இன்னீ முஹீனுன் மன் அராத இஹானத்தக்க

வாக்களிக்கப்பட்ட மஸீஹாக, இமாம் மஹ்தியாக திகழ்கின்ற ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை குறித்து பலர் பல்வேறு விதமான ஆட்சேபனைகளை கொண்டு எதிர்த்து வந்தனர். எதிர்த்தும் வருகின்றனர். அதே வரிசையில் அன்னாரை குறித்து மிகவும் கீழ்தரமான முறையில் ஆட்சேபனை செய்து வந்தவர்களில் பலர் அல்லாஹ்வின் பிடியில் பிடிக்கப்பட்டு இழிவாக்கப்பட்டு மக்களுக்கு ஒரு அடையாளமாக அல்லாஹ் அவர்களை ஆக்கினான். ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை இழிவாக பேசக்கூடியவர்களை குறித்து அல்லாஹ் அன்னவருக்கு அழித்த வாக்குறுதி ஒன்றை குறித்தும், அது எவ்வாறு வெளிப்பட்டது என்பதற்கு பல அடையாளங்கள் இருந்தாலும் அதில் ஒன்றை நாம் இங்கு குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு கூறினான்:

"இன்னீ முஹீனுன் மன் அராத இஹானத்தக்க"

"உன்னை இழிவுபடுத்த நாடுவோரை நான் இழிவுபடுத்துவேன் ." என்று ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை ) அவர்களிடம் அல்லாஹ் கூறினான் . இது நிறைவேறுவதை பலமுறை நாம் கண்டுள்ளோம் . 

இது நிறைவேறியதற்கான ஒரு சிறு உதாரணமாவது, வங்காளத்திலிருந்து யூனுஸ் அலி சாஹிப் எழுதுகிறார். நான் எங்கள் ஊரிலுள்ள ஹாஃபிஸ் இனாவுல் ஹக்கிற்கு உள்ளூர் MLA மற்றும் கிராம அதிகாரியின் முன்னிலையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமா அத்தின் பிரசுரங்களைக் கொடுத்தேன் . ஒரு நூலில் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின்  போட்டோவைப் பார்த்து கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். 

உங்கள் இமாம் மஹ்தியின்  வஃபாத் (அல்லாஹ் காப்பானாக ) கழிவறையில் ஏற்பட்டது என்றார். இந்த அவதூறைக் கேட்ட நான் உங்கள் முடிவு நல்லதாக இருக்காது என்றேன் . 

சில நாட்களுக்குப் பின்னர் இந்த தீய மௌலவி பள்ளிவாசலின் கழிவரையில் விபச்சாரம் செய்யும் நிலையில் பிடிபட்டார். கிராம மக்கள் அவரின் தலையையும் தாடியையும் மொட்டையடித்து செருப்பால் அடித்து கிராமத்திலிருந்து வெளியேற்றினர். 
~~~~~~
(ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ் ) அவர்களின் ஜுமுஆ உரையிலிருந்து 29-7-2000)

No comments

Powered by Blogger.