ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்து படுத்ததை பற்றிய ஆட்சேபனை...!
அடுத்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை எதிர்க்க வேண்டும் அவர்களை தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹஸ்ரத் ஃபாத்திமா நாயகி (ரலி) அவர்களை குறிப்பிட்டு தவறான நோக்கத்தை முன்வைத்தவாறு இவ்வாறு ஆட்சேபனை செய்கின்றார்கள் அதாவது "மார்க்கதரசி ஹஸ்ரத் ஃபாத்திமா அம்மையாரை பற்றி இக்கயவன் (நஊதுபில்லாஹ்) எழுதி வைத்துள்ளதை பாரீர். எனது தொடையில் ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தனது தலையை வைத்து இருந்தார்கள். மேலும் நான் அவர்களில் ஒருவன் என்று எனக்கு காண்பித்தார்கள். (எக் கல்தி கா இசாலா, ஹாஷியா பக்கம் - 11)
மேற்குறிப்பிட்ட நூலில் இப்படிப்பட்ட ஒரு சம்பவமே கூறப்படவில்லை. இந்த எதிரிகள் இந்த புத்தகத்தை படிக்கவே இல்லை, படிக்காமலேயே இவ்வாறு தவறான முறையில் ஆட்சேபனை செய்து வருகின்றார்கள் என்பது அப்பட்டமாகிறது.
மேலே எதிரிகள் கூறியுள்ள இந்த சம்பவம் ஒரு ஆன்மீக சம்பவமே, துஹ்ஃபா கோலடுவியா எனும் நூலில் இந்த ஆன்மீகக் காட்சியைப் பற்றி இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) கூறுகிறார்கள், "நான் ஓர் ஆன்மீகக் காட்சியில் (கஷ்ஃபில்) ஐந்து புனிதவான்கள் அதாவது ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்), ஹஸ்ரத் இமாம் ஹஸன் (ரலி), ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) ஹஸ்ரத் பாத்திமாதுஸ் சுஹ்ரா (ரலி), ஹஸ்ரத் அலி (ரலி) ஆகியோர்களை பாதி உணர்வில் கண்டேன். ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அன்பு நிறைந்த தாயாரைப் போன்று இந்த எளியவனுடைய தலையை தமது மடியில் வைத்தார்கள். (தொஹ்ஃபா கோலடுவியா பக்கம் 19)
இங்கு ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் ஹஸ்ரத் பாத்திமாவை தமது தாயாராக கனவில் கண்டார்கள். இந்த எதிரிகள் இங்கு கஷ்ஃப், அன்பு நிறைந்த தாயார் ஆகிய சொற்களையே வேண்டுமென்றே கூறாமல் மறைத்திருக்கிறார்கள். இது இவர்களுடைய கெட்ட எண்ணத்தை படம் பிடித்து காட்டுகிறது.
முஸ்லிம்களின் எல்லா பிரிவுகளும் அதிகமாக மதிப்பளிக்கும் ஹஸ்ரத் ஸையத் அப்துல் காதிர் ஜெய்லானி தமது ஓர் ஆன்மீகக் காட்சியில் (கஷ்ஃபில்) இவ்வாறு கூறுகிறார்கள்:
"நான் ஹஸ்ரத் ஆயிஷாவின் மடியில் இருக்கிறேன். முதலில் அவருடைய வலது மார்பிலிருந்து பால் நுகர்ந்தேன், பின்னர் இடது மார்பிலிருந்து பால் நுகர்ந்தேன். அப்போது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) வருகை தந்தார்கள். (கலாயிதுல் ஜவாஹிர் மனாகிபிஷ்ஷைக் அப்தில் காதிர் ஜெய்லானி பக்கம் - 57)
இதனை படிக்கும்போது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் மீது ஆட்சேபனை வைக்கும் இவர்களுக்கு இரத்தம் கொதிப்படைந்து நரம்பு முருக்கேறி ஏன் ஆத்திரம் ஏற்படுவதில்லை....!!? ஆகவே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை தவறானவராக பாமர மக்கள் மத்தியில் சித்தரித்து காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் இந்த எதிரிகள் இவ்வாறான கீழ்தரமான கெட்ட எண்ணங்களை கொண்ட ஆட்சேபனையை செய்து வருகின்றனர்.
Post a Comment