அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமா? அல்லது அல்லாஹ் உருவாக்கிய இயக்கமா?

அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு.  இவர்களின் இந்த குற்றச்சாட்டு தஜ்ஜாலியத்திர்க்கான சிறந்த உதாரணமாகும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஹசரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கத்தைப்பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள்.
"நான் சிலுவையை உடைப்பதற்கும் பன்றியை கொள்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்." (பத்ஹே இஸ்லாம் பக்-18)
"கிறிஸ்தவர்களுடைய கடவுளை இனியாவது மரணிக்கச் செய்யுங்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவரை கடவுளாக்கிக் கொண்டிருப்பீர்கள்? இதற்க்கு ஒரு முடிவே இல்லையா? (இசாலே ஔகாம் பக் -469)
சிலுவை கொள்கை என்பது கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்களின் உயிரோடு ஒன்றிவிட்ட ஓன்று. அதனை தகர்க்க வந்துள்ளதாகக் கூறும் ஒருவர் அவர்களால் நியமிக்கப்பட்டவராகவோ, அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ எவ்வாறு இருந்திருக்க முடியும்?
மேலும் கிறிஸ்தவர்களுடைய கடவுளை மரணிக்கச் செய்ய வேண்டும் என்று கூறுபவர் எவ்வாறு ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்திருக்க முடியும்?

ஆங்கிலேய ஆட்சியின் போது கிருஸ்தவ பாதிரிமார்களை ஹசரத் அஹ்மத் (அலை) அவர்கள் தஜ்ஜால் என்று துணிந்து சொன்னார்கள். இத்தகைய ஒருவர் ஆங்கில அரசின் பிரதிநிதியாக எவ்வாறு இருந்திருக்க முடியும்?
கிருஸ்தவ தெய்வமான இயேசு இறந்துவிட்டதாக ஹசரத் அஹ்மத்(அலை௦ அப்போதிருந்தே கூறி வருகின்றார்கள். அதற்க்கு மாறாக இயேசு ஈசா நபி -அவர்கள் வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்று ஆட்சேபனை செய்யும் இந்த எதிரிகள் போன்ற பொய்யர்கள் அப்போதிருந்தே கூறிவருகின்றார்கள். இப்போது இங்கு எழுகின்ற கேள்வி, கிறிஸ்தவர்களான ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளின் கடவுள் இறந்து விட்டதாகக் கூறுகின்றவர் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களா? அல்லது அவர்களின் கடவுள் உயிருடன் வானத்தில் இருப்பதாக கூறும் இந்த எதிரிகளைப் போன்ற கயவர்கள் அவர்களின் ஆதரவாளர்களா?
மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள் காலத்தில், ஆங்கிலேய அரசிற்கு வாழ் பிடித்த அக்கால ஆலிம்சாக்கள் அஹ்மதியா இயக்கத்தை ஒழித்துக்கட்ட அந்த அரசிடமே ஆதரவு தேடினார்கள் இருபத்தோரு மௌலவிகள் கொண்ட ஒரு தூதுக்குழு ஆங்கில அரசிடம் இவ்வாறு முறையிட்டிருந்தது.
"இந்த அரசு அஹ்மதியா இயக்கத்தை நம்பக்கூடாது. இந்த அரசுக்கெதிராக அமைக்கப்பட்ட இந்த இயக்கத்தினால் அதிகமான கெடுதி இவ்வரசிர்க்கு ஏற்படும். (இஷா அத்து சுன்னா 12 பக் 168)
அந்தக் காலத்து ஆளிம்களால் ஆங்கில அரசிற்கு எதிராக அமைக்கப்பட்ட ஓர் இயக்கம் என்று வருணிக்கப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் இயக்கம் இந்தக் கால ஆலிம்களாலும் அவர்களுடைய வாலில் தொங்கிக்கொண்டிருப்பவர்களாலும் அந்த ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட இயக்கம் என்று கூறப்படுகிறது.  என்ன விந்தை இது! அஹ்மதியா முஸ்லிம் இயக்கம் முஸ்லிம்களிடையே பிளவை உண்டாக்குவதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்று மிகப் பெரும் அண்டப்புளுகுக்கு அஹ்மதியா ஜமாஅத் தெளிவான விளக்கம் கொடுத்து வருகிறது. இறையச்சமற்ற, திருக்குரானை வைத்து பிழைப்பு நடத்தும் பொய்யர்களுக்கு எல்லா இயக்கத்தின் மீதும் அவதூறு கூறுவதை தவிர வேறு வேலை இல்லை..ஆகவே ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல மாறாக இறைவன் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மூலமாக ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கேற்ப தோற்றிய இயக்கமே அஹ்மதிய்யா முஸ்லிம் இயக்கம், ஜமாஅத் ஆகும்.

1 comment:

Powered by Blogger.