முதல் உலகப்போரைக் குறித்து ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் முன்னறிவிப்பு

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தமது உண்மை தன்மைக்கு ஆதாரமாக இறைவன் தமக்கு அறிவித்த பல்வேறு முன்னறிவிப்புகளை உலக மக்களின் முன் அறிவித்து அந்த முன்னறிவிப்புகள் நிறைவேறி இருப்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அந்த வரிசையில் ஒரு முன்னறிவிப்பை பற்றிதான் நாம் கீழே காணப்போகிறோம்.

ஹஸ்ரத் அஹ்மது (அலை) தமக்கு அல்லாஹ் முன்னறிவித்த முன்னறிவிப்புகளை தொகுத்து "தத்கிரா" என்ற நூல் வடிவில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் வெளியிட்டிருக்கிறது. (நூலை பதிவிறக்கம் செய்ய : http://www.alislam.org/library/browse/book/Tadhkirah) அதில் எழுதபட்டுள்ள ஒரு முன்னறிவிப்புதான் "கிஷ்தியான் சல்தி ஹேன் தா ஹோன் குஷ்தியான்" (பொருள்: குஷ்திகள் போடுவதற்காக கஷ்தியான் (கப்பல்கள்) செல்கின்றது") என்ற முன்னறிவிப்பாகும். இந்த முன்னறிவிப்பு அன்னாருக்கு 1906 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி அன்று அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்திருந்தான். இந்த முன்னறிவிப்பு தத்கிரா எனும் நூலில் பக்கம் 567 இல் காணப்படுகிறது. இந்த இல்ஹாமை 1906 ஆம் ஆண்டு பதர் நம்பர் 20 பக்கம் 2 இல் 1906 மே 17 ஆம் தேதி அன்று வெளியிட்டார்கள். அதே போன்று அல் ஹகம் என்ற பத்திரிக்கையிலும் பத்திரிக்கை நம்பர் 17 பக்கம் 1 இல் 1906 மே 17 ஆம் தேதி அன்று வெளியிட்டார்கள். 


1906 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி அன்று ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்களுக்கு இறங்கிய இந்த இல்ஹாம் (முன்னறிவிப்பு) இதே வருடமாகிய 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்று மகத்துவத்துடன் பூர்த்தியானது. அது எவ்வாறு என்பதை நாம் கீழே காண்போம்.

Dreadnought என்ற பெயரைக் கொண்ட பிரிட்டனிய தரப்பிலிருந்து போர் கப்பல் கடல் போரிற்காக முதல் முறையாக உபயோகிக்கப்பட்டது. இது கடல் போர் மைதானத்தில் மாபெரும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. (இந்த கப்பல் 1906 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக போருக்கு கொண்டு செல்லப்பட்டது.)

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் மற்ற நாடுகள் உதாரணத்திற்கு ஜெர்மனி, அமெரிக்கா இதே போன்ற கப்பலை தயாரிக்க முன் வந்தது. இது முதல் உலகப் போருக்கான காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது, "Dreadnought என்ற போர் கப்பல் போர் சாமான்களை எடுத்து செல்வதிலும், நீரில் பாய்ந்து செல்வதிலும் கடந்த போர் கப்பலை விட மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது. இதன் காரணமாகத்தான் 1906 ஆம் ஆண்டுக்கு முன்புள்ள போர் கப்பலுக்கு Pre-Dreadnoughts என்ற பெயர் சூட்டப்பட்டது. (அதாவது Dreadnought க்கு முன்புள்ள போர் கப்பல்). முதல் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு நடைபெற்றாலும் அதற்கு முழு காரணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு இடையே 1906 ஆம் ஆண்டு நடைபெற்ற போரே விளங்கியது என்பதை historylearningsite என்ற வலைதளத்தில் The Naval Race 1906 to 1914 என்ற தலைப்பில் காணப்படுகிறது. (இதனின் லிங்க் : http://www.historylearningsite.co.uk/world-war-one/causes-of-world-war-one/the-naval-race-1906-to-1914/)

ஆக இவ்வாறு ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு இறங்கிய இந்த இல்ஹாம் நிறைவேறக்கூடிய அடையாளம் 1906 ஆம் ஆண்டு வெளிப்பட்டு, 1914 ஆம் ஆண்டு பூர்த்தியானது. 

"(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர..."(72:28,29) 

No comments

Powered by Blogger.