வாழ்வின் அறிகுறி

சென்னையைச் சேர்ந்த மிக நல்ல நண்பர் சேட் அப்துர்ரஹ்மான் மதராஸி அவரிடமிருந்து தந்தி ஒன்று வந்தது .அதில் அவருக்கு கடுமையான புற்றுநோய் பாதித்துள்ளதாக தெரிவித்திருந்தார் .அவர் முதல் தரமான நன்மை மிக்கவராக இருந்ததால் அவரின் நோய் பற்றி தெரிந்து மிகவும் வருத்தம் ஏற்பட்டது .காலை ஏறக்குறைய ஒன்பது மணி ,நான் கவலையிலும் துயரத்திலும் இருந்தேன் .திடீரென மெய்மறந்தேன். என் தலைகுனிந்து விட்டது .உடனே வல்ல இறைவனிடம் இருந்து "வாழ்வின் அறிகுறி" என வஹி இறங்கியது. அதன் பின்னர் 'நிலைமை நலமாக உள்ளது .கவலைக்கிடமில்லை' என ஒரு தந்தி வந்தது .

பின்னர் அவரது  நிலை ஆபத்தாக உள்ளது என  அவரது சகோதரர் சகோதரர் ஸாலிஹ்  முஹம்மது அவர்களின் கையால் எழுதப்பட்ட  கடிதம் வந்தது. அதாவது சேட் சாஹிபுக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி உள்ளது .அப்படிப்பட்டவருக்கு புற்றுநோய் வந்தால் குணமாவது ஏறக்குறைய இயலாத ஒன்றாகும் .எனவே மீண்டும் எனக்கு கவலை ஏற்பட்டது .கவலை எல்லையை அடைந்து விட்டது .

இந்த கவலைக்கு காரணம் நான்  சேட் அப்துர்ரஹ்மான்  சாஹிபை மிகவும் நல்லவராக கண்டுள்ளேன் .அவர்கள் நமது முதற்தரமான பற்றின் முன்மாதிரியை செயல்முறையில் காட்டியிருந்தார். முற்றிலும் உள்ளத்து நன்மையினால் நம்முடைய விருந்தினர் உணவுச் செலவுக்காக பல ஆயிரம் ரூபாய் தந்திருந்தார்கள் .அதில் இறை அன்பை தவிர அவர் எதனையும் நாடவில்லை.

அவர் எப்போதும் உண்மை மற்றும் நேர்மையின் மறு வடிவமாக திகழ்ந்தார். ஒவ்வொரு மாதமும்  பெரிய தொகை ஒன்று விருந்தினர் உணவு செலவுக்காக அனுப்பி வந்தார்கள். அவர் அன்பிலும் , பற்றிலும் மூழ்கியவராக இருந்து வந்தார்.

அவர்களுக்காக அதிகமாக துவா செய்ய வேண்டியது அவரின் உரிமையாக இருந்தது. அதனால் வழக்கத்திற்கு மாற்றமான முறையில் அவருக்காக துவா செய்வதற்கான தூண்டுதல் உள்ளத்தில் எழுந்தது .இரவு பகல் பாராது நான் மிகவும் கவனத்துடன் துவாவில் மூழ்கி இருந்தேன். அப்போது அல்லாஹ் வழக்கத்திற்கு மாற்றமான விளைவை காட்டினான்.அவ்வளவு ஆபத்தான நோயிலிருந்து ஷேக் அப்துர் ரஹ்மான் சாஹிபை காப்பாற்றினான் .ஆக,அவருக்கு புதிதாக உயிரளித்தான் .

எனவே அவர் தமது கடிதத்தில் எழுதுகிறார்கள் :  " இறைவன் உங்கள் துஆவால் பெரிய அற்புதம் ஒன்றை காட்டியுள்ளான் .இல்லையென்றால் வாழ்வு குறித்த எந்த நம்பிக்கையில் இருக்கவில்லை .அறுவை சிகிச்சைக்கு பின் புண் ஆறத்தொடங்கியது . அதற்கருகில் புது கட்டி ஒன்று தோன்றியது .அது மீண்டும் கவலையை ஏற்படுத்தியது  அது புற்றுநோய் கட்டி அல்ல என்று பின்னர் தெரிய வந்தது .பின்னர் சில மாதங்களுக்குப் பின் முற்றாக குணம் கிடைத்தது" 
**********
(ஹஸரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ் )அவர்களின் ஜும்ஆ உரையில் இருந்து-
8-9-2000)

No comments

Powered by Blogger.