ஜெனரல் ஜுல் ஃபிகார் அலி புட்டோவின் மரணமும் - ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பும்
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பல்வேறு முன்னறிவிப்புகளை தன் புறமிருந்து அவர்களின் உண்மைத்துவத்திற்காக அறிவித்துள்ளான். அதில் சில முன்னறிவிப்புகள் அவர்களின் காலங்களிலேயே நிறைவேறின. இன்னும் சில அவர்களின் காலத்திற்கு பிறகு நிறைவேறியவாறு இருக்கின்றன. இவ்வாறான முன்னறிவிப்புகளில் ஒன்றுதான் பாகிஸ்தானின் ஜெனரலாக இருந்த புட்டோவின் இழிவான மரணம் ஆகும்.
ஜெனரல் புட்டோ சம்பந்தமாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த முன்னறிவிப்பை நாம் பார்ப்பதற்கு முன் ஜெனரல் புட்டோவை பற்றி நாம் சற்று அறிய வேண்டியதிருக்கிறது. அவன் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தோடு எவ்வாறு எந்த அளவு நடந்து கொண்டான் என்பதை நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.
இவர் பாகிஸ்தானை தமது சுய கொள்கையை கொண்டு கூறு போட்டுக் கொண்டிருந்த, கொண்டிருக்கக்கூடிய மூட முல்லாக்களின் கூற்றை கேட்டு சுய புத்தி இல்லாமல் மார்க்க அறிவில்லாமல் பாகிஸ்தானில் வசித்து வந்த இதர அஹ்மதி சகோதரர்களை ஒதுக்கி வந்தார். குடியுரிமையை பறித்து வந்தார். அஹ்மதிகள் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் கூற்றிற்கிணங்க செயல்பட்டு வருவதை பார்த்து வந்த முல்லாக்கள் இவர்களை முஸ்லிம் இல்லை என்று கூறி முழு உரிமையையும் பறித்து இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெனரல் மற்றும் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த ஜுல் ஃபீகார் அலி புட்டோ வை அணுகி அவர் மூலம் அரசியல் அமைப்பு ரீதியாக அஹ்மதிகள் முல்ஸிம் இல்லை என்ற ஃபத்வாவை பெற்றனர். இந்த அடிப்படையில் ஜெனரல் ஜுல் ஃபிகார் அலி புட்டோ செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி 1974 ஆம் அன்று அஹ்மதிகள் முஸ்லிம் இல்லை என்ற அறிவிப்பை பாகிஸ்தான் முழுவதும் அறிவித்தார். இதன் அடிப்படையில் அங்கு வசித்து வந்த ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் நேசரும் சீடருமாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை ஏற்று உண்மையான இஸ்லாத்தில் இருந்து வந்த அஹ்மதி முஸ்லிம்களை அநியாயமாக சித்ரவதை செய்தும் கொடுமையும் இழைத்து வந்தனர்.
ஆக இந்த மூட முல்லாகளின் பேச்சை கேட்டு அவர்களுக்கு அஹ்மதிகளுக்கெதிராக செயல்பட முழு உரிமையையும் கொடுத்த ஜெனரல் ஜுல் ஃபீகார் அலி புட்டோவின் இழிவான மரணத்தை குறித்து அன்றே அதாவது 1891 ஆம் ஆண்டே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் முன்னறிவித்திருந்தான். அந்த முன்னறிவிப்பை பற்றி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"ஒரு நபரின் மரணத்தை குறித்து இறைவன் தஹஜ்ஜி எண்ணிக்கையின் அடிப்படையில் எனக்கு முன்னறிவித்தான் அதனின் அசல் வார்த்தை இதுவாகும்;
کَلْبٌ یَمُوْتُ عَلٰی کَلْبٍ
(கல்புன் யமூது அலா கல்பின்) அதாவது அவன் நாயாக இருக்கிறான். மேலும் நாயின் எண்ணிக்கையில் மரணம் அடைவான். இதன் எண்ணிக்கை அதாவது கல்ப் என்ற சொல்லின் (தஹஜ்ஜி) எண்ணிக்கை 52 வருடத்தை சுட்டி காட்டுகிறது. அதாவது அவனது வயது 52 ஐ தாண்டாது. 52 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அதே வருடத்திற்குள் மரணம் அடைவான்." (இஸாலாயே அவ்ஹாம் பக்கம் 186-187, ரூஹானி கஸாயீன் பாகம் 3 பக்கம் 190)
இப்போது நாம் இந்த கல்ப் என்ற சொல் ஹர்ஃபே அப்ஜதின் அடிப்படையில் எந்த எண்ணை குறிக்கிறது எவ்வாறு குறிக்கிறது என்பதை பார்ப்போம்.
கல்ப் என்ற சொல்லில் காஃப்+லாம்+பா என்ற மூன்று எழுத்து அமைந்துள்ளது. இதில் வரும் எழுத்துக்கு ஹர்ஃபே அப்ஜதின் அடிப்படையில் காஃப் என்ற எழுத்துக்கு 20 மதிப்பும், லாம் என்ற எழுத்துக்கு 30 மதிப்பும், பா என்ற எழுத்துக்கு 2 மதிப்பும் தரப்பட்டுள்ளது. ஆக 20+30+2= 52 ஆகிறது.
இப்போது நாம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்பின் படி ஜெனரல் ஜுல் ஃபிகார் அலி புட்டோ தனது வயதில் 52 ஐ கடந்தாரா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்பது தெளிவாகிறது. அவர் இறந்த போது அவரது வயது 51 வயது மூன்று மாதம் ஆகும். அதாவது அவர் பிறந்தது 1928 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆகும். அவர் இறந்தது ஏப்ரல் 1979 ஆம் வருடம் ஆகும். ஆக இவ்வாறு 51 வயது மூன்று மாதம் இவனின் வயதாக அமைகிறது. ஆக முன்னறிவிப்பின் அடிப்படையில் தனது 52 வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துதான் இருப்பார் அவரது மரணம் நிகழும் என்ற முன்னறிவிப்பு மிகவும் தெள்ள தெளிவாக நிறைவேறியுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.
எந்த அரசியலில் எந்த பவரை வைத்து கொண்டு ஜெனரல் ஜுல் ஃபிகார் அலி புட்டோ அஹ்மதிகளை இவர்கள் முஸ்லிம் இல்லை என்று சொல்லி மூட முல்லாகளின் மூலம் கொடுமை இழைக்க செய்து வேடிக்கை பார்த்தானோ அதே பவர் அதே அரசியல் மூலம் இவர் 1979 இல் தனது அரசியல் எதிரியை கொலை செய்யத் தூண்டியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இல்லா மாஷா அல்லாஹ்.
இவ்வாறு அவர்கள் தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டனர், அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று. (65:10)
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது. (27:53)
அல்லாஹ் தனது அடியானையும் தனது அடியானின் ஜமாஅத்தையும் என்றும் கைவிடுவதில்லை. அவர் நேரத்திற்கேற்ப தனது அடியான் மற்றும் ஜமாஅத்திற்கு அநியாயம் செய்து வருபவர்களை தனது தண்டனை மூலம் பிடித்து வருகின்றான். இது அல்லாஹ்வின் நடைமுறையாகும். அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றமும் காண முடியாது. (குர்ஆன்)
Post a Comment