ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைக்கு சான்றாக வெளிப்பட்ட மூன்று அடையாளங்கள்

ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களின் எண்ணற்ற முன்னறிவிப்புகள் அன்னாரின் அடையாளத்திற்காக அன்னார் உண்மையாளர் என்பதை மக்கள் மத்தியில் பரப்பவே நிறைவேற செய்தான். அது நூற்றுக்கணக்கான அடையாளங்கலாக இருக்கின்றன. நாம் தற்போது கீழே மூன்று அடையாளங்கள் குறிப்பிடுகிறோம். 

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"இவைமட்டுமின்றி இன்னும் நூற்றுக்கணக்கான தீர்க்க- தரிசனங்கள் பல்வேறு கால கட்டங்களில் நிறைவேறியிருக்கின்றன. ஒரு முறை நான் மௌலவி ஹக்கீம் நூருத்தீன் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும் என்றும் அதன் உடம்பில் புண்கள் இருக்குமென்றும் அவருக்கு அறிவித்திருந்தேன். அதே போல் மௌலவி சாஹிபிற்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் உடலில் புண்கள் காணப்பட்டன. மௌலவி சாஹிப் அவர்கள் இங்கு வந்திருக்கிறார். இது உண்மையா என்பதை ஒவ்வொருவரும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மற்றொரு முறை மாலியர் கோட்டலாவைச் சார்ந்த தனவந்தர் ஸர்தார் முஹம்மது அலிகான் அவர்களின் மக்களில் ஒருவரான அப்துல் ரஹ்மான் வியாதி பிடித்து பிழைப்பார் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தது. அப்போது இறைவன், உம்முடைய சிபாரிசு மூலமாக அவர் குணமடைவார் என்று அறிவித்தான். அதன்படி நான் அவருக்காக இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்திக்கிறேன் அப்போது என் பிரார்த்தனை கேட்கப்பட்டது என்றும் அவர் பிழைத்துக் கொள்வார் என்றும் எனக்கு அருளப்பட்டது. அதன்படி அவர் பிழைத்தார் இவ்வாறு மரணப் படுக்கையிலிருந்து அவர் உயிர் தப்பினார். இவருடைய மற்றொரு மகனான அப்துல்லாஹ் கானும் நோய்வாய்ப்பட்டு பிழைப்பது அரிது என மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. நான் அவருக்காகவும் பிரார்த்தித்தேன். அப்போது அவரும் குணமடைவார் என எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே அவரும் குணம் அடைந்தார்."

('லெச்சர் லாஹூர்' தமிழ் மொழியாக்கம் பக்கம் 62)

No comments

Powered by Blogger.