ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு ஐந்தாவது மகன் பிறந்தார்களா? இல்லையா? முன்னறிவிப்பின் பின்னணி என்ன?
14 வது நூற்றாண்டின் முஜத்திதாகவும்,
இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இமாம் மஹ்தியாகவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும்
தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மீது பல்வேறு
ஆட்சேபனைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த அனைத்தும் ஆட்சேபனைகளும் அப்பட்டமான
பொய் என்பதை நாம் கடந்த 125 வருடங்களில் நிரூபித்தும் வருகின்றோம். இத்தளத்தில்
மூலமும் நாம் பல்வேறு ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்து எதிரிகள் செய்யும் அனைத்து
ஆட்சேபனைகளும் அப்பட்டமான பொய் என்பதை நிரூபித்து வருகிறோம்.
இந்த வரிசையில் எதிரிகள் வைக்கும்
மற்றுமொரு ஆட்சேபனையையும் அதற்குரிய பதிலையும் தற்போது நாம் இங்கு பதிக்கின்றோம்.
எதிரிகள் வைக்கும்
ஆட்சேபனை: ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமக்கு ஐந்தாவது மகன் பிறப்பார்
என்று வஹீ வந்ததாகவும், அந்த வஹி (முன்னறிவிப்பு)
நிறைவேறவில்லை. ஐந்தாவதாக மகன் பிறக்கவில்லை இவ்வாறு அவர் (நஊதுபில்லாஹ்) பொய்யர்
ஆவார் என்று ஆட்சேபனை வைக்கின்றனர்.
நமது பதில்: ஹஸ்ரத்
அஹ்மத் (அலை) அவர்களுக்கு பல்வேறு முன்னறிவிப்புகள் வந்துள்ளன. இந்த முன்னறிவிப்புகளில்
சில முன்னறிவிப்புகளுக்கு அவர்களே விளக்கத்தையும் தந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இறைவன்
ஒரு முன்னறிவிப்பை அறிவித்து விட்டு அதற்குரிய விளக்கமாக மற்றொரு முன்னறிவிப்பையும்
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அறிவித்திருக்கிறான். இந்த வரிசையில்
அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்பே இந்த ஐந்தாவது மகன் பற்றிய முன்னறிவிப்பாகும்.
முதலில் நாம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை)
அவர்களுக்கு ஐந்தாவது மகன் சம்பந்தமாக முன்னறிவிப்பு எவ்வாறு வந்துள்ளது என்பதை
நாம் கீழே பார்ப்போம்.
முதல்
முன்னறிவிப்பு: (அறிவிக்கப்பட்ட வருடம் 1903 ஜனவரி மாதம் ஆகும்)
الحمد للہ الذی و ھبْ لیْ علی الکبرِ اربعۃً من البنینَ و
انجزَ و عدہ منَ الاحسانِ- و بشرنیْ بخامسٍ فی حینٍ من
الاحیانِ-
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இதற்கு
பொருள் கூறியவாறு கூறுகின்றார்கள்: “அல்லாஹ்விற்கே எல்லா புகழும். அவன்
முதுமையில் எனக்கு நான்கு மகன்களை வழங்கினான். அவன் தனது வாக்குறுதியை
நிறைவேற்றினான்.....(மேலும்) நான்கு மகன்களைத் தவிர ஐந்தாவது பேரனாக பிறக்கவிருந்த
குழந்தையை (கீழே கொடுக்கப்பட்டுள்ள தத்கிரா எனும் நூலின் பக்கத்தில் இந்த வரியை பச்சை கலர் கோடை கொண்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது) பற்றி எனக்கு இறைவன் “அவர் நிச்சயமாக ஒரு நேரம் பிறப்பார்” என்று
நற்செய்தி வழங்கியுள்ளான்.” (மாவாஹிபுர் ரஹ்மான் பக்கம் 139- ரூஹானி கஸாயீன்
பாகம் 19 பக்கம் 360 | தத்கிரா பக்கம் 378,
2004 இல் அச்சிடப்பட்டது | ஹக்கீகத்துல் வஹீ பக்கம் 218, ரூஹானி கஸாயீன் பாகம் 22 பக்கம் 228-229)
இரண்டாவது
முன்னறிவிப்பு:
انا نبشرکَ بغلامٍ نافلۃً لک
பொருள்: நாம் உமக்கு ஒரு மகனை
பற்றிய நற்செய்தியை வழங்குகிறோம். அவர் உமது பேரனாக இருப்பார். (ஹக்கீகத்துல்
வஹீ பக்கம் 95 முதல் பதிப்பு, ரூஹானி கஸாயீன் பாகம் 22) இந்த நூலின் அசல் பக்கம் கீழே:
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி
(அலை) அவர்கள் மவாஹிபுர் ரஹ்மான் என்ற நூலில் குறிப்பிட்ட முன்னறிவிப்பை பற்றி
விளக்கம் அளித்தவாறு ஹக்கீகத்துல் வஹீ எனும் நூலில் தனது 42 வது அடையாளமாக இவ்வாறு
கூறுகின்றார்கள்: (இந்நூல் 1907 ஆம் வருடம் எழுதப்பட்டது)
“42 வது அடையாளம் இறைவன் பேரராக
விளங்கும் ஐந்தாவது மகனை பற்றி வாக்களித்தான். இதை பற்றி மவாஹிபுர் ரஹ்மான் எனும்
நூலில் பக்கம் 139 இல் இவ்வாறு இந்த முன்னறிவிப்பை எழுதியுள்ளேன்:
“வ பஷ்ஷிர்னீ பிகாமிஸின் ஃபீ ஹீனிம்
மினல் அஹ்யானி” அதாவது ஐந்தாவது மகன் பேரனாக பிறக்கவிருந்ததை பற்றி இறைவன் எனக்கு
நற்செய்தி அறிவித்துள்ளான். அது நிச்சயமாக ஏதேனும் ஒரு நேரம் நிறைவேறும். மேலும்
இது சம்பந்தமாக மற்றுமொரு முன்னறிவிப்பும் வெளிப்பட்டது. இந்த முன்னறிவிப்பு பத்ர்
பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளோம். அது இவ்வாறாகும்: “இன்னா நுபஷ்ஷிருக்க
பிகுலாமின் நாஃபிலதல் லக் மின் இன்தீ” அதாவது நாம் உமக்கு ஒரு மகனை பற்றிய
நற்செய்தியை வழங்குகிறோம். அவர் உனது பேரனாக இருப்பார். அதாவது மகனிற்கு மகன்.
இந்த பேரன் என் வழியாக இருப்பான். இதன் அடிப்படையில் மூன்று மாதத்திற்கு முன்பு
எனது மகன் மஹ்மூத் அஹ்மத் (இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ்) அவர்களின் வீட்டில் ஒரு
மகன் பிறந்தான். அவனது பெயர் நஸீர் அஹ்மத் ஆகும். இவ்வாறு இந்த முன்னறிவிப்பு நான்கரை
வருடத்திற்கு பிறகு நிறைவேறியது. (இந்நூலின் அசல் பிரதி கீழே)
மேலே நீங்கள் ஹஸ்ரத் அஹ்மத் (அலை)
அவர்களுக்கு ஐந்தாவது மகனை குறித்து வந்த முன்னறிவிப்பையும் அந்த இல்ஹாம் யாருக்கு
வந்ததோ அவர்கள் அந்த முன்னறிவிப்பிற்கு வழங்கியுள்ள விளக்கத்தையும்
படித்திருப்பீர்கள்.
இந்த இல்ஹாம் ஐந்தாவது மகனை குறித்து
அல்ல. மாறாக ஒரு பேரரை குறித்த முன்னறிவிப்பாகும் என்பதை நடுநிலை வாதிகளால்
அறிந்து கொள்ள முடிகிறது.
மூட முல்லாக்கள் இந்த முன்னறிவிப்பை
சரியான முறையில் அறிந்து கொள்ள முயலாமல், ஆட்சேபனை செய்ய வேண்டும் என்ற ஒரே
உறுதியில் இருந்து கொண்டு முன்னறிவிப்பின் அதுவும் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்
கொண்டு அந்த முன்னறிவிப்பிற்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மொழி
பெயர்த்துள்ள மொழியாக்கத்தையும் அவர்கள் கொடுத்த விளக்கத்தையும் கண்டு கொள்ளாமல்
அரபு வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்சேபனையை வைத்துள்ளனர். யூதர்களின்
பண்புகள் தம்மிடமும் உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர்.
அல்லாஹ் இவ்வாறான மூட
முல்லாக்களிடமிருந்து பாமர முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.
Post a Comment