எனது ஜமாஅத்தை உலக முழுவதும் பரவச் செய்வான்
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது ஜமாஅத்தாகிய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை குறித்தும் அதிலுள்ள மக்களை குறித்தும் இவ்வாறு கூறுகிறார்கள்:
இறைவன் எனக்கு மீண்டும் மீண்டும் அறிவித்த செய்தியாவது, அவன் எனக்கு வல்லமையை தருவான். மேலும் எனது அன்பை உள்ளத்தில் நிலை பெறச் செய்வான். மேலும் எனது ஜமாஅத்தை உலக முழுவதும் பரவச் செய்வான். அனைத்து பிரிவுகளின் மத்தியில் எனது பிரிவை உயர்வடையச் செய்வான். எனது ஜமாஅத்தின் மக்கள் தனது உண்மையின் ஒளி மற்றும் ஆதாரங்கள், அடையாளங்களை கொண்டு மற்றவர்களின் வாயை அடைக்க செய்யும் அளவிற்கு அறிவிலும், ஞானத்திலும் மேலோங்கி இருப்பார்கள். மேலும் அனைத்து சமுதாயமும் இந்த ஊற்றிலிருந்து நீர் அருந்தும். இந்த ஜமாஅத் விரைவாக வளர்ந்து பூத்து குழுங்கும் எந்த அளவுக்கு என்றால் முழு உலகையும் சூழ்ந்துவிடும். பல்வேறு தடைகள் உருவாகும். சோதனைகள் வரும் ஆனால் இறைவன் அவை அனைத்தையும் நீக்கி விடுவான். மேலும் தனது வாக்கை முழுமை அடையச் செய்வான். மேலும் இறைவன் என்னை நோக்கி கூறினான், "நான் உனக்கு அருட்களை வழங்குவேன். எந்த அளவுக்கு என்றால் அரசர்கள் உனது ஆடையிலிருந்து அருட்களை தேடுவார்கள்.
(தஜல்லியாத்தே இலாஹிய்யஹ் | ரூஹானி கஸாயின் பாகம் 20)
Post a Comment