ஜிஹாதை குறித்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை)

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது அலை  கூறுகிறார்கள்:

ஜிஹாது ஃபீ ஸபீலில்லாஹ்  இரண்டு வகைப்படும். ஒன்று வாளின் முலமாக செய்யப்படும் ஜிஹாது. இரண்டாவது தப்லீகின் முலமாக இஸ்லாத்தைப் பரப்புவது. மேலும் கலிமத்துல்லாஹ்வை பரப்புவது. 

இன்றைய காலத்தில் வாளால் செய்யக்கூடிய ஜிஹாதிற்கான சூழ்நிலை இல்லை. மாறாக இஸ்லாத்தை தப்லீகின் மூலமாக  பரப்புவதற்கான ஜிஹாதின் காலமாகவே இருக்கிறது. ஆனால் நம்முடைய ஜமாஅத்  தன் தரப்பிலிருந்து கூறாமல் அல்லாஹ் ரசூலுடைய கட்டளையின் அடிப்படையில்  வாளால் செய்யக்கூடிய ஜிஹாது இன்றைய காலத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கூறுகிறது.


எந்த சூழ்நிலையில் வாளால் செய்வதற்கான ஜிஹாது மூஃமின்களின் மீது கடமையாக இருக்கின்றதோ அந்த சூழ்நிலை  இன்று இல்லை. மீண்டும் இந்த சூழ்நிலைகள் உருவாகி விட்டால் முஸ்லிம்களின் மீது வாளால் செய்யக் கூடிய ஜிஹாதிற்கான கட்டளை கடமையாகி விடும். இது ஷரியத்துடைய கட்டளையாக இருக்கிறது. இது தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.

திருக்குர்ஆனில் இரண்டு விதமான போதனைகள் உள்ளன. சில போதனைகள் நிரந்தரமானவை. சில போதனைகள் அவ்வப்போது செயல் படுத்தக் கூடியது. சில அறிவற்றவர்கள்  ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது அலை அவர்கள் இந்த ஜிஹாதைக் குறித்து  ஹராம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்கள்  என்று ஆட்சேபனை செய்கிறார்கள்.

சூழ்நிலைகள் மாறும்போது அது அவசியமானதாக ஆகி விடுகிறது. அப்படி இருக்கும் போது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது அலை அவர்கள்  ஹராம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்கள்?
எந்த விஷயங்கள் நிரந்தரமாக ஹராமாக்கப்பட்டிருக்கின்றதோ அவைகளே ஹராமாகும்.
இது முற்றிலும் முட்டாள் தனமான ஆட்சேபனையாகும்.

தொழுகை ஹராம் சுரியன் உதிக்கும் போது ,தொழுகை ஹராம் உச்சியில் இருக்கும் போது ,தொழுகை ஹராம் சூரியன் மறையும் போது , தொழுகை முற்றிலும் ஹராம் என்பது இதற்குப் பொருளா ? இதே போன்று பெரு நாளன்று நோன்பு வைப்பது ஹராமாகும். இதைப் போன்ற பல உதாரணங்கள் நம்முடைய  ஷரியத்தில் இருக்கின்றன.

இந்த வகையில் வாளால் செய்யக்கூடிய ஜிஹாதிற்கான கட்டளை ஷரியத்தின் அடிப்படையில் ரத்தாகி விட்டது என்று ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது அலை அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்பொழுது இஸ்லாத்தை தப்லீக் செய்வதற்கான ஜிஹாது மட்டுமே எஞ்சி உள்ளது. நிச்சயமாக இந்த ஜிஹாதானது நம்முடைய ஜமாஅத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாக உள்ளது. இந்த ஜிஹாதில் பங்கு பெறுவது நம்முடைய ஒவ்வொருவரும் பங்கு பெறுவது அவசியமானது ஆகும். இதனை நம்முடைய ஜமாஅத் எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதே இப்பொழுது நம்முன் உள்ள கேள்வியாகும்.

நாங்கள் சந்தா கொடுக்கின்றோம் அதனால் புத்தகங்கள்  அச்சிடப்படுகின்றன.புத்தகங்கள் மூலம் தப்லீக் நடை பெறுகிறது என்று நீங்கள் கூறலாம். நாங்கள் பணத்தைக் கொடுக்கின்றோம் அந்தப் பணத்தின் மூலம் சிப்பாய்களை தயார் செய்து நம் சார்பாக அவர்கள் போரிடலாம் என்று ஸஹாபாக்கள் கூறவில்லை. அந்த ஸஹாபாக்களில் ஒருவராவது இவ்வாறு கூறினாரா ? இந்த பதிலுக்குப் பிறகு அவரை மூஃமினானவர் என்று அவரை நினைக்க முடியுமா? சில சூழ்நிலைகளில் அவ்வாறு நடக்கலாம்.

ஒரு முடவர் தன் சார்பாக பணத்தைக் கொடுத்து வேறு ஒருவரை தப்லீகிற்கு அனுப்பலாம். அதே போல இக்கட்டான சூழ்நிலையில் தன் சார்பாக பணத்தைக் கொடுத்து ஹஜ் செய்ய வைக்கலாம். இப்படிபட்ட எந்த தடைகளும் இல்லாத ஒருவர் தன் சார்பாக வேறு ஒருவரை ஹஜ் செய்ய வைக்கிறார் என்றால் அவரது ஹஜ் ஒரு பொதும் ஏற்றுக் கொள்ளப்படாது.

எனவே தப்லீக் ஒரு ஜிஹாதாகும். இந்த ஜிஹாது எல்லோரின் மீதும் கடமையாக இருக்கிறது. எவர் இப்படிபட்ட முக்கியமான கடமையை விடுகின்றாரோ அவர் பாவியாவதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்.? 

இந்த ஜிஹாது ஃபர்ளைச் சார்ந்ததாகும். என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். எனவே ஒவ்வொரு அஹ்மதியும் நாவால் மற்றவருக்கு தப்லீக் செய்யக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளாரோ அவர் தம்முடைய நேரத்தில் தப்லீகிற்காக நேரத்தை ஒதுக்கவில்லை என்றால்  அவர் நிச்சயமாக ஒரு முக்கியமான கடமையை நிறைவேற்றாததின் காரணமாக  பாவியாகின்றார்.

தொழுகையை விடுவதினால் எவ்வாறு பாவியாகி விடுகின்றாரோ அவ்வாறு தப்லீக் செய்யாததினால் அவர் பாவியாகி விடுகின்றார். நோன்பு விடுவதினால் எவ்வாறு பாவியாகி விடுகின்றாரோ ,ஹஜ் செய்யாததினால் எவ்வாறு பாவியாகி விடுகின்றாரோ ,ஸக்காத்து கொடுக்காததினால் எவ்வாறு பாவியாகி விடுகின்றாரோ அவ்வாறு தப்லீக் செய்யாததினால் பாவியாகி விடுகின்றார். வாளால் செய்யக் கூடிய ஜிஹாதிற்குப் பதிலாக  இஸ்லாத்தை தப்லீக் செய்யக்கூடிய ஜிஹாது ஒவ்வொரு மூஃமினின் மீதும் கடமையாக இருக்கின்றது.


ஹஸ்ரத் முஸ்லீஹ் மவ்வூது (ரலி)அவர்கள்
குத்பா ஜும்ஆ 26-04-1940

No comments

Powered by Blogger.