர்கள்  இமாமத்துல் புஷ்ரா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். "ஈசா (அலை)வர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்களா? இது ஒரு அநியாயமான பங்கீடாகும். எனவே நேர்மையோடு பேசுங்கள். நீதியோடு பேசுங்கள் அதுதான் தக்குவாக்கு மிகவும் நெருக்கமாகும். மேலும் எல்லா நபிமார்களும் வானத்தில் உயிரோடு இருக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கும்போது ஈசா (அலை) அவர்களுடைய ஹயாத்தில் மட்டும் என்ன சிறப்புத்தன்மை இருக்கிறது. அந்த ஈசா (அலை) குடிக்கின்றார்கள், உண்கின்றார்கள். மற்ற நபிமார்கள் குடிக்கவில்லை, உண்ணவில்லையா?

இன்னும் சொல்லப்போனால் மூஸா (அலை) அவர்களுடைய ஹயாத்தைப் பற்றி திருக்குரானுடைய ஆயத்துகளில் நிருபணமாகிறது. நீங்கள் திருக்குரானை படிக்கவில்லையா? அல்லாஹ் கூறுகின்றான். அவரை சந்திப்பது குறித்து நீர் ஐயம் கொள்ளவேண்டாம். மேலும் இந்த ஆயத்து மூசா (அலை) அவர்களுக்காக இறங்கிய என்பது உங்களுக்கு தெரியும். இது மூசா அவர்கள் ஹயாத்தாக இருக்கிறார்கள் என்பதற்கு தெளிவான சான்றாகும். ஏனென்றால் அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்த்திதிருக்கின்றார்கள். ஆனால் இறந்தவர்கள் உயிருள்ளவர்களை சந்திக்கமாட்டார்கள். ஆனால் இந்தமாதிரியான ஆயத்தை ஈசா (அலை) அவர்களுக்காக நீங்கள் திருக்குரானில் காண முடியாது. உண்மையில் ஈசா (அலை) அவர்களுடைய மரணத்தைப் பற்றி திருக்குரானில் பல்வேறு இடங்களில் நீங்கள் காணலாம். எனவே நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள் . நிச்சயமாக சிந்திக்கும் மக்களை அல்லாஹ் நேசிக்கின்றான். 
நபிமார்கள் அனைவருமே உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களில் யாருமே இறந்தவர்கள் இல்லை. மிஹ்ராஜ் இரவின் போது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த நபியினுடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்களுமே உயிருடன் இருந்தார்கள். அப்படி இருக்கும் போது ஈசா (அலை) அவர்களின் வாழ்க்கையில் மட்டும் என்ன வினோதமான விஷயம் இருக்கிறது. மற்ற நபிமார்களிடம் இல்லாதது.முழு இஸ்லாமிய சமுதாயமும் ஈசா (அலை) அவர்கள் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் இறுதிகாலத்தில் அவரே (ஈசா (அலை) ) வானத்திலிருந்து இறங்கிவருவார்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்த நம்பிக்கை தவறானது என்பதை எடுத்துக்காட்டுவதற்க்காக இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களைப் பற்றி இறைவன் திருக்குரானில் கூறும் இந்த வசனத்தை எடுத்து வைக்கிறார்கள். இது திருக்குரானில் இருக்கும் வசனம் என்பதை இந்தப் எதிரிகள் அறியாமலில்லை. இந்தப் எதிரிகள் இந்த வசனத்திற்கு விளக்கம் தர வேண்டும். மிஹ்ராஜ் சம்பவம் என்பது ஒரு ஆத்மீக (கனவு) காட்சியாகும். இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.
நாம் உமக்கு காண்பித்த (மிஹ்ராஜின் போது) கனவு காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும், மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. (இங்கு (ருஹ்யா) கனவு என்றே வருகிறது.)
இந்த திருக்குர்ஆன் வசனத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட மிஹ்ராஜ் பயணம் ஒரு கனவு காட்சி என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இமாம் மஹ்தி (அலை) அவர்கள், மூசா (அலை) அவர்களைப் பற்றி கூறியது ஆத்மீக மான முறையில் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றே கூறுகின்றார்கள். அவர்கள் கூறுகிறார்கள் எல்லா நபிமார்களுமே வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது எல்லா நபிமார்களையுமே சந்தித்தார்கள். எனவே இந்தப் எதிரிகள் சுயவிளக்கம் கொடுக்கக்கூடாது. ஒருவர் ஒரு விஷயத்தைக் கூறும்போது அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்று பார்க்கவேண்டும். இப்படித்தானே ஒரு சஹாபி தன்னை எதிர் கொண்ட ஒரு காபிர் கலிமா கூறிய பின்னும் அவரைக் கொன்றுவிட்டார். அதற்க்கு அவர் கூறிய காரணம் அவர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொய்யாகவே கலிமா சொன்னானார் என்பதாகும். இந்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் கோபமுற்று, அந்த சஹாபியிடம் "நீர் அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா? அவர் உச்சரித்த கலிமா உமக்கெதிராக மறுமை நாளில் உமக்கெதிராக சாட்சியம் கூறும்போது என்ன பதில் அளிப்பீர்?' என்று கேட்டார்கள். இதை இந்தப் எதிரிகள் புரிந்துகொள்ளவேண்டும். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தமாதிரியான ஆயத்தை ஈசா (அலை) அவர்களுக்காக நீங்கள் திருக்குரானில் பார்க்கமுடியாது. அவர்களின் இந்தக் கூற்றிலிருந்து ஈசா (அலை) அவர்களின் மரணத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவர்கள் இந்த வசனத்தை எடுத்து வைத்தார்கள்.
மௌலவி அப்துல்ஹக் முகத்தஸ் தெஹ்லவி (அவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக) அவர் ஒரு முகத்தஸ் கூறிய கூற்றை எடுத்துக் கூறுகின்றார்.
"ஒருவர் முஸ்லிமாக இருந்து கொண்டு ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் ஹயாத்தைவிட இன்னொரு நபியின் ஹயாத்தை உறுதிமிக்கதாக கருதினால் அவர் இஸ்லாத்தின் வட்டத்தில் இருந்தே வெளியேறிவிடுகின்றார்."

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்கள் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பினால் மேற்கூறப்பட்ட விஷயங்களை எடுத்துச் சொல்வார்களா என்பதை இவ்வாறு ஆட்சேபனை செய்பவர்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.

No comments

Powered by Blogger.