நான் உன்னை பாதுகாத்து வருவேன்
" நான் உன்னை பாதுகாத்து வருவேன் "
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 16 ஏப்ரல் 1906 அன்று இறைவன் வழங்கிய இல்ஹாம்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட மஸீஹ் (அலை ) அவர்கள் கூறுகிறார்கள் :
" நான் ஒரு விதையைப் போன்று விதைக்கப்பட்டேன். அதன் பின் ஆயிரக்கணக்கான கால்களின் கீழ் நசுக்கப்பட்டேன் . சூராவளிக்காற்று வீசியது. புயலடித்தது . கிளர்ச்சியின் கூக்குரல் ஒவ்வொரு ஒரு வெள்ளப்பெருக்கு போல் என்னுடைய சின்ன விதை மேல் அடித்தது. அப்போது அந்த விதையாகிய நான் இந்த சோதனைகளுக்குப் பின் காப்பாற்றப்படுவேன் என எவர் அறிந்தார்?
எவர் நினைத்தார் ? அந்த விதை இறை அருளால் வீண்போகவில்லை. வளர்ந்தது . மலர்ந்தது . இன்று அது ஒரு பெரிய மரமாகும் அதன் நிழலின் கீழ் 3 லட்சம்
மக்கள் ஓய்வெடுக்கின்றனர். ( 125 வருடங்களுக்கு முந்தய எண்ணிக்கை)
இது இறைவனின் வேலையாகும் .இதனை மனித ஆற்றலால் புறிந்து கொள்ள முடியாது .இது எதனிடமும் தோல்வியைக் காணமுடியாது.
மக்களே! இப்பொழுதாவது இறைவனிடம் வெட்கப்படுங்கள் .ஏதாவது பொய்வாதியின் வாழ்க்கையில் இதற்கான எடுத்துக்காட்டை காட்ட முடியுமா ?
இது இறைவனின் வேலையாக இல்லாதிருந்தால் என்னை அழிப்பதற்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை. என்னைக் கொல்ல இறைவனே போதுமாவனாக இருந்தான். நாட்டில் பிளேக் நோய் பரவியது .இம்மனிதன் பிளேக் நோயால் அழிந்து போய் விடுவார் என பலர் சவால் விட்டுக் கூறினர். அப்போது அல்லாஹ் என்னிடம் கூறினான் . நான் உம்மைப் பாதுகாப்பேன் . பிளேக் உமது அருகில் கூட வராது. மேலும் பிளேக் ஆகிய நெருப்பைக் காட்டி எங்களைப் பயமுறுத்த வேண்டாம் .
நெருப்பு நம் அடிமை அல்ல . நமது அடிமைக்கும் அடிமையாகும் என மக்களுக்கு நான் கூறவேண்டும் என அல்லாஹ் கூறினான் .
மேலும் கூறினான் இந்த உமது நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் பிளேக் நோயிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் . . அவ்வாறே நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களெல்லாம் அழிந்து கொண்டிருந்தது .ஒரு கியாமத்தின் நிலை ஏற்பட்டது . ஆனால் இறைவன் நம்மைப் பாதுகாத்தான் "
_________________________
_ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ் ) அவர்களின் ஜும்மா உரையிலிருந்து 28-9-2001_
Post a Comment