காதியானுக்கு செல்வதே ஹஜ் ஆகும். ஹஜ் செய்ததற்கு போதுமானதாகும் என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) கூறினார்களா..!?
சிலர் இவ்வாறும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீது ஆட்சேபனை செய்கின்றார்கள் அதாவது அவர் தனது நூலாகிய "பைகாமே சுல்ஹ் 19 ஏப்ரல் 1933 இல் "காதியான் என்ற ஊருக்கு வருவது தான் ஹஜ் ஆகும். இன்று மக்காவில் செய்யப்படும் ஹஜ் வீணானதாகும். நோக்கம் நிறை வேறாததாகும்" என்று கூறினாராம், இதுதான் காதியானியின் கொள்கையும் ஆகுமாம்.
இன்னா லில்லாஹ்....! இது அபாண்டமான பொய் குற்றச்சாட்டாகும். இவ்வாறு எழுதி வருகின்ற, கூறி வருகின்ற இந்த எதிரிகள் துணிவிருந்தால் மக்காவில் செய்யப்படும் ஹஜ் வீணானதாகும் என்று எழுதப்பட்ட நூலை கொண்டு வந்து காட்டட்டும். இவர்களால் இதனை செய்ய முடியுமா....!? ஒரு போதும் இவர்களால் இதனை செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக நாம் தெரிவித்து கொள்கிறோம்.
இதற்கு நேர்மாறாக மக்காவுக்கு சென்று ஹஜ் செய்வதைப் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள், "எவர்மீது ஹஜ் கடமையாகிவிட்டதோ அவருக்கு எந்த தடையும் இல்லையென்றால் அவர் ஹஜ் செய்யட்டும்." (கிஷ்தி நூஹ் பக்கம் - 14)
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த எதிரிகள் குறிப்பாக மவ்லவிமார்கள் ஒரு பக்கம் "இந்த காதியானிகள் காஃபிர்கள் ஆகவே இவர்கள் மக்காவிற்கு ஹஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிக் கொள்கின்றனர். அதே சமயம் இவ்வாறும் ஆட்சேபனை செய்தும் வருகின்றனர். இவர்களின் இந்த மூடத்தனத்தை என்ன சொல்வது...!?
மக்காவில் செய்யப்படும் ஹஜ் வீணானதாகும் என்பது அஹ்மதி முஸ்லிம்களின் நம்பிக்கை என்றால் அவர்களுக்கு ஹஜ் செய்ய ஏன் தடைவிதிக்கப்பட வேண்டும்...? அஹ்மதி முஸ்லிம்களுக்கு ஹஜ் செய்ய மக்காவிற்கு செல்வதானால் தானே தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிரிகளே, குறிப்பாக மவ்லவிமார்களே..! நீங்கள் உங்களது கைகளினாலேயே உங்களது முகத்தில் கரியைப் பூசிக் கொண்டீர்களே...! பொய்யர்கள் பெற்ற கேவலத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.
இவர்கள் எழுதிய மற்றும் கூறி வருகின்ற எந்த ஆட்சேபனைகளுக்கும் இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. வெறும் பொய்யர்கள்தான். அதற்கும் எங்களது பதில்: அல்லாஹ் வானவர்கள், அனைத்து மக்கள் ஆகியோரின் சாபம் இவர்களுக்கு உண்டாவதே இத்தோகையருக்கான கூலி. (3:88)
Post a Comment