ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நபித்துவ வாதம் செய்பவர் காஃபிர், பொய்யர் ஆவார் என்ற ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் கூற்றை குறித்த ஆட்சேபனைக்கு பதில்
சிலர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களை குறித்து இவ்வாறு ஆட்சேபனை செய்கிறார்கள்:
ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் அவர்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரோருவர் தன்னை நபி என்று வாதம் புரிகிறாரோ அவர் காஃபிர், பொய்யர் ஆவார் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று தமது நூலிலே குறிப்பிட்டு தனது நபித்துவத்தை பொய்யானதாக கூறாமலே கூறுகிறார் என்று ஆட்சேபனை செய்கின்றனர். இதற்கு ஆதாரமாக காட்டும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் கூற்றை நாம் கீழே தருகிறோம்:
"I believe in all the items of faith as prescribed by the Sunni School of Islam and I accept everything that is according to the Quran and Hadith. I fully subscribe to the doctrine that Muhammad is the last of all Prophets, and that any claimant to Prophethood after him is an impostor and a Kafir. It is my belief that the revelations of Prophethood started with Adam and closed with the prophet Muhammad (peace be upon him)".
(Majmuha-Estaharet, P. 230-231; Tableegh-i-Risalat, Vol 2, Page 20 -
Also appeared in a Qadiani poster dated Oct 2, 1891; 20 Shaaban, 1313 A.H.)
"I consider that man who rejects the doctrine of Last Prophethood is a disbeliever and outside the pale of Islam."
(Tableegh-i-Risalat, Vol 2, Page 44 -
Also read out in Congregation of Jama Masjid, Dehli, Oct. 23, 1891)
இவ்விரண்டு இடத்திலும் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கூறியது சரியே. ஆனால் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் இவ்விடத்தில் எவ்வகையான நபித்துவத்தை பற்றி கூறியுள்ளார்கள் என்பதை மற்ற நூட்களில் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறிய கூற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அவர்கள் தமது மற்ற நூட்களில் கூறிய ஒரு சிலவற்றை நாம் கீழே தருகிறோம்:
அன்னார் கூறுகின்றார்கள்: நான் எங்கெல்லாம் நுபுவ்வத், ரிசாலத்தின் மறுப்பை தெரிவித்துள்ளேனோ அவையாவும் நான் ஷரியத் கொண்டு வந்த நபி எல்லா என்ற பொருளில் மறுத்துள்ளேன்." (ஏக் கல்தீ கே இசாலா பக்கம் 6)
முகம்மதிய நுபுவ்வத்தின் அனைத்து நுபுவ்வத்தும் மூடப்பட்டு விட்டது. ஷரியத் நபி இனி வர முடியாது. மாறாக ஷரியத் அல்லாமல் நபி வர முடியும். (தஜல்லியாத்தே இலாஹிய்யா பக்கம் 25)
இவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளாக இருக்கின்றனர். இவர்கள் கத்மே நபுவ்வத்திற்கு கொடுக்கும் பொருளால் நபுவ்வத்தே பொய்யுள்ளதாக ஆகிவிடுகின்றது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து அருட்களும் மூடப்பட்டு விட்டன என்று நாம் கத்மே நுபுவ்வத்திற்கு பொருள் தர இயலுமா" (சஷ்மாயே மஸீஹி பக்கம் 67)
"நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) காதமுல் அன்பியா ஆவார்கள். அதாவது எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறகு எந்தவித புதிய ஷரியத், புதிய வேதம் வராது. புதிய கட்டளை தோன்றாது. இதுதான் வேதம் மற்றும் கட்டளை ஆகும். எனது நூலில் என்னை குறிப்பிட்டு வரக்கூடிய நபி, ரசூல் என்பது ஒரு புதிய ஷரியத்தையோ, புதிய கட்டளையோ கொண்டு வந்ததை சாராது. மாறாக தேவைக்குறிய நேரத்தில் ஏதாவதொரு தீர்க்கதரிசியை அனுப்புவானோ அவ்வேளையில் அவருக்கு அவன் (அல்லாஹ்) தன்னிடம் பேசக்கூடிய பாக்கியத்தை வழங்குகிறான். மேலும் மறைவான விஷயத்தை தெரிவிக்கிறான். இவ்வாறானவர்களுக்கு நபி என்று கூறப்படுகிறது. மேலும் தீர்க்கதரிசி என்ற நபி பட்டத்தை வழங்கப்படுகிறது. இதனால் அவருக்கு புதிய ஷரியத் வழங்கப்படுவார் என்று பொருள் அல்ல. அல்லது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஷரியத்தை நஊதுபில்லாஹ் நீக்கக்கூடியவராக இருப்பார் என்றோ பொருள் அல்ல. மாறாக அவருக்கு கிடைக்கூடிய அனைத்துமே அண்ணாரை (ஸல்) முழுமையாக பின்பற்றியதானாலேயே கிடைக்கின்றது. இது அல்லாமல் அவருக்கு எதுவும் கிடைக்காது. (மல்ஃபூசாத் பாகம் 3 பக்கம் 498)
இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூட்களில் எங்கெல்லாம் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நபி வர முடியாது என்று கூறியுள்ளார்களோ அங்கெல்லாம் ஷரியத் மற்றும் நேரடியான நபுவ்வத்தையே (அதாவது நபி ஸல்) அவர்களை பின்பற்றுவதை தவிர்த்து மேலும் அன்னாருக்கு எதிராக நேரடியாக நுபுவ்வத் பட்டத்தை பெறுவதை) மறுத்துள்ளார்கள். மேலும் எங்கெல்லாம் நபுவ்வத் நிலைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்களோ அங்கெல்லாம் ஷரியத் அல்லாத நபித்துவத்தை மற்றும் அண்ணாரை பின்பற்றி கிடைக்கும் நபித்துவ அருட்களே நிலைத்திருக்கிறது என்பது பொருளாகும்.
இந்த வரிசையிலேயே தப்லீக்கே ரிசாலத் என்ற நூலிலிலிருந்து அவர் எடுத்து போட்டுள்ள கருத்தும் அமைந்ததாகும். அதாவது எவரொருவர் ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களின் நபுவ்வத்தை மறுத்து தனியான முறையில் நபுவ்வத் வாதம் செய்கிறாரோ அவர் இஸ்லாத்தை விட்டு நீங்கியவரே என்று ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.
அதே போன்று மஜ்மூஆ இஷ்திஹாராத்தில் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறிய "ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்கள் கதமுல் முர்ஸளீன் அவர்களுக்கு பிறகு வேறெந்த நபித்துவ வாதம் மற்றும் தூதார் வாதம் செய்பவர் பொய்யர் மற்றும் காஃபிராகா கருதுகிறேன்" என்ற கூற்றின் பொருளும் இதுவே ஆகும். அதாவது ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களை மறுத்து அன்னாரின் உம்மத்தி அல்லாமல் எவரும் நபித்துவ வாதம் செய்ய முறியாது, தனித்து ஷரியத் நபித்துவ வாதம் செய்ய முடியாது. இவ்வாறு வாதம் செய்பவர் இஸ்லாத்தை விட்டு நீங்கியவர், இவர் பொய்யர், காஃபிர் என்று கூறுகிறார்கள்.
Post a Comment