வாக்களிக்கப்பட்ட மஸீஹின் முன்னறிவிப்பும் ஸார் மன்னரின் சோக முடிவும்
ரஷ்யாவின் ஸார் மன்னரைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களால் அருளப்பட்டது . ஹஸ்ரத் அஹ்மத் (அலை ) அவர்களின் வாழ்நாளில் இரண்டு பேரரசுகளே இருந்தன .ஒன்று பிரிட்டீஷ் பேரரசு.மற்றது ரஷ்யாவின் ஸார் மன்னனின் பேரரசு.
1905 ம் ஆண்டு ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு வந்த வஹி இதுவாகும்
" அந்த நேரத்தில் ஸார் பரிதாபகரமான நிலையில் காணப்படுவார் "
1905 ல் ஸார் மன்னர் வீழ்வார் என எவருமே கற்பனை கூட செய்திருக்க மாட்டார்.ஏனெனில் அத்தகைய மகோன்னத நிலையில் அவர் இருந்தார் .எனினும் 1918 ம் ஆண்டுகளில் மேற்கண்ட இல்ஹாமில் கூறப்பட்டவிதமே ஸார் மன்னரின் நிலை மிக மோசமானது .
ஒரு முன்னாள் மன்னருடன் மக்கள் இப்படி குரூரமாக நடந்து கொள்வார்கள் என எவருமே எதிர்பார்த்திருக்க முடியாது . . அவருடைய மனைவியும் ,மகளும் அவருக்கு முன்னால் மானபங்கப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் .
உலகெங்குமிருந்த தொடர்பு சாதனங்கள் அன்றைய தினம் ஸாருடைய பரிதாபமான நிலையை பறைசாற்றின. சில பிரிட்டீஷ் பத்திரிக்கைகள் "ஸாருடைய பரிதாப நிலை" என்றே தலையங்கம் எழுதியது .
(Hazrat Kalifatul Mash lV ( rah ) Q/A session 7-2-1999 'review of religion ' சமாதான வழி மார்ச் 2003)
............................................................
ரஷ்யப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னரும் ,பின்லாந்தின் இளவரசரும் ஆன இரண்டாம் நிக்கலாஸ் 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் உருசியப் பேரரசின் மன்னனாக இருந்தார்.
முதலாம் உலகப் போரில் ரஷ்யப் இராணுவத்தைக் கொண்டு நடத்தினார்.ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இவரது ஆட்சி உருசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது.
இவரும் இவரது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக எக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.
ரஷ்யாவின் கடைசி மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் குடும்பம்
1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர்.
- wikipedia
(ஜஸாகல்லாஹ் கைர் சுஹைல் சாஹிப் அமீர் ஜமாஅத் அஹ்மதிய்யா மதுரை, விருதுநகர் மாவட்டம்)
Post a Comment