ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு மாற்று மொழியில் வஹி வந்ததை குறித்த ஆட்சேபனைக்கு பதில்
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு எதிரானவர்கள் இதில் குறிப்பாக மூட முல்லாக்கள் பாமர மக்களை குழப்பி விடுவதற்காக அஹ்மதிகளுக்கு எதிராக தூண்டி விடுவதற்காக பல்வேறு ஆயுதங்களை தற்போது ஏந்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்று ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களை குறித்தும் அன்னாரின் ஜமாஅத்தை குறித்தும் இல்லாத பொல்லாததை எடுத்து கூறி பாமர மக்களை நம்ப வைக்கின்றனர். அந்த ஆட்சேபனை வரிசையில் ஒன்று; ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களுக்கு ஆங்கில மொழியிலெல்லாம் வஹி வந்துள்ளதாம் என்று இலக்காரமாக கூறி வருகின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரம் "
ஒவ்வொரு தூதரும் தமது சமுதாயத்தினருக்கு (நம்முடைய போதனைகளை)த் தெளிவாக எடுத்துரைப்பதற்கு, அவர்களுடைய மொழியிலேயே (அவருக்கு வஹி அறிவித்து) அவரை அனுப்பினோம்.’’ (14:5)
இந்த வசனத்தில் ஒரு தூதருக்கு அவர் எந்த சமுதாயத்திற்கு வருகிராரோ அந்த சமுதாயத்தில் என்ன மொழி பேசப்படுகிறதோ அந்த மொழியில் அந்த சமுதாயம் தெளிவாக விளங்கி கொள்வதற்காக வஹி இறக்குவதாக கூறுகிறானே அல்லாமல் வேறு மொழியில் அந்த நபிக்கு இறக்குவதே கிடையாது என்று எங்கும் கூறவில்லை. இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை அனுப்புகிறான் என்றால் அந்த சமுதாய மொழியை அவர் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பதே. இங்கு மொழியைப் பற்றி வருகிறதே தவிர அந்த இறைத்தூதருக்கு இறைவன் இறக்குகின்ற வஹியைப் பற்றி வரவிலலை. ஏனென்றால் திருக்குரானில் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியில் வஹி இறங்கியதாக வருகிறது. "உல்லிம்னா மந்திக்க தைர்" நாம் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியைக் கற்றுக் கொடுத்தோம் என்று வருகிறது. எந்த சமுதாயத்திற்கு சுலைமான் நபி தூதராக அனுப்பப்பட்டாரோ அந்த சமுதாயத்தினுடைய மொழி பறவையின் மொழியாக இருந்ததா?
ஆக இவ்வாறான ஆட்சேபனை தவறாகும். மேலும் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முழு உலகிறக்கும் வந்த அருட்கொடையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த மொழியில் வஹி இறங்க வேண்டும்? ஆனால் அன்னாருக்கு வழங்கப்பட்ட ஷரியத் அரபு மொழியில் உள்ளது. இதை வைத்து உலகத்தில் அப்போது அரபு மொழியை மட்டும் மக்கள் பேசி வந்தார்கள் என்று கூற முடியுமா? இல்லை.
ஒரு விஷயத்தை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஷரியத்துடைய நபிக்கு அந்த ஷரியத் எந்த மொழியில் உள்ளதோ அந்த மொழியில் மட்டும்தான் வஹி வந்திருக்க முடியும் என்று கருதுவது தவறாகும். ஷரியத்தில் பதியப்படாத இன்னும் ஏராளமான வஹி அந்த தூதர்களுக்கு வந்திருக்கலாம். வந்தும் இருக்கின்றன.
ஹஸ்ரத் சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பறைவை மொழியை கற்றுக் கொடுத்ததாக கூறுகிறான். அன்னார் ஷரியத் வழங்கப்படாத நபி. இருந்த போதிலும் அன்னார் எந்த சமுதாயத்திற்கு வருகை தந்தார்களோ அந்த சமுதாயத்திற்கு மாற்றமான மொழியை சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கியிருக்கிறான். இவ்வாறே ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு பிரத்தியேகமாக அல்லாஹ் பாரசீக மொழியில் வஹியை இறக்கியுள்ளான். அந்த வஹியாவது:
"ஈ(ன்) முஷ்த் காக்ரா க(g)ர் நா பகுஷம் சே குனம்"
(நூல்: கவ்ஸரூன் நபி (ஸல்) பாடம் அல்ஃபா)
(இந்த வஹி இடம் பெற்றுள்ள நூலின் அசல் பிரதியின் பக்கம் கீழே)
இந்த அடிப்படையிலேயே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் ஆங்கில மொழியில் வஹி அறிவித்திருந்தான். இன்னும் மற்ற மொழிகளிலும் வஹி அறிவித்துள்ளான்.
ஆகவே இவ்வாறு அர்த்தமற்ற ஆட்சேபனையையும், தமக்கு தெரியவில்லை என்றால் அதையும் ஓர் ஆட்சேபனையாக தெரிவித்து தமது மூடத்தனத்தை வெளிப்படுத்துவது சரியல்லவே.
(பிரதியின் துவக்க பக்கம்)
(ஆதாரம் இடம்பெற்றிருக்கும் பக்கம்)
T-Shirt (t-shirt) - Titanium Carabiners
ReplyDeleteT-Shirt (t-shirt) - citizen super titanium armor Titanium Carabiners. T-shirt. $21.39. T-Shirt for titanium tv those of us that want a unique head titanium tennis racket vintage style, the ford edge titanium 2021 T-Shirt is titanium bikes made in USA.$13.99 · Out of stock