ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களை குறித்தும், அன்னாரின் ஜமாஅத்தை குறித்தும் மௌலானா அபுல் ஆலா மௌதூதி

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களை குறித்தும், அன்னாரின் ஜமாஅத்தை குறித்தும் மௌலானா அபுல் ஆலா மௌதூதி அவர்கள் தமது பத்திரிக்கையான "நிகார்" எனும் பத்திரிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்:

மிர்ஸா சாஹிப் பொய்யான மனிதர் இல்லை என்பதை நான் வலுவாக கூறுவேன். அவர் உண்மையில் தம்மை இமாம் மஹ்தியாக கருதினார். அவர் சமூதாயத்தின் சீர்திருத்தம் மற்றும் அமைப்பின் நேர்வழிக்காக ஓர் வழிக்காட்டி அவசியம் தேவைப்படுகிறது என்று கருதப்படக்கூடிய காலத்தில் தோன்றினார். இதைத் தவிர்த்து வேறு ஓர் உண்மையை நாம் பார்க்க வேண்டும் என்று சொன்னால் , அஹ்மதி ஜமாஅத் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதை அவர்களின் எதிரிகளால் கூட மறுக்க தைரியம் இல்லை. இவர்களின் பிரச்சாரப்பணி மற்றும் இவர்கள் தொடர்ந்து பணிகள் செய்து வரக்கூடிய  எந்த மூலையும், அதே போன்று ஓர் பிரத்தியேக கண்ணியத்தை பெறாத எந்த மூலையும் இவ்வுலகத்தில் இல்லாமல் இல்லை.
(மாதாந்திர "நிகார்" பத்திரிக்கை | ஆகஸ்டு 1959)

No comments

Powered by Blogger.