21 ரூபாய் வரவிருக்கிறது

ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் உண்மைத்தன்மைக்கான அடையாளங்கள் ஏராளமாக இருக்கின்றன. பல்வேறு முன்னறிவிப்புகளை இறைவன் அன்னாருக்கு வழங்கியிருக்கிறான். அதில் ஒன்றுதான் "21 ரூபாய் வரவிருக்கிறது" என்ற முன்னறிவிப்பாகும். இந்த முன்னறிவிப்பு எவ்வாறு நிறைவேறியது என்பதை குறித்து ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

1883 செப்டம்பர் 6 புதன்கிழமை எனக்கு ஒரு நூல் அச்சிடுவது தொடர்பாக கடினமான பணத்தின் தேவை ஏற்பட்டபோது அல்லாஹ் தனது அருளால் இந்த அடியேனுக்கு  ஆறுதல் அளித்தவாறு இல்ஹாம் மூலம் அறிவித்தான்

 ''21 ரூபாய் வரவிருக்கிறது''

இந்த நற்செய்தியில் அற்புதம் என்னவென்றால் வரவிருக்கும் ரூபாய் எவ்வளவு என அறிவிக்கப்பட்டது .குறிப்பிட்ட எண்ணிக்கையை அறிவிப்பது மறைவான ஞானமுடையவனின் சிறப்பாகும். வேறெவரின் வேலையும் அல்ல. இந்த அற்புதங்களின் காரணமாக இந்த இல்ஹாம் நிறைவு பெறுவதற்கு முன் சில ஆரியர்களுக்கு தெறிவிக்கப்பட்டது.

அதன்பின் 10 செப்டம்பர் அன்று மீண்டும் அழுத்தமாக "21 ரூபாய் வந்துவிட்டது" என இல்ஹாம் வந்தது. எனவே இன்று அந்த இல்ஹாம் நிறைவு பெற்றுவிடும் என கருதப்பட்டது .அந்த இல்ஹாம் கிடைத்து 3 நிமிடங்கள் ஆனதும் வஸீர் சிங் என்ற நோயாளி வந்து 1 ரூபாய் தந்தார். 

மருத்துவம் பார்ப்பது இவ்வடியேனுக்கு தொழிலல்ல. ஏதேனும் நோயாளி வந்து கேட்டால் அதற்காக மருந்து நினைவிற்கு வந்தால் இறைவனுக்காக அதனை கொடுத்துவிடுவேன் . இருப்பினும் அது இந்த முன்னறிவிப்பின் ஒரு பகுதியாகும் என கருதி அவரிடமிருந்து அந்த பணத்தை பெற்றுக்கொண்டேன் .அதன் பின் மீதி உள்ள பகுதி அஞ்சல் அலுவலகம் மூலம் நிறைவு பெறலாம் என்ற எண்ணத்துடன் ஆளனுப்பினேன்.   

அப்போது அஞ்சல் அலுவலர் கூறினார் என்னிடம் ஒரு மணியார்டர் வந்துள்ளது அது 5 ரூபாய் ஆகும் அத்துடன் ஒரு கார்டும் உள்ளது ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லை வந்ததும் தந்து விடுவேன் என்றார்.அதனைக் கேட்டு மிகவும் கவலையடைந்தேன் இறைவா!  இதென்ன நேர்ந்தது .5ம் ,1ம் ஆறு தானே. என கவலையோடு இருக்க  மீண்டும் "21 ரூபாய் வந்துள்ளது இதில் ஐயமில்லை "என இல்ஹாம் வந்தது .

அஞ்சல் அலுவலரின் முதல் தகவலை கேட்டறிந்த ஆசிரியர் ஒருவர் மத்தியான வேளையில் அஞ்சல் அலுவலகம் சென்றபோது 20 ரூபாயும் கார்டும் கொண்டு வந்து தந்தார் . அப்போது அஞ்சல் அலுவலர் ,என் வாயிலிருந்து தவறாக 5 ரூபாய் என வந்துவிட்டது. 

அந்த கார்டு அத்துடன் இணைக்கப்பட்டிருக்கவும் இல்லை. அங்கே பணமும் இருந்திருக்கிறது என கூறினார் .எனவே அஞ்சல் அலுவலர் சொன்னது எல்லாம் தவறாயிற்று.  இறைவன் சொன்னதே உண்மையாயிற்று.

அந்த மணியார்டர் முன்ஷி இலாஹி பக்ஷ் சாஹிப் அனுப்பியிருந்தார் மேலும் செப்டம்பர் 6 ம் நாள் அதாவது அந்த இல்ஹாம் கிடைத்த  நாள் அனுப்பப்பட்டிருந்தது  இந்த அருளுக்குரிய நாளின் நினைவாக  1ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சில ஆரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

~~~~~~~
 (ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்களின் ஜுமுஆ உரையிலிருந்து 11-01-2002)

No comments

Powered by Blogger.