புகாரியில் இல்லாத ஹதீஸை புகாரியில் இருப்பதாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் பொய் கூறினார்களா?
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் எதிரிகள் இவ்வாறும் அவர்கள் மீது ஆட்சேபனையை எழுப்புகிறார்கள், அதாவது:
ஷஹாதத்துல் குர்ஆனில் அவர் கூறுகின்றார். "புகாரி மே லிக்காஹே ஆஸ்மான் ஸே இஸ்பர் ஆவா ஜாயஹி ஹாதா கலீஃபத்துல்லாஹூல்மஹ்தியூ" புகாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது இறுதிகாலத்தில் வருபவர் பற்றி ஹாதா கலீஃபத்துல்லாஹுல் மஹ்தியூ (அல்லாஹ்வின் நேர் வழி காட்டப்பட்ட கலீபா ஆவார்) என வானத்திலிருந்து சப்தம் வரும்.
நான் வரும் போது எனக்கு சப்தம் கேட்டது என்று கூறுகின்றார். இவருக்கு கேட்டால் சரியாகுமா? நம்மளுக்கு அல்லவா கேட்கனும், மக்களுக்கு அல்லவா கேட்கணும் என்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். மற்றொரு குற்றச்சாட்டு இந்த ஹதீஸ் புகாரியில் இருப்பதாக கூறுகின்றார். ஆனால் இந்த ஹதீஸ் புகாரியில் இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுகின்றார். பொய்க் கூறுகின்றார். பொய்க் கூறுபவர் இறைத்தூதராக இருக்க முடியுமா?
எல்லா நபிமார்களையும் பொய்ப்படுத்தக்கூடியவர்கள் எந்த குணத்தைக் கொண்டிருந்தார்களோ அந்த குணத்தைத்தான் ஆட்சேபனை செய்யும் இவர்களும் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும். ஒவ்வொரு நபிமார்களுக்கும் இறைவன் வஹி இறக்கும் போது அவர்களுக்குத்தான் கேட்குமே தவிர மற்றவர்களுக்கு கேட்காது. ஹாதா கலீபத்துல்லாகுல் மஹதியு என்று வானத்திலிருந்து சப்தம் வரும் என்ற ஹதீஸை வைத்துக் கொண்டு இந்தப் பொய்யன் தனக்கு கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். இது ஈமானா? "ஈமான் பில் ஹைப்" மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வதுதான்(ஈமான்). இது இல்லாமல் இறைத்தூதர்களுக்கு இறங்கக்கூடிய வஹி உங்களுக்கு கேட்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் அது அறிவிளியுனுடைய எதிர்பார்ப்பு. வானத்திலிருந்து சப்தம் வரும் என்றால் அதனுடைய அர்த்தம் வஹி என்பதாகும்.
இவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்திருந்தால் இதேபோன்று கிண்டலடித்து நபி (ஸல்) அவர்களை மறுத்திருப்பார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வந்த வஹியை மக்களுக்கு முன்னால் எடுத்துக் கூறும்போது அந்த வஹி தனக்கு கேட்க வேண்டும் என்றுதான் அன்றும் கூறியிருப்பார்கள்.
ஹாதா கலீபத்துல்லஹில் மஹதியு என்ற ஹதீஸ் இல்லை என்று ஆட்சேபனை செய்பவர்கள் மறுக்கவில்லை. ஆனால் இந்த ஹதீஸ் புகாரியில் இருப்பதாகக் கூறுகின்றார் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். இது புகாரியில் இல்லை. முஸ்தத்ரிக் ஹாக்கிம் இல் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தவறுதலாக மறதியாக புகாரியில் இருப்பதாக எழுதிவிட்டார்கள். இறைத்தூதர்களுக்கு மறதி ஏற்படுமா? என்று வேறு ஆட்சேபனை செய்பவர்கள் கேட்கலாம் அதற்கும் நாம் பதில் கூறிவிடுகிறோம்.
திருக்குரானில் எங்கெல்லாம் மறதி என்ற சொல் வருகிறதோ அங்கெல்லாம் இறைத்தூதர்கள் வருகின்றார்கள். உதாரணமாக ஆதம் நபியைப் பற்றி வருகிறது "நசிய ஆதமு" ஆதம் நபி மறந்து விட்டார். மூஸா நபியைப் பற்றி வருகிறது "நசிய ஹூத்தஹுமா" அவர் தன்னுடைய மீனை மறந்தது விட்டார். நபி (ஸல்) அவர்கள் தன்னைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள் "நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் நீங்கள் எப்படி மறந்து விடுகின்றீர்களோ அதைப் போன்று நானும் மறந்து விடுகின்றேன். எனவே மறதி என்பது எல்லா நபிமார்களுக்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம்தான். இதை வைத்துக் கொண்டு இமாம் மஹ்தி(அலை) அவர்களை நிராகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் நவூதுபில்லாஹ் ஆதம், மூசா, நபி (ஸல்) என்று எல்லா நபிமார்களையும் நிராகரிக்க வேண்டி வரும்.
இது மறதிதான் என்று நீங்கள் எப்படி கூறலாம். இமாம் மஹ்தி(அலை) அவர்கள் அல்லவா கூறவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இமாம் மஹ்தி(அலை) அவர்கள் எழுதிய நூல்களிலிருந்தே எடுத்து வைக்கின்றோம். இசாலே ஔஹாம் , ரூஹானி ஹசாயீன் தொகுதி மூன்று பக்கம் நானூற்றி ஆறாவது இல் கூறுகிறார்கள். "மஹதியைப் பற்றிய செய்திகள் பலவீனத்தை கொண்டவையாக உள்ளன. எனவேதான் ஹதீஸ்களின் இரு இமாம்களும்( புகாரி, முஸ்லிம்) அவற்றை எடுக்கவில்லை" என்று கூறுகின்றார்கள். இதிலிருந்து இமாம மஹ்தி(அலை) அவர்கள் மறதியாக எழுதிவிட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆட்சேபனை செய்யும் இவர்கள் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீதுள்ள குரோத மனப்பான்மையின் காரணமாக இந்த மாதிரியான பொய்க் குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. தாம் பொய்க் கூறிவிட்டு மற்றவர்கள் போய்க் கூறுவதாகக் கூறும் இவர்கள் மறுமையில் இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? இவ்வாறு பொய் கூறுவோர்களுக்கு நாம் கூறும் பதில் இந்த உலகம் முடிந்த பிறகு மறுமை என்பது இருக்கிறது என்பதையும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு இந்தமாதிரியான பொய்க்குற்றசாட்டுகளை எழுதுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுரைக் கூறுகின்றோம். "லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்" பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக" என்ற இறைவசனத்தையும் இவர்களுக்கு பதிலாக கூறுகின்றோம்.
வீடியோ வாக கேட்க: https://www.youtube.com/watch?v=o8ZWyAFynIg
வீடியோ வாக கேட்க: https://www.youtube.com/watch?v=o8ZWyAFynIg
ஐயா முரப்பி...ஹாக்கிமில் இடம்பெறும் ஹாதா கலீஃபத்துல்லாஹில் மஹதி என்ற வானிலிருந்து வரும் சத்தம் வஹியா ?? நபிமார்களுக்கு மட்டும் தான் கேட்குமா !!!
ReplyDeleteஅதை தொடர்ந்து ஃப பாயிவு பைஅத் செய்யுங்கள் என்று வானில் இருந்து சத்தம் வருமாமே !! அதுவும் இல்ஹாம் தானா ?? மிர்ஸாவே மிர்ஸாவுக்கு பைஅத் செய்யனுமா ,,