ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) தன்னை இறைவன் என்று வாதித்தார்களா....?
ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் 565 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிடுகின்றார்.
"நான் ஒரு நாள் இல்லாமல் போய்விட்டேன். அல்லாஹ் எனக்குள் வந்துவிட்டான். அப்போது எனக்கு என்ன தோன்ற ஆரம்பித்ததென்றால். நான் தான் இந்த வானத்தைப் படைத்தேன். பூமியைப் படைத்தேன்."
இதை தொடர்ந்து எதிரிகள் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி விமர்சனம் செய்தவாறு, பாருங்கள் இவர் தன்னை இறைவனுடைய மகன் என்று மட்டும் சொல்லவில்லை, பிர் அவ்ன் எப்படி தன்னை இறைவன் என்று சொன்னானோ, அது போல இவர் தன்னை அல்லாஹ்வாகிவிட்டதாக சொல்கிறார். என்று இந்த எதிர்கள் கூறுகின்றனர்.
இதற்க்கு நம்முடைய முதல் பதில் "லஹ்னத்துல்லாகி அலல் காதிபீன்" பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக.
எதிரிகளிடம் யூத, கிருஸ்தவ கொள்கை முழுமையாக ஊடுருவிவிட்டது என்பதற்கு இது தெளிவான ஒரு சான்றாகும். ஏனென்றால் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் எழுதிய நூலிலிருந்து எத்தனை ஆட்சேபனைகளை இவர்கள் எடுத்துவைத்துள்ளார்களோ அவை அனைத்திற்கும் அதன் முன்பக்கத்திலோ அல்லது பின்பக்கத்திலோ அதற்க்கான விளக்கம் இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் மறைத்து விட்டு ஆட்சேபனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முழுமையாக எதையும் சொல்லாமல் வெட்டி விட்டு சொல்வது எதிரிகளின் வாடிக்கையாகிவிட்டது. இது யூத கிறிஸ்தவர்களுடைய பண்பாகும். ஏனென்றால் அவர்கள் கூறினார்கள். "லா தக்றபு ஸலாத்த" "தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள்" என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஏன் நீங்கள் தொழுகைக்கு செல்கிறீர்கள் என்று கேட்பார்கள். ஆனால் அந்த திருக்குர்ஆன் வசனத்தின் பின்னால் வரும் "வ அன்தும் சுகாரா" "நீங்கள் மயக்கமாக இருக்கும் நிலையில்" என்று தொடர்ந்து வரும் வசனத்தை மறைத்துவிடுவார்கள். அதுபோன்று தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது ஏன் தொழுகைக்கு செல்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதன் பிற்பகுதியில் வரும் "அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவே நிற்கின்றார்கள் பிறருக்கு தங்களை தொழுகையாளி என்று காண்பிப்பதற்காக நிற்கிறார்கள், மிக சொற்ப அளவே அன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதில்லை" என்ற சொற்களை மறைத்து விடுவார்கள். இவர்களைப் பற்றி இறைவன் திருக்குரானில் கூறும் போது அவர்கள் வேதத்தின் சில பாகங்களை மக்களுக்கு மத்தியில் எடுத்துவைத்து வேறு சில பாகங்களை மறைத்து விடுகிறார்கள் என்று கூறுகிறது. இந்த யூத, கிறிஸ்தவக் கொள்கை இன்று இந்த மூட முல்லாக்களிடம் வந்துவிட்டது.
இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலின் 565 பக்கத்தின் முந்தையபக்கத்தில் (564) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 'ரஅய்த்தனி ஃபில் மனாம்' 'எனக்கு கனவில் காட்டப்பட்டது'. இதிலிருந்து இமாம் மஹ்தி அவர்கள் தான் கண்ட கனவைப் பற்றிதான் இந்த எதிரிகள் எடுத்து வைக்கும் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்கள். கனவுக்கு நேரடி விளக்கம் கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. உதாரணமாக யூசுப் நபியைப் பற்றி திருக்குரானில் 12 வது அதிகாரம் 4 வது வசனத்தில் வருகிறது "இத் கால யூசுபு லி அபீஹி யா அபதி இன்னீ ற அய்த்து அஹத அஷர கவ்க்கபன் வஸ்ஷம்ஸ வல் கமர ற அய்த்துஹும் லி ஸாஜிதீன்"
'யூசுப் தன் தந்தையிடம் என் தந்தையே பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நிச்சயமாக நான் கண்டேன். எனக்கு அவை சஜ்தா (வணக்கம்) செய்தன."
சஜ்தா அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. 'லா இலாஹா இல்லல்லாஹ். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. இது திருக்குரானுடைய முஹ்கமாத் என்று சொல்லப்படக்கூடிய அடிப்படையான வசனம். இதைத்தான் யூசுப் நபி தன்னுடன் சிறையிலிருந்த இரு தோழர்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இந்த ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்த யூசுப் நபிதான் இந்த சூரியன், சந்திரன், நட்ச்சத்திரங்கள் தன்னை வணங்கியதாக குறிப்பிடுகின்றார்கள். இந்த வசனத்திலிருந்து யூசுப் நபி தன்னை அல்லாஹ் என்று வாதித்துவிட்டார்கள் பிரௌன் வாதம் செய்துவிட்டார்கள் என்று இந்தப் எதிர்கள் கூறுவார்களா? இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தான் கண்ட கனவைப் பற்றி கூறும்போது அதற்க்கு நேரடி விளக்கம் கொடுக்கும் இந்தப் எதிரிகள் யூசுப் நபி கண்ட கனவுக்கும் நேரடி விளக்கம் கொடுப்பார்களா?இவர்கள் யூசுப் நபி காலத்தில் இருந்திருந்தால் இதே பதிலைக் கூறி யூசுப் நபியையும் மறுத்திருப்பார்கள். வேறு வழியில்லாமல் இவர்கள் திருக்குர்ஆன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.சூரியன், சந்திரன், நட்ச்சத்திரங்கள் இவையெல்லாம் யாரை வணங்குகின்றன. அதைப் பற்றியும் இறைவன் திருக்குரானில் கூறுகின்றான் "அலம்தர அன்னல்லாஹா யுஸ்ஜுது லஹு மன பிஸ்ஸமாவாத்தி வமன் பில் லர்லி வஸ்ஷம்ஸூ வல் காமரு வ நஜ்மு வல் ஜிபாலு வ சஜ்ஜரு வத்தவாபு வ கஸீருன் மினன்னாஷ்" (22:18)நிச்சயமாக அல்லாஹ்வை வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்ச்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானோரும் வணங்குகின்றனர்.
அல்லாமா செய்து அப்துல் கனி அவர்கள் எழுதிய கனவு விளக்க நூலில் (மிஸ்ர் வெளியிட்டது). எவர் தன்னை கனவில் அல்லாஹ் வாக மாறிவிட்டதாக காண்பாரோ அவருக்கு அல்லாஹ் நேர் வழிகாட்டுவான் என்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தான் கண்ட கனவுக்கு அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆயினே கமாலாத்தே இஸ்லாம் என்ற நூலில் ஐநூற்றி அறுபத்தி ஆறாவது பக்கத்தில் கூறுகிறார்கள் என் உள்ளத்தில் போடப்பட்டது நான் பார்த்த அந்த படைத்தல் என்பது வானங்கள், பூமியினுடைய ஆதரவுகளை சுட்டிக்காட்டுகிறது.
நான் இந்த கனவுக்கு அத்வைதகொள்கைவுடையவர்களைப் போன்று நானே அல்லாஹ்வாகிவிட்டேன் என்று பொருள்கொடுக்கவில்லை. ஹலூலை (மனிதர்களுள் இறைவன் தோன்றுவான் என்ற கொள்கை உடையவர்கள்) போல அல்லாஹ் எனக்குள் வந்துவிட்டான் என்றும் நான் இதற்க்கு பொருள் கொடுக்கவில்லை. மாறாக இந்த கஷ்ஃப் புகாரியில் நஃபில் தொழுபவர்களின் இறை நெருக்கத்தை குறிக்கும் ஹதீஸிற்கு முற்றிலும் ஒத்ததாக இருக்கிறது." புகாரியில் வரும் ஹதீஸ் "நஃபில் தொழும் அடியான் என்னுடைய நெருக்கத்தில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றான் என்றால், நான் அவனை நேசிக்கத் துவங்குகிறேன். அப்பொழுது நான் அவன் கேட்கின்ற காதாக ஆகிவிடுகின்றேன். அவன் பார்க்கின்ற கண்களாகிவிடுகின்றேன். அவன் பிடிக்கின்ற கைகளாகிவிடுகின்றேன். அவன் நடக்கின்ற கால்களாகி விடுகின்றேன்." இந்த ஹதீஸிற்கு எதிரிகள் என்ன பொருளை தருவார்களோ அதே பொருள் தான் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் கஷ்ஃபின் பொருள் ஆகும்.
இமாம் மஹ்தி (அலை) அவர்களே தான் கண்ட கனவுக்கு விளக்கம் கொடுத்து விட்ட பிறகு இந்தப் எதிரிகள் ஆட்சேபனையை கிளப்பவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் அது தனது வயிற்றுப் பிளைப்பிற்கேயாகும் என்பது தெள்ளதெளிவே..!
வீடியோவாக கேட்க: https://www.youtube.com/watch?v=X2IeYYgfdjU
Post a Comment