நபி எங்கு மரணம் அடைவாரோ அங்கே அடக்கம் செய்யப்படுவாரா?
அஹ்மதிகளின் எதிரிகள் "நபி எங்கு
மரணம் அடைவாரோ அங்கே அடக்கம் செய்யப்படுவார்" (சுனன் இப்னு மாஜா கிதாபுல் ஜனாயிஸ்
| பாடம்: ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்களின் மரணம்) என்ற ஹதீஸை முன் வைத்து, ‘ஹஸ்ரத் மிர்ஸா ஸாஹிப் அவர்கள் லாஹூரில் மரணம் அடைந்தார்கள் பிறகு காதியானில்
அடக்கம் செய்யப்பட்டார்களே அப்போ இந்த ஹதீஸின் படி ஹஸ்ரத் மிர்ஸா ஸாஹிப் (நஊதுபில்லாஹ்)
தமது வாதத்தில் பொய்யானவர்தனே என்று ஆட்சேபனை செய்வதுண்டு.
நமது பதில்:
1-
இதற்கு எமது முதல் பதில் இந்த ஹதீஸ் பலகீனமானதாகும் என்பதே. அது எவ்வாறு பலகீனம்
ஆகும்? என்ற கேள்விக்கான பதிலை நாம் கீழே தொடர்ந்து படிக்கும்போது அறிய
முடியும்.
2-
இரண்டாவது பதில், ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் ஒரு நபி எங்கு மரணம் அடைகிறாரோ அங்கே அவர் அடக்கம்
செய்யப்படவில்லை என்றால் அவர் உண்மையாளராக இருக்க முடியாது என்று ஒரு உண்மை நபிக்கான
இலக்கணமாக கூறவில்லை.
இந்த ஹதீஸை அனைத்து நபிமார்களையும் குறித்து
கூறப்பட்டதாக இருந்தால் வரலாற்றின் அடிப்படையில் இது சரியாக அமையாது. ஏனென்றால்,
” رُوِیَ أَنَّ یَعْقُوبَ مَاتَ بِمِصْرَ فَحُمِلَ اِلَی اَرْضِ
الشَّامِ مِنْ مِصْرَ “
அதாவது இதில் அறிவிக்கப்படக்கூடிய விஷயம்
என்னவென்றால், ஹஸ்ரத் யஃக்கூப்
(அலை) அவர்கள் மிஸ்ரில் மரணம் அடைந்தார்கள். பிறகு அன்னாரின் ஜனாஸா ஷாம் நகருக்கு
(அடக்கம் செய்யப்படுவதற்காக) எடுத்து செல்லப்பட்டது.
(பஹ்ருர் ராயிக் ஷரஹ் கன்ஸுத் தகாயிக் பாகம் 2 பக்கம் 195 | ஜனாஸா பாடம்)
ஆக, அனைத்து நபிமார்களும் எங்கு மரணம் அடைகிறார்களோ அங்கே அடக்கம்
செய்யப்பட வேண்டும் என்ற தரத்தை ஓர் உண்மை நபிக்கு பொருத்தி பார்ப்பது சரியானது அல்ல.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸை
தம்மை குறித்து மட்டுமே கூறியிருந்தார்கள் என்று கருதினால் மட்டுமே இந்த ஹதீஸ் ஏற்றுக்
கொள்வதற்கு தகுந்ததாக இருக்க முடியும். இது மாறுபட்ட கருத்து ஒன்றுமில்லை. ஏனென்றால்
ஒரு ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
نَحْنُ
مَعْشَرَ الْاَنْبِیَاءِ لَا نَرِثُ وَلَا نُوْرَثُ مَاتَرَکْنَاہُ صَدَقَةٌ‘‘ ’’
அதாவது, நாம் நபிமார்கள் குழுமத்தில் இருக்கிறோம். நாம் ஒருவர் மற்றவருக்கு
வாரிசாக இருப்பதில்லை. எங்களுக்கு யாரும் வாரிசாகவும் முடியாது. நாம் எதை விட்டு செல்கிறோமோ
அது சதக்காவாக ஆகிவிடுகிறது."
(புகாரி கிதாபுல் மகாஸி ஹதீஸ் பனி நலீர்)
ஆனால் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
وَوَرِثَ
سُلَيْمٰنُ دَاوٗدَ
ஹஸ்ரத் சுலைமான் (அலை) அவர்கள் ஹஸ்ரத்
தாவூத் (அலை) அவர்களின் வாரிசானார்கள். (அந்-நம்ல்:17) என்று வருகிறது.
வெளிப்படையாக பார்க்கும்போது இது முரண்பட்டதாக
தெரிய வரும் ஆனால் இந்த விஷயத்தை தெளிவு படுத்தியவாறு ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு
கூறுகின்றார்கள்:
یُرِیْدُ بِذَالِکَ
نَفْسَہُ
"மேலே கூறப்பட்டுள்ள
இந்த ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தம்மை மட்டும் குறித்து கூறிய விஷயமாகும்"
என்று கூறுகிறார்கள்.
(புகாரி கிதாபுல்
மகாஸி ஹதீஸ் பனி நலீர்)
ஆகவே குரோதமான உள்ளத்தோடு, ஆட்சேபனை செய்தே
ஆக வேண்டும் என முழு நோக்கத்தோடு நாம் ஒரு விஷயத்தில் இறங்கினால் பிறகு எதை வேண்டுமானாலும்
ஆட்சேபனை செய்து கொண்டு நிராகரித்து கொண்டே செல்லலாம். இந்த உள்ளத்தை கொண்டவர்களுக்கு
நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் புரிய வைக்க முடியாது. ஆனால் நடுநிலையோடு சிந்திப்பவர்கள்
நாம் மேலே சொன்ன விஷயத்தை கொண்டு உண்மை எது,
பொய் எது? ஹஸ்ரத் மிர்ஸா
ஸாஹிப் (அலை) அவர்கள் மீது வைக்கப்படும் இந்த ஆட்சேபனை சரியானது இல்லை என்பதை அறிந்து
கொள்வார்.
ஐயா காதியானி முரப்பி! மிர்சாவை காப்பாற்ற என்னவெல்லாம் சமாளிப்பு வேலைகளை அரங்கேற்றுகின்றீர்! காத்திரும் உமது ஒவ்வொரு பித்தலாட்டமும் அப்பாவி காதியானிகளுக்கு வெளிப்படுத்தப்படும்.
ReplyDeleteமிர்சா குலாம் உடைய வாழ்க்கையில் எதுவெல்லாம் நடக்கவில்லையே அதுக்கெல்லாம் ஒரு பொய்யான விளக்கத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுவார்கள் எதுவென்று நடந்தாலும் அது அவர் சொன்னதால் நடந்ததாக கதை சொல்லுவான் இதிலிருந்து விளங்குகிறது அவன் தெளிவான பொய்யன் என்பது
Deleteகாதியானி முரப்பி!! உம்முடைய இந்த blog எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறது..
ReplyDelete