ஒரு மாபெரும் முன்னறிவிப்பு
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"அல்லாஹ் தஆலா எனக்கு மீண்டும் மீண்டும் இச்செய்தியை அறிவித்துள்ளான் அதாவது, அவன் எனக்கு அதிக வல்லமையை வழங்குவான். என் மீதுள்ள அன்பை (மக்களின்) உள்ளத்தில் நிலைநாட்டுவான். எனது கூட்டத்தை சார்ந்த மக்கள் எந்த அளவுக்கு அறிவு மற்றும் ஞானத்தில் மிகைத்து நிற்பார்கள் என்றால் தமது உண்மைத்துவத்தின் ஒளி மற்றும் தமது ஆதாரங்கள் மற்றும் அடையாளங்கள் அடிப்படையில் அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார்கள். அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும் இவ்வூற்றிலிருந்து நீர் அருந்துவார்கள். இந்த அமைப்பு வளர்ந்து கொண்டு செல்லும், பூத்து குலுங்கும். எந்த அளவுக்கு என்றால் உலகத்தில் (இந்த அமைப்பு) சூழ்ந்துவிடும்............ ஆகவே கேட்போர்களே! இவ்விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இம்முன்னறிவிப்பை உங்களது பெட்டியில் பாதுகாத்து கொள்ளவும். இது இறைவனின் வார்த்தையாகும். ஒரு நாள் இது நிறைவேறும். (இன்ஷா அல்லாஹ்)
(நூல்: தஜல்லியாத்தே இலாஹிய்யஹ்)
Post a Comment