பிளேக் நோயை பற்றிய முன்னறிவிப்பு

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களுக்கு வரும் காலங்களில் நிகழவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை பற்றி தனது வஹீ மூலம் அல்லாஹ் முன்னறிவித்துள்ளான். இது அவனது தொன்று தொட்ட நடைமுறையாக இருந்து வருகிறது .அதாவது அல்லாஹ் தனது புறமிருந்து அனுப்புகின்ற தூதர்களுக்கு தனது நல்லடியார்களுக்கு பல்வேறு முன்னறிவிப்புகளை அவர்களின் உண்மைத் தன்மைக்காக அறிவிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَىٰ غَيْبِهِ أَحَدًا
إِلَّا مَنِ ارْتَضَىٰ مِن رَّسُولٍ فَإِنَّهُ يَسْلُكُ مِن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا

"(அவன்தான்) மறைவானவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
தான் தேர்ந்தெடுத்த தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக செல்லுமாறு செய்கிறான். (72:27,28)


அல்லாஹ் தான் தூதருக்கு அறிவிக்கின்ற முன்னறிவிப்புகளில் ஒரு சில நிகழ்வுகளை அவர்களது வாழ்விலேயே நிறைவேற்றுகிறான், இன்னும் சில முன்னறிவிப்புகளை அவர்களது மரணத்திற்கு பிறகு நிகழச்செய்கிறான். இவ்வாறான முன்னறிவிப்புகள் நிகழ்வதை நல்லுள்ளம் படைத்த மக்களே காண்கிறார்கள். மேலும் தனது ஈமானில் உறுதி பெறுகிறார்கள். ஆனால் அந்தோ! கண் இருந்தும் குருடர்களாக இருப்பவர்களால் அவ்வாறான முன்னறிவிப்புகளை காண முடிவதில்லை. அவர்களுக்கு தென்படுவதுமில்லை. அது அவர்களுக்கு ஒரு சூனியமாகவே தென்படுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَن كَانَ فِي هَٰذِهِ أَعْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا

யார் இம்மையில் (நேர்வழியடையாதக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் குருடன்தான்; மேலும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான். (17:73)

இந்த வரிசையில் அல்லாஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் அவர்களின் உண்மை தன்மைக்காக அவர்கள் இறைவன் புறமிருந்து வந்த உண்மையான நபிதான் என்பதற்கு ஆதாரமாக பல்வேறு முன்னறிவிப்புகளை இறைவன் அன்னாருக்கு முன்னறிவித்துள்ளான். அதை நிறைவேற்றியுமுள்ளான். அவற்றில்ல் சில முன்னறிவிப்புகள் நற்செய்திகளாக இருக்கின்றன. இன்னும் சில முன்னறிவிப்புகள் எச்சரிக்கையை சார்ந்து இருக்கின்றன. இதில் ஒன்றான பிளேக் நோயை பற்றிய முன்னறிவிப்பையும் அது எவ்வாறு எப்போது நிகழ்ந்தது என்பதையும் சுருக்கமாக இங்கு காண்போம்.

இந்த உம்மத்தில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காகவும், அதனை மாற்று மதத்திற்கு எதிராக வெற்றியடையச் செய்வதற்காகவும் தோன்றவிருந்த வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்களின் காலத்தில் பிளேக் நோய் எனும் கொடிய நோய் இறை தண்டனையாக வெளிப்படும் என்பதைப் பற்றி ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் ஹதீஸின் வாயிலாக நமக்கு அறிவித்துள்ளார்கள். ஹதீஸில் இவ்வாறு வருகிறது;
۔۔۔۔۔۔فیرغب نبی اللہ عیسیٰ و اصحا بہ فیرسل اللہ علیھم النغفَ فی رقابھم فیصبحون فرسی کموتِ نفسٍ واحدۃـ۔۔۔۔۔۔

"பின்னர் அல்லாஹ்வின் நபி ஈசா (அலை) அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது (அல்லாஹ்வின் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களை  மறுப்போர்களாகிய) அவர்களின் பிடரிகளில் கட்டிகளை (பிளேக் நோயை) உருவாக்குவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரு மனிதன் மரணிப்பதை போன்று காலை நேரத்தில் மரணம் அடைவார்கள்." (ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் நம்பர்: 5629)
இந்த ஹதீஸில் "نغف" என்ற சொல் வந்துள்ளது இதன் பொருள் கட்டி மற்றும் பிளேக் நோய் ஆகும். (ஆதாரம்: அரபி அகராதி. எழுதியவர் LANE பாகம் 8 பக்கம் 2818, இந்த நூலோடு இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் பக்கம் 3036)

பிறகுபிஹாருல் அன்வார்எனும் நூலிலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

قدّامُ القائمِ موتانِ موتٌ احمرُ و موتٌ ابیضُ الموتُ الاحمر السّیف و الموتُ الابیضُ الطاعون۔۔۔

அதாவது இமாம் மஹ்தி (அலை) அவர்களின் அடையாளம் என்னவென்றால், அவர்களது வாழ்நாளில் இரண்டு வகையான மரணங்கள் நிகழும். அதில் ஒன்று சிவப்பு நிற மரணம். மற்றொன்று வெள்ளை நிற மரணம் ஆகும். சிவப்பு நிற மரணம் என்பது வாள் சண்டை ஆகும். வெள்ளை மரணம் என்பது பிளேக் நோயாகும். (பிஹாருள் அன்வார் எழுதியவர் பாக்கர் முஹம்மத் தக்கி முஹம்மது ஈரான் பாகம் 13 பக்கம் 156)

இதைத் தொடர்ந்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களும் தனது உண்மை தன்மைக்காக இறைவன் பிளேக் நோயை வெளிப்படுத்துவான் என்று  முன்னறிவித்துள்ளார்கள். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்கள் 6 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1898 ஆம் ஆண்டு தான் கண்ட ஒரு கனவின் விபரத்தை இவ்வாறு கூறுகின்றார்கள்;
இன்று பிப்ரவரி 6-1898 ஞாயிற்றுக் கிழமை அன்று கனவில் இவ்வாறு கண்டேன், “ இறைவனின் மலக்குமார்கள் பஞ்சாபில் பல்வேறு இடங்களில் கருமை நிறம் கொண்ட செடிகளை நடுகின்றனர். மேலும் அச்செடியானது மிகவும் அழகற்றதாகவும், கருமை நிறம் கொண்டதாகவும், வியப்பான மற்றும் உயரம் சிறியதாகவும் இருந்தது. நான் நட்டிக்கொண்டு வருபவர்களில் சிலரிடம் இது எவ்வாறான செடி என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மிக விரைவில் நாட்டில் பரவக்கூடிய பிளேக் நோய் செடி ஆகும்என்று கூறினார்கள்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இந்தக் கனவை எப்போது கண்டார்களோ அப்போது பஞ்சாபில் எங்கும் பிளேக் நோயிற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் முன்னதாகவே இந்த நோயைப் பற்றியும் அது பஞ்சாபில் பரவும் என்பதையும் வெளிப்படுத்தி விட்டான்.

இந்த முன்னறிவிப்பிக்கேற்ப ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு இந்தக் கனவு வெளிப்பட்டு சுமார் 4 ஆண்டிற்கு பிறகு 1902 ஆம் ஆண்டில் பரவலாக இந்த பிளேக் நோய் பஞ்சாபில் பரவியது. எந்த அளவுக்கு என்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் மூன்று நான்கு மரணம் நிகழ்ந்தது. அடக்கம் செய்வதற்கு கூட எவரும் கிடைக்காத நிலை இருந்தது. சில கிராமமே இந்த நோயினால் அழிந்து போனது.

இச்சூழ்நிலையில் அரசாங்கம் மக்களின் நலனிற்காக இந்த நோயின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்காகவும் தடுப்பூசி மற்றும் மாத்திரை மருந்திற்கான ஏற்பாட்டை செய்தது. ஊசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த நோயிற்கு இரையானார்கள். ஆனால் இறைவனின் வல்லமை எப்போதும் அவனது அடியாருடனும் அவனது ஜமாஅத்துடனும்  இருக்கும். குறிப்பாக இந்த நோய் இறைவனின் அடையாளம் என்பதை வெளிப்படுத்த்ம் வகையில் அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு உமக்கும் உம்மை சார்ந்து உமது வீட்டின் நான்கு சுவருக்குள் இருக்கும் மக்களுக்கும் இந்த ஊசியைப் போட வேண்டிய அவசியமில்லை" என்று அறிவித்துவிட்டான். (நான்கு சுவர் என்பதற்கு ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் தமது ஜமாஅத்தில் தம்மை பின்பற்றி உண்மை மற்றும் நேர்மையான முறையில் இருக்கும் நபர்கள் ஆவார்கள் என்பது இதன் பொருளாகும்). ஏனென்றால் இதன் மூலம் இந்த நோயானது இறைவன் தனது அடியானின் உண்மை.த் தன்மைக்காக அனுப்பிய தண்டனை என்பதை மக்கள் உணர வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவித்திருந்தான். இதைப் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தனது நூலாகியகஷ்தியே நூஹ்” (நூஹின் கப்பல்) என்ற நூலில் இவ்வாறு எழுதுகின்றார்கள்;

இதுவரை இவ்வுலகில் பயன்படுத்தப்பட்ட திட்டங்களில் இந்த மேலான அரசு பயன்படுத்துகின்ற தடுப்பூசி போடும் திட்டமே மிகச் சிறந்த அரசுத் திட்டமாகும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. மேலும் இந்தத் திட்டத்தால் பலன் உண்டானதையும் எந்த விதத்திலும் மறுக்க முடியாது. பௌதீக சம்பந்தமான வழிமுறைகளைக் கடைபிடிக்கும் எல்லா குடிமக்களும் இதன்படி செயல்பட்டு அவர்களின் உயிர் குறித்து அரசிற்கு இருந்து வரும் கவலையிலிருந்து அதனை விடுவிக்க வேண்டியது அவர்களின் முக்கியக் கடமையாகும். ஆனால் எங்களுக்கு வானத்தின் தடை மட்டும் இல்லாமலிருந்தால் குடிமக்களில் எல்லாரையும் விட முதலாவதாக நாங்களே எங்களுக்குக் தடுப்பூசி போடுமாறு கூறி இருப்போம் என்பதனை நன்மை புரிந்து வரும் இந்த அரசிற்கு மிக்க மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வானத்தின் தடை என்னவெனில், இக்காலத்தில் மனித குலத்துக்காக கருணை பற்றிய வானத்தின் ஓர் அடையாளத்தை வெளிப்படுத்த இறைவன் நாடியுள்ளான். ஆகவே, நீரும், உமது வீட்டின் நான்கு சுவருக்குள் இருப்பவரும், இறையச்சத்துடன் முழுமையாக உம்மை பின்பற்றியவாறு உமக்கு கீழ்ப்படிந்து உம்மோடு ஒன்றிவிடுகின்றவரும் ஆகிய எல்லாரும் பிளேக்கிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று இறைவன் என்னை நோக்கி கூறியுள்ளான்.............இது இறைவனின் தீர்ப்பாகும். இக்காரணத்தால் நாம் நமக்காகவும், நமது வீட்டின் நான்கு சுவருக்குள் இருக்கக் கூடிய எல்லாருக்காகவும் தடுப்பூசி போட எவ்வித அவசியமுமில்லை”.

அல்லாஹ்வின் அறிவிப்பிற்கிணங்க அவன் கொடுத்த வாக்கிற்கிணங்க ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும், அன்‌னாரை முழு மனதுடன் பின்பற்றி வந்தவர்கள் இந்தத் தடுப்பூசியை போடவில்லை. அல்லாஹ் தான் கொடுத்த வாக்கிற்கிணங்க அனைவரையும் இந்தக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றினான்.

அல்லாஹ் எங்களுக்கு விதித்திருப்பது தான் எங்களுக்கு ஏற்படும். அவன் எங்களுக்கு பாதுகாவலன் ஆவான். மேலும் நம்பிக்கையாளர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். (9:51)
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான்” (10:83)

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
இறை வேதங்களில் மிகத் தெளிவாக இதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது, வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்தில் நிச்சயமாக பிளேக் நோய் வெளிப்படும். இதைப் பற்றி இஞ்சிலிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் திருக் குர்ஆனிலும் அல்லாஹ் கூறுகின்றான்;

وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا

அதாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலமாகிய  இறுதி நாளைக்கு முன்னே எந்த ஊராரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை. (17:59)
(நூல்: நுஸூலுல் மஸீஹ் பக்கம் 118- முதல் பதிப்பு)

இந்த பிளேக் நோயைப் பற்றிதான், இந்த தாப்பத்துல் .அர்ழை பற்றிதான் இறைவன் குர்ஆனில் வாக்களித்துள்ளான். அதாவது இது இறுதி நாளன்று வெளிப்பட்டு மக்களை கடிக்கும். ஏனென்றால் அவர்கள் எமது (இறைவனது) அடையாளங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இறைவன் கூறுகின்றான்:

وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வெளிப்பட்ட பிறகு நாம் பூமியில் ஒரு பிராணியை வெளிப்படுத்துவோம். அது மக்களை கடிக்கும், புண்ணாக்கும். ஏனென்றால் மக்கள் இறை அடையாளத்தை ஏற்க மறுத்தார்கள். (27:83)
(பார்க்கவும்: சூரா அல்-நம்ல் ஜுஸ் 20- நூல்: நுஸூலுல் மஸீஹ் பக்கம் 38 முதல் பதிப்பு)

தாப்பத்துல் அர்ழ் அதாவது பிளேக் கிருமி வெளிப்படும் என்று இறைவன் கூறிய இந்த கூற்றில், “இந்த கிருமியானது முஸ்லிம்கள் மற்றும் அவர்களது ஆலிம்கள் உலகவாதியாக ஆகிவிடும்போது அவர்களே அந்த தாப்பத்துல் அர்ழாக மாறிவிடுவார்கள்என்ற கருத்தை மறைமுகமாக சுட்டி காட்டுகிறான். நாம் எமது பல்வேறு நூட்களில் இவ்வாறே எழுதி வந்துள்ளோம். அதாவது, இவ்வாறான இறையச்சமில்லாத  ஆலிம்கள் உலகவாதியாக மாறிவிடுகின்றார்கள். இவர்கள் தாப்பத்துல் அர்ழாக இருக்கின்றார்கள். தற்போது இந்த பதிப்பில் தாப்பத்துல் அர்லழ் என்பது பிளேக் கிருமியாகும் என்று  எழுதியுள்ளோம். இந்த இரு விஷயங்களையும் எவரும் முரண்பாடாக கருத வேண்டாம். திருக்குர்ஆன் பல ஞானங்களை கொண்டதாகும். பல்வேறு கோணங்களில் அதன் பொருள்கள் (அர்த்தங்கள்) இருக்கின்றன. அவை ஒன்று மற்றொன்றுக்கு முரண்பட்டவை அல்ல.
(நுஸூலுல் மஸீஹ் பக்கம் 43 முதல் பதிப்பு)

நினைவில் கொள்ளுங்கள், “வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்தில் பிளேக் வெளிப்படும் என்று அஹ்லே சுன்னத்தின் ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் இதர நூட்களிலும் ஷியாக்களின் நூலாகிய அபி ஜஅஃபர் முஹம்மது இப்னு அலி (ஹிஜ்ரி காலம் 381) எழுதியஇக்மாலுத்தீன்எனும் நூலிலும் விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளது. மாறாக ஷியாக்கள் மதிக்கும்இக்மாலுத்தீன்எனும் நூலில் பக்கம் 348 இல் இவ்வாறு எழுதுப்பட்டுள்ளது,” இதுவும் (தாப்பத்துல் அர்ழ்) அவரின் (வாக்களிக்கப்பட்ட மஸீஹின்) ஓர் அடையாளமாகும். இது வெளிப்படும் முன்னே அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். உலகத்தில் கடுமையாக பிளேக் வெளிப்படும்.
(நுஸூலுல் மஸீஹ் பக்கம் 18-19 முதல் பதிப்பு)

இந்த முன்னறிவிப்பு மிகத் தெளிவான முறையில் நிறைவேறி விட்டது. இது இமாம் மஹ்தியாகவும், வாக்களிக்கப்பட்ட மஸீஹாவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் வாதத்திற்கு உண்மையாக இருப்பதுடன் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மைக்கும் சான்று பகர்கின்றது. அல்லாஹ் உண்மையை புரியும் நல்வாய்ப்பை அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.

https://www.alislam.org/library/books/revelation/part_6_section_5.html
https://en.wikipedia.org/wiki/Prophecies_of_Mirza_Ghulam_Ahmad#The_Plague




No comments

Powered by Blogger.