பராஹீனே அஹ்மதிய்யா நூல் 50 பாகங்கள் எழுதுவதற்கு பதிலாக 5 பாகங்கள் எழுதி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு எழுதியும் பேசியும் வருகின்றனர் அதாவது, மிர்சா சாஹிப் 1879 ஆம் ஆண்டு இஸ்லாத்தின் உண்மை துவத்தை நிரூபிப்பதற்காக அவர்கள் இறைவன் புறமிருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளார்கள் என்று அறிவித்தார்கள். இந்த நோக்கத்திற்காக பராஹீனே அஹ்மதியா என்ற புத்தகத்தை ஐம்பது பாகங்களாக எழுத எண்ணினார்கள். மிர்சா சாஹிப் ஏழ்மையானவர் என்பதால் முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் வசதி வாய்ந்தவர்கள் மிர்சா சாஹிப் அவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்றும் புத்தகத்திற்காக முற்பணம் செலுத்தினால் புத்தகம் அச்சு அடிக்க அடிக்க அவர்களுக்கு அனுப்பி விடப்படும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். (மஜ்முஆ இஷ்திஹாரஆத் பாகம் 1 பக்கம் 18 ,19)
மேலும் எதிரிகள் இவ்வாறு கூறுகின்றனர், நாலாபுறம் இருந்து முஸ்லிம்கள் பணம் அனுப்பத் தொடங்கி விட்டனர். அடுத்து நான்கு ஆண்டுகளில் நான்கு பாகங்கள் வெளியிட்ட பிறகு மிர்ஸா சாஹிபிற்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. ஐம்பது பாகங்கள் என்றால், எஞ்சியுள்ள வாழ்க்கை புத்தகம் எழுதி அச்சடித்து கொடுப்பதிலேயே கழிந்துவிடும். ஏனைய நண்பர்களிடமிருந்து முன்பணம் பெறப்பட்டு விட்டது. வருமானத்தின் வாசலோ மூடிவிட்டது. தற்போது புத்தகங்கள் அச்சடித்து வெளியிட வேண்டும். ஆக நான்கு பாகங்களுக்கு பிறகு பராஹீன அஹ்மதிய்யா எழுதுவதும், அச்சடிப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. முன்பணம் செலுத்தி வாங்குபவர்களின் எண்ணற்ற எதிர்ப்புகள் இருந்தும்கூட அடுத்து 23 வருடங்கள் 80 மற்ற புத்தகங்களை எழுதி மிர்ஸா சாஹிப் விற்றுள்ளார். இறுதியில் பராஹீனே அஹ்மதிய்யாவின் ஐந்தாவது பாகம் 23 வருடத்திற்கு பிறகு வெளிவந்தது. (அஹ்மதியா ஜமாஅத் உடைய தலைமை அலுவலகம் லண்டனிலிருந்து வெளிவந்த மிர்சா சாஹிப்புடைய 80 புத்தகங்களின் தொகுப்பான ரூஹானி கஜாயினை பாருங்கள்)
எதிரிகள் ஏளனம் செய்தவாறு இவ்வாறு கூறுகின்றனர், இவ்விஷயம் (மிர்சா சாஹிப் உடைய) முரண்பாட்டின் உச்சகட்டமா அல்லது மிர்சா சாஹிபின் தூதுத்துவத்தின் மகத்துவமா?
பராஹீனே அஹமதியாவின் முன்னுரையில் மிர்ஸா சாஹிப் கூறுகிறார்கள்:
முன்பு நான்கு பாகங்கள் வெளிவந்த அந்த பராஹீனே அஹ்மதிய்யா இதுவேயாகும். இதற்கு பிறகு ஒவ்வொரு பக்கத்தின் துவக்கத்திலும் பராஹீனே அஹ்மதிய்யா உடைய ஐந்தாவது பாகம் என்று எழுதப்பட்டது. முதலில் ஐம்பது பாகங்கள் எழுத எண்ணம் இருந்தது. ஆனால் ஐம்பதிலிருந்து ஐந்தில் போதும் என்ற மனம் நிறைவு வந்தது. மேலும் 50 மற்றும் 5 இல் வெறும் ஒரு புள்ளி (சுளி) வேற்றுமை தான். ஆகையால் ஐந்தில் அந்த வாக்குறுதி நிறைவேறிவிட்டது.
(ரூஹனி கஜாயின் பாகம்-21 பக்கம் 9)
சுப்ஹானல்லாஹ் எப்படிப்பட்ட கணிப்பு. 50 உடைய வாக்குறுதியும் நிறைவேறிவிட்டது பணமும் செரிமானம் ஆக்கப்பட்டது. இதுவா மிர்சா சாஹிப்புடைய நபித்துவம் மற்றும் நேர்மை? புள்ளிகளை (சுளியை) மாற்றுவது என்பது காதியானிகளின் வேறுபட்ட அடையாளம் ஆகிவிட்டது.
எதிரிகள் தங்களுடைய இந்த குறிப்பில் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்மீது "வாக்கு மீறுதல்" மற்றும் "நம்பி ஒப்படைக்கப்பட்டதற்கு மாறு செய்தார்" என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். மேலும் 50 மற்றும் 5 பற்றியும் ஏளனம் செய்துள்ளார்கள்.
மேலே கூறப்பட்டுள்ள எதிரிகளின் குற்றச்சாட்டுகள் மற்றும் ஏளனத்திற்கான பதிலை நாம் கீழே காணலாம்
வாக்கு மீறுதல்
வாக்குறுதி மீறல் தொடர்பாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் உண்மையிலேயே பராஹீனே அஹ்மதிய்யா என்ற பெயரைக் கொண்ட புத்தகத்தில் 300 ஆதாரங்கள் எழுத எண்ணினார்கள். ஆனால் நான்கு பாகங்கள் எழுதி முடித்ததும் இறைவன் அன்னாரை (நபியாக) நியமனம் செய்து எழுதும் விஷயத்தை விட மிகப்பெரிய பணியின் பக்கம் அன்னாரின் கவனத்தை திருப்பினான். ஆகையால் நிர்பந்தத்திற்கு ஆளாகி அன்னார் பராஹீனே அஹ்மதிய்யா எழுதுவதை கைவிட வேண்டியதாயிற்று. சூழ்நிலைகள் மாறும்போது வாக்குறுதியும் மாறிவிடும் என்ற விஷயம் இஸ்லாமியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
சூழ்நிலைகளின் மாற்றத்தை பற்றி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் பராஹீனே அஹ்மதிய்யா நான்காவது பாகத்தின் கடைசி பக்கத்தில் "ஹம் அவ்ர் ஹமாரி கிதாப்" (நாம் மற்றும் எமது புத்தகம்) என்ற தலைப்பில் தெளிவாக எழுதியுள்ளார்கள் அதாவது:.
"ஆரம்பத்தில் இந்தப் புத்தகம் எழுதும்போது வேறு சூழ்நிலை இருந்தது. பிறகு இறைவனின் எதிர்பாராத தோற்றங்கள், மூஸாவிற்கு அறிவித்தது போன்று இந்த தாழ்மையுள்ள அடியானின் மீதும் செய்தியை அறிவித்தான். ஹஸ்ரத் இப்னு இம்ரானை போன்று இந்த எளியவன் தனது எண்ணங்களின் இருளில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன் என்பது முன்பு தெரியாதிருந்தது. ஒருமுறை மறைவிலிருந்து اني انا ربك என்ற சப்தம் வந்தது. மேலும் அறிவு மற்றும் எண்ணம் யூகிக்க முடியாத ரகசியங்கள் வெளிப்பட்டன. ஆக இனி இப்புத்தகத்தின் பொறுப்பாளர் மற்றும் ஏற்பாட்டாளர் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஹஸ்ரத் ரப்புல் ஆலமீன் ஆவான். மேலும் எந்த வகையில், எந்த அளவு வரை இதனை அடையச் செய்வான் என்பது தெரியாது. மேலும் உண்மை என்னவென்றால், எந்த அளவு அவன் நான்காம் பாகம் வரை இஸ்லாத்தின் உண்மைத்துவத்தின் ஒளிகளை வெளிப்படுத்தியுள்ளானோ, அதுவே நோக்கம் நிறைவேறுவதற்கு போதுமானதாக இருக்கின்றன.
(பராஹீனே அஹ்மதியா நான்காவது பாகம் ரூஹானி கஜாயின் பாகம்-1 கடைசி பக்கம்)
ஆக சூழ்நிலைகள் தற்போது மாறிவிட்டன. இறை விருப்பம் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் எண்ணத்தை ஒரு உயர்ந்த நோக்கத்தின் பால் திருப்பி விட்டது.
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு கனவின் காரணமாக ஹஜ் செய்ய குர்பானி விலங்குகளை தன்னுடன் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். ஆனால் ஹஜ்ஜிற்கு பதிலாக உம்ரா செய்ய நேர்ந்தது என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த ஒரு விஷயமாகும். அப்பொழுது அன்னார் (ஸல்) கூறினார்கள்:
لو استقبلت من امری ما استدبرت ما سقت الھدی معی
இந்த விவகாரத்தை குறித்து முன்பே நான் அறிந்திருந்தால் என்னுடன் குர்பானி விலங்குகளை கொண்டு வந்திருக்க மாட்டேன் (அதாவது சூழ்நிலைகளின் மாற்றத்தின் காரணத்தினால் கட்டாயத்திற்குள்ளாகி உம்ரா செய்வதே போதுமானதாயிற்று)
(மிஷ்காத், கிதாபுல் ஹஜ், பாப் கிஸ்ஸா ஹஜ்ஜதுல் விதா)
ஆக சூழ்நிலைகள் மாறும் போது நிகழ்ச்சிகளும் மாறிவிடும் என்ற விஷயம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக உயர்ந்த குறிக்கோளுக்காக தாழ்ந்த வாக்குறுதி அடிபட்டு போய்விடும்.
அன்னாரை ஒரு உயர்ந்த குறிக்கோளுக்காக நியமித்து இறைவன் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் நிலைகளை மாற்றிவிட்டான். ஆகையால் அன்னார் எதிர் பார்த்ததை போன்று பராஹீனே அஹ்மதிய்யாவும் அந்த சூழ்நிலையில் முழுமையடையவில்லை. ஆக இந்த விஷயத்தை வாக்குறுதி மீறுதல் என்று கூறுவது தவறாகும்.
300 ஆதாரங்களைப் பற்றி ஹூஸுர் அலைஹிஸ்ஸலாம் எழுதுகின்றார்கள்.
ஆரம்பத்தில் நான் இஸ்லாத்தின் உண்மையை நிரூபிப்பதற்காக 300 ஆதாரங்கள் பராஹீனே அஹ்மதியாவில் எழுத எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் இருவகையான ஆதாரங்கள் (இஸ்லாத்தின் உயர்ந்த போதனைகள் மற்றும் உயிருள்ள அற்புதங்கள்) ஆயிரக்கணக்கான அடையாளங்களின் பிரதிநிதிகள் ஆகும் என்பது நான் உற்று கவனித்தபோது அறிந்தேன். ஆக இறைவன் எனது உள்ளத்தை இந்த எண்ணத்திலிருந்து திருப்பி விட்டான். மேலும் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை எழுத எனக்கு திறந்த உள்ளத்தை வழங்கினான்.
(முன்னுரை பராஹீனே அஹ்மதிய்யா ஐந்தாவது பாகம் ரூஹானி கஸாயின் பாகம் 21)
மேலும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) இஸ்லாத்தின் உண்மைதுவம் தொடர்பாக இஸ்லாத்தின் உயர்ந்த மற்றும் முழுமையான போதனைகள் மற்றும் உயிருள்ள அற்புதங்கள் இவற்றைக்கொண்டு 80 க்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதினார்கள். மேலும் அந்த அனைத்து ஆதாரங்களுக்கும் விளக்கமும் அளித்தார்கள். ஆக அந்த எண்ணம் ஒரு சிறந்த முறையில் நிறைவேறியது.
மேலும் இதற்கு சான்றாக அறிவிப்பில் ஒரு சம்பவம் இவ்வாறு வருகின்றது,
عن مجاھد انّہ قالت الیھود لقریش اسئالوہ عن الرّوح وعن اصحاب الکھف وذی القرنین فسالوہ فقال ائتونی غداً اخبرکم ولم یستثن فابطا عنہ الوحی بضعۃ عشر یوماً حتی شق علیہ وکذبتہ قریش
ஒரு குரைஷ், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நாளை வாருங்கள் இதற்கான பதில் தருகின்றேன் என்று அன்னார் கூறினார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்ஷா அல்லாஹ் கூறவில்லை ஆனால் 10,15 நாட்கள் கழித்தும் இதனைப்பற்றி அன்னாருக்கு எந்த வஹியும் வரவில்லை. ஆகையால் அந்த குரைஷ் அன்னாரை பொய்ப்படுத்தினார். (அதாவது வாக்குறுதி மீறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைத்தார்) இந்த விஷயம் அன்னாருக்கு மிகுந்த சிரமத்தை தந்தது.
(தப்ஸீர் கமாலைன் பர் ஹாஷியா தப்ஸீர் ஜலாலைன் முஜ்தபாயி பக்கம் 241)
பல விளக்கவுரையாளர்கள் இந்த சம்பவத்தை நகல் செய்து ரசூல் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த சம்பவத்தின் போது இன்ஷா அல்லாஹ் கூறவில்லை ஆகையால் தான் இவ்வாறு நடந்தது என்று கூறுகின்றார்கள்.
இந்த சம்பவத்தின் உண்மை நிலை பற்றி நாம் விவாதிக்கப் போவதில்லை ஆனால் ஏனைய அஹ்மதி அல்லாத உலமாக்கள் இதை சரியானது என ஏற்றுக் கொள்கின்றார்கள். இப்போது அஹ்மதிய்யத்தின் எதிரிகள்(நஊதுபில்லாஹ்) மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாக்குறுதியை மீறி விட்டார்கள் என்று கூறுவார்களா? இது ஒருபோதும் வாக்குறுதி மீறுதல் அல்ல. ஏனென்றால் விஷயம் நிறைவேறுவது என்பது இறை விருப்பத்தை சார்ந்துள்ளது. எனவே பராஹீனே அஹ்மதிய்யாவை முழுமைப்படுத்துவதற்கான எண்ணத்தை வெளிப்படுத்துவதில் வாக்குறுதி மீறினார் என்ற குற்றச்சாட்டு ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் மீது எவ்வாறு எழ முடியும்?
ஒரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது;
ஹஸ்ரத் ஜிப்ராயீல் (அலை) ரசூலே கரீம் (ஸல்) அவர்களிடம் நான் இரவு கண்டிப்பாக வருவேன் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இரவு முடிவடைந்தது விடுகிறது ஆனால் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் வந்தபோது ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்
لقد کنت وعد تنی ان تلقانی البارحۃ قال اجل ولکنّا لا ندخل بیتا فیہ کلب ولا صورۃ
வாக்குறுதி கொடுத்து விட்டு ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு; வாக்குறுதி சரியாகத்தான் செய்திருந்தேன், ஆனால் எந்த வீட்டில் நாய் மற்றும் உருவங்கள் (அதாவது சிலை போன்றது) உள்ளதோ அங்கு நாம் நுழைவதில்லை என்று கூறினார்கள்.
(மிஷ்காத், பாப் அத்தஸாவீர்)
இப்போது எதிரிகள் ஹஸ்ரத் ஜிப்ராயீல் அலைஹிஸ்ஸலாம் மீது வாக்குறுதி மீறிய குற்றச்சாட்டை வைப்பார்களா?(நஊதுபில்லாஹ்)
உண்மை என்னவென்றால் இறை விருப்பப்படி புதிய சூழ்நிலை உருவாகி விட்டால் குறிப்பாக உயர்ந்த நோக்கத்திற்காக சூழ்நிலை மாறி விட்டால் அவர் மீது வாக்குறுதி மீறினார் என்ற குற்றச்சாட்டை வைப்பது அநியாயமாகும். ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் சூழ்நிலையை இறைவன் தன்னுடைய அருளினால் உயர்ந்த நோக்கத்திற்காக மாற்றினான்.
நம்பி ஒப்படைக்கப்பட்டதன் மீது மாறு செய்தல்
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்மீது எதிரிகள் "நம்பி ஒப்படைக்கப்பட்டதன் மீது மாறு செய்துவிட்டார்" என்ற தங்களுடைய தெட்டத்தெளிவான குற்றச்சாட்டுக்கு சான்றாக, "பாரஹீனே அஹ்மதிய்யா" என்ற நூலிற்காக மக்களிடமிருந்து பணம் பெற்றதை எடுத்து வைக்கின்றார்கள். எதிரிகள் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் மீது கொண்டுள்ள விரோதம் மற்றும் பகமையால் அபு லஹபை போன்று விளங்குகின்றனர்.
நபிமார்களின் எதிரிகளைப் போன்று ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் எதிரிகளும் தங்களது நாவை அசுத்தப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். பராஹீனே அஹ்மதிய்யாவின் பணம் பெறுதல் சம்பந்தமாக ஹஸ்ரத் மஸிஹ் (அலை) அவர்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியாது.
சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக பணத்தை திருப்பி ஒப்படைப்பதற்காக ஒரு நேர்மையான மற்றும் ஒப்படைக்கப்பட்டதற்கு மாறு செய்யாத மனிதர் என்ன செய்வாரோ அதே முறையைத்தான் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களும் கையாண்டார்கள். எவர்கள் தனது பணத் தொகையை திரும்ப பெற விரும்புகிறாரோ அவர்கள் பெற்றுக்கொண்ட புத்தகத்தை திருப்பி அனுப்பி தனது பணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று இரண்டு தடவைக்கும் மேலாக பத்திரிக்கையை வெளியிட்டார்கள்.
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் தன்னுடைய பத்திரிகையில் "பராஹீனே அஹ்மதிய்யா மற்றும் அதனை வாங்கியவர்கள்" என்ற தலைப்பின் கீழ் தெளிவாக எழுதுகிறார்கள்:
"வருகின்ற காலத்தில் தனது பணத்தொகையை நினைவு கூறி என்னைப் பற்றி புகார் செய்ய ஆயத்தமாக உள்ளவர்கள் அல்லது அவர்களின் உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றும் என்கின்ற மக்கள் தயவு கூறி எனக்கு அவர்களின் எண்ணத்தை பற்றி கடிதம் மூலம் தெரிவித்தால் அவர்களின் நகரத்திலிருந்து அல்லது அதன் அருகில் இருந்து எனது தோழர்கள் எவரையாவது 4 பாகங்களுக்குறிய பணத் தொகையை அவருக்கு திருப்பிக் கொடுக்க நியமனம் செய்து விடுகின்றேன். மேலும் இப்படிப்பட்ட மக்களின் தவறான பேச்சு தீய பெயர் கொண்டு அழைத்தல் இவற்றை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுகின்றேன். ஏனென்றால் கியாமத் நாள் அன்று எனது காரணமாக இவர்கள் தண்டிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை. மேலும் புத்தகம் வாங்க கூடியவர் மரணித்து விட்டால், அவர்களின் வாரிசுகளுக்கும் புத்தகம் கிடைக்கவில்லை என்ற நிலை வந்தால், அந்த வாரிசுகள் 4 நம்பிக்கைக்குரிய முஸ்லிம்களின் மூலம் மரணித்தவரின் உண்மையான வாரிசுகள் இவர்கள் தான் என்று கடிதத்தில் ஒப்புதல் வாங்கி எனக்கு அனுப்பி வைத்தால் மன நிம்மதியோடு அந்த பணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும்.
(தப்லீக் ரிஸாலாத் பாகம் 3 பக்கம் 35)
இதன் பிறகு என்ன நடந்தது? இது பற்றி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு எழுதுகின்றார்கள்:
"எவர்கள் பணத் தொகையை கொடுத்தார்களோ அவர்களில் பலர் ஏசவும் செய்தார்கள். மேலும் தனது பணத்தை திரும்பப் பெற்றும் கொண்டார்கள்.
(தீபாச்சா பராஹீனே அஹ்மதிய்யா பாகம் 5 பக்கம் 7 முதல் பதிப்பு)
நாம் இரண்டு முறை எவர்கள் பராஹீனே அஹ்மதிய்யாவுடைய தொகையை திருப்பி பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்களோ அவர்கள் எமது இரண்டு புத்தகங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுடைய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்தோம். எனவே இப்படிப்பட்ட மூடதனத்தை தன்னகத்தே கொண்டுள்ள அந்த மக்கள் புத்தகத்தை அனுப்பி பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டார்கள். மேலும் சிலர் புத்தகத்தை சீர்கேடு செய்து அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் நாம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டோம். இப்படிப்பட்ட கீழ்த்தரமான இயல்பை கொண்ட மக்களிடமிருந்து என்ன அகற்றியதற்கு இறைவனுக்கு நன்றி.
(அய்யாமே சுல்ஹ் ரூஹானி கஜாயின் பாகம் 14 பக்கம் 196)
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் வாழ்நாளில்; ஒருவர் பணத்தை திரும்ப கோரி அவருக்கு திருப்பி கொடுக்காமல் ஒருவர்கூட இருந்ததாக இல்லை என்பது உறுதியானதொன்றாகும். கீழ் தனமான இயல்பைக் கொண்ட மக்கள் அனைவருக்கும் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால் வெளிவந்த இந்த பத்திரிக்கையின் மீது அவர்களின் முன்பணம் திருப்பி கொடுக்கவில்லை என்று கூச்சலிட்டு இருப்பார்கள். எவராவது பணம் திரும்ப கோரி அவருக்கு தரப்படவில்லை என்று ஒரு ஆதாரத்தை கூட எதிரிகளால் காண்பிக்க இயலாது. ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் காலத்தில் கீழ்த்தரமான இயல்பைக் கொண்ட மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் பணத்தையும் வாங்கி விட்டு ஏசவும் செய்தார்கள். இப்போது எப்படிப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என்றால் பணம் ஒன்றும் கொடுக்க வில்லை ஆனால் ஏசுகின்றார்கள், பொய்யன் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றார்கள்.
இறுதியில் இதைக் கூறுவதும் அவசியமானதாகும், அதாவது உலகில் இருளில் பிறந்து இருளிலேயே மரணித்து விடுகின்ற பலர் இறைவனுடைய நபிமார்கள் மீது பண விவகாரங்களில் அவதூறுகளை எடுத்துக் கூறி வருவதுண்டு. ஹஸ்ரத் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் போர் பொருட்களை பிரித்துக் கொடுக்கும் விஷயத்தில் அவதூறு கூறப்பட்டது. இவ்வாறு அவதூறு கூறுபவர்களை பற்றி இறைவன் திருக்குர்ஆனில் தவ்பா 59வது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்;
وَمِنہُم مَّن یَّلمِزُکَ فِی الصَّدَقٰتِ
இவர்களில் சிலர் உன்மீது சத்கா சம்பந்தமான குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
இதுவே அவர்களின் முகங்களாக இருக்கின்றன;
நாம் அதனை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக இருக்கின்றோம்;
50 மற்றும் 5 க்கான குற்றச்சாட்டு
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் 5 ஐ 50க்கு சமமாக ஆக்கியது, தன் புறமிருந்து அல்ல மாறாக இறைவன் அறிவித்த கணக்கு ஆகும். புகாரி கிதாபு ஸலாத்தில் இவ்வாறு ஒரு அறிவிப்பு வருகிறது
فقال ھی خمس وھی خمسون
மிஃராஜ் இரவில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆலோசனையை பெற்று கடைசி முறையாக இறைவனிடத்து தொழுகைகளை குறைப்பதற்காக சென்ற போது, இறைவன் இந்த 5 ஐ பெற்றுக் கொள்ளுங்கள். இது 50 ஆகும் என்று கூறினான். மிஷ்காத் கிதாப் ஸ்ஸலாத்தில் மிஃராஜ் ஹதிஸின் வார்த்தைகள் இவ்வாறு வருகின்றன:
قال انھنّ خمس صلوٰت کل یوم و لیلۃ لکلّ صلوٰۃ عشر فذلک خمسون صلٰوۃ
மொழியாக்கம்: எல்லா இரவும் பகலும் இந்த ஐந்து தொழுகைகளே என இறைவன் கூறினான் மேலும் இதில் ஒவ்வொன்றும் பத்திற்கு சமமானதாகும். ஆக இவை ஐம்பது தொழுகைகள் ஆகிவிட்டன.
காதியானிகள் புள்ளிகளை (சுளிகளை) மாற்றுவதென்பது அவர்களின் வேறுபட்ட அடையாளம் ஆகும். மேலும் அவர்களுடைய நபியின் சுன்னதாக இருக்கின்ற போது தான் இவ்வாறு செய்கின்றனர் என சில எதிரிகள் கூறுகின்றனர். இது அவர்களுடைய பெரும் முட்டாள்தனமாகும்.
இது புள்ளி (சுளி) களை மாற்றுவது என்பது அல்ல மாறாக ஐம்பதின் அருள் மற்றும் பரக்கத்தை ஐந்தில் ஒன்றிணைப்பது என்பது தனி அடையாளமாகும். இது எங்களுடைய நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பரிசுத்த சுன்னத்தாகும். அதனைத்தான் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்பற்றியுள்ளார்கள்.
ஆக எதிரிகள் தமது வாதத்தில் பொய்யர்கள் என்பது நிரூபணம் ஆகி விட்டது அஹ்மதியா ஜமாத்தின் வளர்ச்சியை கண்டு எதிரிகளின் ஷைத்தான் பொய்யான மனநிறைவை அவனுக்கு கொடுக்கின்றான். ஏனென்றால் یُمَنِّیْھِمْ அவனை பின்பற்பவர்களுக்கு பொய்யான மனநிறைவே ஷைத்தான் தருகின்றான். இறைவன் கூறிய விஷயம் یَخْدَعُوْنَ اِلَّا اَنْفُسَھُمْ அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர் என்பது முற்றிலுமாக இவ்வாறான எதிரிகளின் மீது பொருந்துகிறது.
இறைவனுடைய அருள் மற்றும் கருணையால் இறைவனுடைய வாக்குறுதிக்கு ஏற்ப یَدْخُلُوْنَ فِی دِیْنِ اللّٰہِ اَفْوَاْجاً என்கின்ற காட்சியை காணும் அளவிற்கு அஹ்மதியா ஜமாத் வளர்ச்சிஅடைகிறது. மேலும் ஹஸ்ரத் மஸிஹ்(அலை)உடைய ஆடைகளைக் கொண்டு மன்னர்கள் பரக்கத் தேடுகிறார்கள். இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைத்துவம் உலக முழுவதும் சென்றடைந்து கொண்டிருக்கிறது. நல்லியல்பு கொண்ட மக்கள் இந்த இறை ஜமாஅத்தில் தன்னை இணைத்த வண்ணம் உள்ளனர்.
فالحمد للّٰہ ربّ العالمین
Post a Comment