மேற்கத்திய நாடுகள் உண்மையை கொண்டு பிரகாசிக்கப்படும் - ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்பதன் மீது நாம் ஈமான் வைத்துள்ளோம். ஆனால் இந்த எளியவனுக்கு சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் என்று கனவில் காட்டப்பட்டதற்கு விளக்கம் என்னவென்றால், பழங்காலத்திலிருந்து வழிகேட்டில் இருந்து வரும் மேற்கத்திய நாடுகள் உண்மையை கொண்டு பிரகாசிக்கப்படும். மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும் நான் இங்கிலாந்து நகரில் ஓர் மேடையில் நின்று ஆங்கில மொழியில் ஆக்கபூர்வமான முறையில் இஸ்லாத்தின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்துவதாக கண்டேன். அதன் பிறகு நான் பல பறவைகளை பிடிக்க கண்டேன். அது ஒவ்வொன்றும் சிறியதாகவும், ஒரு மரத்தில் அமர்ந்திருப்பதாகவும் கண்டேன். அதன் நிறம் வெண்மையாக இருக்கிறது. அதனின் உடலமைப்பு காடையை போன்று இருப்பதாக தோன்றியது. இதற்கு என்னுடைய விளக்கம் என்னவென்றால், நான் இல்லை என்றாலும், எனது எழுத்து மூலங்கள் அந்த மக்கள் மத்தியில் பரவும். பல்வேறு ஆங்கிலேய நல்லுள்ளம் படைத்த மக்கள் உண்மைக்கு இறையாகி விடுவார்கள். உண்மையில் இன்றளவு மேற்கத்திய நாடுகள் உண்மை மார்க்கத்துடன் சிறிதளவே தொடர்பு வைத்துள்ளனர். ஆனாலும் மார்க்க அறிவை அல்லாஹ் ஆசியாவிற்கு வழங்கியுள்ளான். உலக அறிவை ஐரோப்பா மற்றும் அமேரிக்காவிற்கு வழங்கியுள்ளான். நபிமார்களின் தொடர் வருகையும் கூட துவக்கத்திலிருந்து இறுதி வரை ஆசியா கண்டம் வரை மட்டுமே இருந்தது. இறை நேசத்தினுடைய மேன்மையும் இதே மக்களுக்கு கிடைத்தன. தற்போது இந்த மக்கள் மீது (ஐரோப்பா மற்றும் அமேரிக்கா கண்டத்தை சார்ந்த மக்கள் மீது) இறைவன் கருணை பார்வையை காட்ட விரும்புகிறான்.
(இஸாலாயே அவ்ஹாம்; ரூஹானி கஸாயீன் பாகம் 3 பக்கம் 366-377)
ஹதீஸின் அடிப்படையிலும், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் கண்ட கனவுகளின் அடிப்படையிலும் கடந்த 100 ஆண்டுகளில் இஸ்லாம் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பரவி வருவதையும், இன்று வரையுள்ள சர்வேயின் அடிப்படையில் மேற்கத்திய நாட்டை சார்ந்த மக்கள் இஸ்லாத்தை நோக்கை அலையலையாக தழுவி வருவதையும் நாம் பார்க்கிறோம்.
இதில் குறிப்பிடக்கூடிய விஷயம் என்னவென்றால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கண்ட கனவின் அடிப்படையில் அங்கு இஸ்லாத்தின் மேன்மையை, அதன் மகிமையை அன்னாரின் ஜமாஅத் மட்டுமே அழகிய முறையில் விவேகத்துடன் எடுத்து கூறி வருகிறது. அன்னாரின் நூட்களை பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு அங்குள்ள நாடுகளில் பரவலாக விநியோகித்து வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகளின் மொழியில் திருக்குர்ஆனை மொழிப் பெயர்த்து விநியோகித்து வருகிறது. நூற்றுக் கணக்கான இறையில்லம் கட்டி வருகின்றது. ஜெர்மனியில் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இஸ்லாத்தின் போதனையை எடுத்துக் கூற அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை சார்ந்தவரை தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருங்க கூறுவதென்றால், மேற்கத்திய நாடுகள் இன்று இஸ்லாத்தின் அழகிய போதனையை அறிந்து இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் திருக்குர்ஆனின் அழகிய போதனையை ஹஸ்ரத் மாநபி (ஸல்) அவர்களின் உயர்ந்த அழகிய நடைமுறையை அழகான முறையில் எடுத்துக் கூறி வரும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மட்டுமே காரணம் என்பது அப்பட்டம் ஆகும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
https://en.wikipedia.org/wiki/Ahmadiyya_by_country
http://themuslimtimes.info/2012/11/22/ahmadiyya-muslim-jamaat-the-fastest-growing-jamaat-in-the-fastest-growing-religion/
http://themuslimtimes.info/2012/11/22/ahmadiyya-muslim-jamaat-the-fastest-growing-jamaat-in-the-fastest-growing-religion/
Post a Comment