ஈசா(அலை) அவர்களின் கபர் பெலாதே ஷாம் (ஷாம் தேசம்) இல் இருப்பதாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறிய கூற்றின் பின்னனி என்ன?

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மீது எதிரிகள் இவ்வாறும் ஆட்சேபனை செய்கின்றார்கள்,அதாவது, ஈசா(அலை) அவர்களின் கபர் பெலாதே ஷாம் (ஷாம் தேசம்) இல் இருப்பதாக இதமாவுல்ஹுஜ்ஜா என்ற நூலில் குறிப்பிடுகின்றார். கிஸ்தி நூஹ் என்ற புத்தகத்தில் 24 ஆம் பக்கத்தில் ஈசா (அலை) அவர்களின் கபர் காஷ்மீரில் இருப்பதாகக் கூறுகின்றார். ஈசா (அலை) அவர்களுக்கு இரண்டு கபர் இருக்கின்றதா? என்று கிண்டல் செய்கின்றார்கள்.
இவர்கள் எடுத்துவைக்கும் ஆட்சேபனைகள் அனைத்தும், கேரளா ஜமாத்தே இஸ்லாமி அமைப்பை சார்ந்தவர்கள் அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்திற்கு எதிராக எழுப்பிய குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் கேரளா அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பாக பலமுறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களும்  அதைப்பற்றி எதுவும் விசாரிக்காமல் அந்த ஆட்சேபனைகளை அப்படியே எடுத்து வைத்து வருகின்றனர். இது முனாபிக்குகளின் செயல் ஆகும். இனி இந்த ஆட்சேபனைக்குரிய விளக்கத்தைப் பார்ப்போம்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சத்பஜன் பக்கம் 164 இன் அடிக்குறிப்பை தொடர்ந்து பக்கம் 309 இல் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் :
ஷாம் தேசத்தில் ஈசாவின் கபர், வணக்கம் குறிப்பிட்ட தேதிகளில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் ஆண்டுதோறும் அந்த கபரில் ஒன்று கூடுகின்றனர். எனவே இதிலிருந்து "லஹ்னல்லாஹு யஹூத வன் ந்ஸாரா இத்தகத குபூர அன்பியாவுஹும் மசாஜிதன்" யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் இறைவன் சாபமிடுவானாக. அவர்கள் தங்களுக்கு வந்த நபிமார்களின் கபர்களை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டனர். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் மூலம் இந்தக் கபர் ஈசா(அலை) அவர்களுடைய கபர் தான் என நிரூபணமாகிறது. அதில் அவர் காயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார்.
.(அசல் பக்கம் கீழே)
இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஷாம் தேசத்தில் உள்ள கல்லறை ஈசா (அலை) அவர்கள் காயப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள கல்லறை என்று குறிப்பிடுகின்றார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்தார்கள். அங்கு அவர்கள் 120 வயது வரை வாழ்ந்து இயற்க்கை மரணம் அடைந்தார்கள். நாத்திகர்கள் எப்படியாவது ஆட்சேபனை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்குரானைப் படிக்கிறார்களோ அதைப் போன்றுதான் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் நூலினை படிக்கும் இவர்கள் ஆட்சேபனை கிளப்பவேண்டும் என்ற நோக்கத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் எழுதிய நூல்களைப் படித்திருக்கின்றார்கள். இறையச்சமற்றவர்கள் எந்தப் பண்பைக் கொண்டிருக்கிறார்களோ அந்தப் பண்பைத்தான் இவர்களும் கொண்டுள்ளனர் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

No comments

Powered by Blogger.