அனைத்து சர்வ சமய மாநாடும் - நிறைவேறிய ஹஸ்ரத் அஹ்மத் (அலை)அவர்களின்முன்னறிவுப்பும்
ஹஸ்ரத் அஹ்மத் –அலை- அவர்கள் தன்னை வாக்களிக்கப்பட்ட நபியாக அல்லாஹு அனுப்பியுள்ளான் என்று அறிவித்ததாலும், ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்று அல்லாஹு அறிவித்தான் என்று கூறியதாலும், உலகெங்கும் அன்னாருக்கு பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியது. இப்படி ஒரு சூழ்நிலையில் சமுதாய ஒற்றுமைக்காக பாடுபட்ட சுவாமி ஷோகன் சந்திரா அவர்கள் அனைத்து சமய மாநாடு ஒன்று நடத்த திட்டமிட்டார்கள்.
சமுதாய ஒற்றுமைக்காக பாடுபட்ட சுவாமி ஷோகன் சந்திரா அவர்கள் ஒரு பிரசுரத்தின் மூலம் இவ்வாறு கூறுகிறார்கள்:
எந்த மதம் உண்மையானது என்பதை தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிக்கிறது. இது தொடர்பான எனது உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது. எல்லோரும் தத்தமது சமயத்தின் சிறப்பம்சத்தை எடுத்துரைப்பதன் மூலம் உண்மையான சமயத்தின் சிறப்பு, சான்றோர் நிரம்பிய ஓர் அவையில் வெளிப்பட்டு, அதுவே உண்மையான மார்க்கம் என்பதற்கான சான்றுகளையும் விளக்கங்களையும் புரிந்துகொள்ளவும் வழி ஏற்படும் என்றும், இதுவே இந்த மாநாட்டின் உன்னதமான நோக்கம் என்றும் குறிப்பிட்டார்கள். இம்மாநாட்டின் பேசவேண்டிய நிபந்தனை என்னவென்றால் அவரவர்கள் தங்கள் வேத நூலின் அடிப்படையில் மட்டுமே பேசவேண்டும், வேறு எந்த சான்றுகளையும் காட்டக்கூடாது என்பதாகும்.
உலகப் புகழ் பெற்ற அனைத்து சமய மாநாடு நடைபெற்ற இடம் டவுன் ஹால், லாஹூர், பஞ்சாப். நாள்:: 1896 டிசம்பர் 26,27,28 ஆகிய 3
நாட்கள். இந்த மாநாட்டில் பேசவேண்டிய 5 தலைப்புகள்:
1.மனிதனின் இயல்பான, நல்லொழுக்க, ஆன்மீக நிலை என்ன?
2.மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை என்ன?
3.இவ்வுலக வாழ்வின் நோக்கம் என்ன? அதை அடைவதற்குரிய வழிகள் யாவை?
4.ஆன்மீகச் சட்டத்தைப் பின்பற்றி நடப்பதால்
இம்மையிலும் மறுமையிலும் விளையும் பயன்கள் யாவை?
5.இறைஞானம் பெறுவதற்கான வழிகள் யாவை?
இந்த மாநாட்டின் தலைவர் சுவாமி சோகம் சந்திரா ஆவார்கள். மாநாட்டுக் குழுவில் இடம்பெற்றவர்களின் பெயர் வருமாறு:
1. பஞ்சாப் தலைமை நீதிமன்ற நீதிபதி ராவ்
பகதூர் பாபு பார்தால் சந்த்.
2.. லாகூர் நீதிமன்ற தலைமை நீதிபதி கான்
பகாதோர் ஷேக் ஹுதா பக்ஸ்.
3. ஜம்மு தலைமை நீதிமன்ற வழக்கறிஞர் ராவ்
பகதூர் பண்டிட்ராதாகிரிஷ்ணன். 4. காஷ்மீர் அரசவை மருத்துவர் ஹஸ்ரத் மௌலானா
ஹக்கீம்நூருத்தீன்(ரலி). 5. ஜஹ்லம் நகரின் குடியிருப்பு அதிகாரி பானி
தாஸ் MA.
6. லாகூர் காலிஸத் செயற்குழு செயலாளர்
சர்தார் ஜவஹர் சிங்.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு, தங்கள் கருத்தை தெரிவிக்க எல்லா சமயத்தை
சார்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்தை சார்ந்த பல புகழ் பெற்ற ஆலிம்களும் கலந்து கொண்டு தன் சார்பாக
கட்டுரை படித்தார்கள். இம்மாநாட்டில் அஹ்மத் –அலை- அவர்களுக்கும் அழைப்பு விடுக்கபட்டதை அடுத்து அவர்கள் அதற்கு சம்மதம்
தெரிவித்தார்கள்.
மேலும் வரலாற்றில்
இடம்பெறக்கூடிய மாபெரும் ஒரு முன்னறிவிப்பை அஹ்மத் –அலை- அவர்கள் முன்னரே வெளியிட்டார்கள்.
அந்த முன்னறிவிப்பு என்னவென்றால் இம்மாநாட்டில்,
தான் வெளியிடப்போகும்
கட்டுரை தொடர்பாக, ஹஸ்ரத் அஹ்மத் –அலை- அவர்கள் ‘’உண்மையைத் தேடுவோருக்கு ஓர் மகத்தான நற்செய்தி’’
என்ற தலைப்பில்
ஒரு மாதத்திற்கு முன்னரே ஒரு பிரசுரம் வெளியிட்டார்கள். அந்த பிரசுரம் மூலம்
அஹ்மத் –அலை- அவர்கள் வெளியிட்ட செய்தியின்
சுருக்கம்:
‘’இந்த மாநாட்டில் படிக்கவிருக்கும் இந்த
கட்டுரை சாதாரண மனித முயற்சியால் விளைந்ததன்று. மாறாக இது இறைவனின் அடையாளங்களுள் ஓர் அடையாளமும், அவனுடைய தனிப்பட்ட உதவியால் எழுதப்பட்டதுமாகும். திருக்குரானின் அழகையும் அதன் உண்மைகளையும்
எடுத்துக்காட்டி, உண்மையிலேயே அது இறைவனின் வார்த்தைகள் என்பதையும், அது எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹுவால் அருளப்பட்ட தூய நூலாகும் என்பதையும் இந்த கட்டுரை நண்பகல் சூரியனைப் போன்று நிரூபிக்கின்றது. இதனை படிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு புதிய நம்பிக்கை தமக்குள் உருவாவதையும் ஒரு
புத்தொளி தமக்குள் ஒளிர்வதையும் உணர்வார்கள் என்றும், திருக்குரானின் விரிவான விளக்கவுரை ஒன்றை பெற்றுக்கொள்வார்கள் என்றும் நான்
திடமாக நம்புகிறேன். எனது இந்த கட்டுரை மனித பலவீனங்களிலிருந்தும்
பெருமையடித்தலிலிருந்தும் தேவையற்ற அறிக்கையிலிருந்தும் தூய்மையானதாகும். மக்கள்
மீது நான் கொண்டுள்ள அனுதாபமே இந்த கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது.......எல்லாம் அறிந்த இறைவன், எனது இந்த கட்டுரை ஏனைய எல்லா கட்டுரைகளை விட தலை சிறந்தது என அறிவிக்கப்படும் என எனக்கு இல்ஹாம்
[இறை அறிவிப்பு] மூலம்
தெரிவித்துள்ளான். ஏனைய சமயத்தவர் இந்த கட்டுரையை முழுமையாகக் கேட்டால்,
அவர்கள்
வெட்க்கப்படும் அளவில் உண்மையும் ஞானமும் தெளிவும் அதில்
நிறைந்து ஒளிவீசுவதை அவர்கள்
காண்பார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ, ஆரியர்களாகவோ, சனாதன தர்மத்தை சார்ந்தவர்களாகவோ அல்லது வேறு எவராக இருந்தாலும் அவர்களால் இவற்றுக்கு இணையான முழுமைபெற்ற போதனைகளை
தனது மறைநூலிலிருந்து காட்டவே
இயலாது. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவன் தனது தூய
மறை நூலின் மகிமையை அந்நாளில் வெளிப்படுத்தத்
தீர்மானித்துள்ளான். இதுகுறித்து ஒரு ஆத்மீக காட்சியில்
(கஷ்ப்) இவ்வாறு கண்டேன். என்னுடைய வீட்டின் மீது மறைவான ஒரு கை பதிந்திருந்தது. அந்த கை என் வீட்டை தொட்டதால் என் வீட்டிலிருந்து ஒரு
பிரகாசமான ஒளியொன்று தோன்றி எல்லா
திசைகளிலும் பரவியது.
அப்போது என் அருகில் நின்றிருந்த ஒருவர் ‘’அல்லாஹு அக்பர்; கரீபத் கைபர்’’ [அல்லாஹு மிகப் பெரியவன்; கைபர் வீழ்ந்தது ] என உரத்த குரலில் அறிவித்தார். இதற்குரிய விளக்கம் என்னவென்றால், வீடென்பது இறையொளி இறங்குகின்ற என் இதயமாகும். பிரகாசமான ஒளியென்பது திருக்குரானின் எளிமையான அழகிய தத்துவங்களாகும். கைபர் என்பது இணைவைத்தலும் பொய்யும் நிரம்பியுள்ள, மனிதனை இறைவனின் நிலைக்கு உயர்த்துகின்ற அல்லது இறை பண்புகளை அவற்றிற்குரிய முழுமையான உன்னத நிலையிலிருந்து தாழ்த்துகின்ற நெறி தவறிய சமயங்களாகும். என்னுடைய இந்த கட்டுரை பரவலாக வெளியிடப்படுமானால் பொய்யான சமயங்களின், உண்மைக்குப் புறம்பான நிலை தெரியவரும் என்பதும் திருக்குர்ஆனின் உண்மை உலகெங்கும், படிப்படியாக அதன் உச்சத்திற்கு வரும் வரை பரவும் என்பது இக்காட்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக காட்சியிலிருந்து எனது உள்ளம் ஓர் இறையறிவிப்பின் பக்கம் திரும்பியது. அப்போது கீழ்காணும் இறையறிவிப்பை பெற்றேன். ‘’இன்னல்லாஹ மஅக்க இன்னல்லாஹ யக்கூமு அயினமா குந்த’’ இறைவன் உன்னுடன் இருக்கின்றான்; நீ இருக்கின்ற இடத்திலேயே அவனும் இருக்கின்றான்.....’’

மேற்சொன்னவை அஹ்மத் –அலை- அவர்கள் மாநாடு நடைபெறுவதற்கு ஒரு
மாதம் முன்பே பிரசுரம் மூலம் வெளியிட்டார்கள். குறித்த நாளில் மாநாடு துவங்கியது. அஹ்மத் –அலை- அவர்கள் பிரசுரம் மூலம்
குறிப்பிட்டபடியே
அன்னாரின் கட்டுரைதான் முதலிடத்தைப் பெற்றது. அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ‘லாகூர் சிவில் மிலிடரி கெஜட்’ என்ற பத்திரிகை இவ்வாறு எழுதுகிறது,
‘’எல்லா சமயங்களை சார்ந்த பலரும் குறிப்பாக
இஸ்லாத்தை சார்ந்த பல பெரியோர்களும் இம்மாநாட்டில் உரையாற்றினார்கள். ஆனால் அங்கு நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளில் ஒரே ஒரு சொற்பொழிவு மட்டுமே மேற்கண்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும்
முழுமையான பதில்களை உள்ளடக்கியதாக
விளங்கியது....
கருத்தாழமிக்க அந்த சொற்பொழிவை பாராட்டாதவர் எவரும் அந்த அவையில் இருக்கவில்லை. இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் கூட இந்த கட்டுரையை பாராட்டியது இக்கட்டுரையின் சிறப்பிற்கு ஒரு சான்றாகும்’’ இம்மாநாட்டின் செயலாளராக பணியாற்றிய வழக்கறிஞர் தன்வத் ராய் BA. LLB இம்மாநாட்டு பற்றிய தமது அறிக்கையில் இக்கட்டுரை பற்றி இவ்வாறு எழுதுகிறார:
‘’பன்டிட் கோர்தன் தாஸ் அவர்களின் சொற்பொழிவு முடிவுற்றதும் அரை மணி நேர இடைவெளி விடப்பட்டு கூட்டம் தொடர்ந்து நடைபெற இருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு இஸ்லாமிய சமயத்தின் சார்பில் புகழ் பெற்ற ஒரு நல்லாறிஞரின் பேச்சை கேட்கவேண்டியதிருந்ததால் மக்கள் தமது இடங்களை விட்டு அகலாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர். இந்த சொற்பொழிவுக்கு தரப்பட்ட நேரமாகிய நண்பகல் 1.30 மணிக்கு இன்னும் அதிக நேரம் இருந்தது. எனினும் மாநாடு நடைபெற்ற இஸ்லாமிய கல்லூரியின் விசாலமான அரங்கம் மக்களால் நிரம்பிவிட்டது. அச்சமயம் மட்டும் அங்கிருந்தோரின் எண்ணிக்கை ஏழாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரை இருக்கும். அரங்கிலிருந்த இருக்கைகள் நிரம்பிவிட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கொண்டு கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாபின் பல்வேறு தலைவர்கள், செல்வந்தர்கள், ஆலிம்கள், பண்டிதர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இன்னும் பல்வேறு துறையை சேர்ந்த உயர் தகுதி பெற்ற மக்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இவர்களெல்லாம் இவ்வாறு ஓரிடத்தில் ஒன்று கூடி நான்கைந்து மணிநேரம் ஆர்வத்துடனும், பொறுமையுடனும் இந்த சொற்பொழிவை கேட்டதிலிருந்து இந்த கட்டுரையின் மேன்மையை புரிந்துகொள்ளலாம்.
இந்த சொற்பொழிவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் 2 மணி நேரமே ஆகும். எனினும் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் மற்றும் பொதுமக்களின் உளப்பூர்வமான விருப்பத்திற்கு இணங்க இக்கட்டுரை படித்து முடிக்கும் வரை மாநாட்டு நேரம் நீட்டிக்கப்பட்டது.
மேலும் மௌலவி யூசுப் முபாரக் அலி அவர்கள் தமக்கு தரப்பட்ட நேரத்தையும் மேற்கண்ட கட்டுரை வாசிப்பதர்க்காக வழங்கிவிட்டார். மக்கள் இதனை ஆரவாரத்துடனும், நன்றியுடனும் வர்வேற்றனர். மாலை நாலரை மணிக்கு முடியவேண்டிய மாநாடு ஐந்தரை மணியளவில் முடிவுற்றது. ஏனெனில் மேற்கண்ட கட்டுரை 4 மணிநேரம் வாசிக்கபட்டது. இதன் காரணமாக மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.
வியப்பிற்குரிய இன்னொரு செய்தி என்னவென்றால் இக்கட்டுரை எழுதியவர் எல்லா கட்டுரைகளை விட தனது கட்டுரை தான் சிறப்பாகவும், முதலிடத்தையும் பெறும் என்று இறைவனே அறிவித்துள்ளதாக கூறி, பிரசுரம்வெளியிட்டுள்ளார்.’’ராவல்பிண்டியிலிருந்து வெளி வந்த ‘சவ்திவீன் ஷதி’ என்ற ஏடு இவ்வாறு கூறுகிறது:
‘’இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளில் மாநாட்டின் ஆன்மாவாக விளங்கியது காதியானை சார்ந்த மிர்சா குலாம் அஹ்மத் அவர்கள் எழுதிய சொற்பொழிவாகும். உள்ளத்தை தொடும் இந்த சொற்பொழிவை நாங்கள் எங்கள் வாழ்நாளில் கேட்டதேயில்லை என பலர் கருத்து தெரிவித்தனர். இந்த சொற்பொழிவைத்தவிர மாநாட்டில் பேசிய எந்த கட்டுரையும் மாநாட்டுக்குழு கேட்டிருந்தபடி எல்லா கேள்விக்கும் விடை அளிக்கவில்லை.... எந்த பேச்சாளர்களின் உரையிலும் உயிரில்லை; மிர்சா சாகிபின் சொற்பொழிவில் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் முழுமையான தெளிவான பதில்கள் இருந்தது. நாங்கள் மிர்சா சாகிபின் சீடர்கள் அல்ல. அவருடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இருந்ததில்லை. மனசாட்சியை மதிக்கின்ற தூய்மையான இயல்புள்ள எவரும் நாங்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்வார்.
கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் மிர்சா சாஹிப் திருக்குரானிலிருந்து பொருத்தமான விடையை தந்தார். இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கையை விளக்குகிறபோது, அறிவுபூர்வமான சான்றுகளாலும் தத்துவரீதியான விளக்கங்களாலும் தமது சொற்பொழிவுக்கு அவர் மெருகூட்டினார். இறைவன் இருக்கிறான் என்பதற்கு முதலில் பகுத்தறிவு ரீதியிலான சான்றுகளை தந்து பின்னர் இறைவனின் வசனங்களையே
அதற்கு அவர் ஆதாரமாகக் காட்டியது தம்மை வியப்படைய வைத்தது. மிர்சா சாஹிப் பல்வேறு பிரச்சினைகளுக்கு திருக்குர்ஆனின் தீர்வுகளையும் போதனைகளையும் மட்டும் வழங்கவில்லை. மாறாக திருக்குர்ஆனின் சொற்களில் பொதிந்துள்ள ஆழிய தத்துவஞானத்தையும் விளக்கியுள்ளார். சுருக்கமாக சொல்லப்போனால் மிர்சா சாஹிப் அவர்களால் எழுதப்பட்ட சொற்பொழிவே எல்லாவகையிலும் முழுமைபெற்றதாகவும் அனைவரின் உள்ளத்தை கவரக்கூடியதாகவும் இருந்தது.
அதில் மிக நுட்பமான உண்மைகளும் இறை ஞானத்தின் இரகசியங்களும் ஒளிவீசின. இறைவன் இருக்கிறான் என்பதை அவர் விளக்கிய விதம் அதற்கு அவர் தந்த உயிரோட்டமான சான்று எல்லா மதங்களை சார்ந்தவர்களையும் வியப்பிலாழ்த்தியது. ..... தேன்கூட்டை தேனீக்கள் எவ்வாறு மொய்க்குமோ அவ்வாறே மிர்சா சாஹிப் எழுதிய உரையில் மக்கள் ஒன்றிவிட்டனர். ... ஆனால் மௌல்வி முஹம்மத் ஹுசைன் பட்டாலவி போன்றவர்கள் பேசும்போது மக்கள் எழுந்து சென்று கொண்டே இருந்தனர், வழக்கமான முல்லாக்களின் சிந்தனையையே அது எதிரொலித்தது. (சவ்திவீன் ஷதி 01.02.1897)
இவ்வாறு நூற்றுக்கணக்கான சாட்சியங்களும் புகழாரங்களும் அஹ்மத் –அலை- அவர்களின் கட்டுரையின் சிறப்பை எடுத்துக்காட்டியது. இதைப் போல் பல பக்கங்களில் எழுதலாம்.
அஹ்மத் –அலை- அவர்கள் உண்மையாளர் இல்லை என்றால், அவர்கள் முன்னறிவித்தபடி கட்டுரை முதன்மை இடத்தை பெறுமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். இஸ்லாம் தரப்பிலிருந்தும் பல ஆலிம்கள் கட்டுரை படித்தார்கள், ஆனால் அஹ்மத் –அலை- அவர்கள் எழுதிய கட்டுரை தான் எல்லோரும் பாராட்டத்தக்கதாக அமைந்தது. அப்படி அமையும் என்று முன்னரே அல்லாஹு அறிவித்துள்ளான் என்று பிரசுரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் இது ஹஸரத் அஹ்மத் –அலை- அவர்கள் உண்மையாளர் என்பதற்கு சிறந்த சான்றில்லையா?
அஹ்மத் –அலை- அவர்களால் எழுதப்பட்ட அந்த கட்டுரை தமிழிலும் ‘’இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்’’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த கட்டுரை சுமார் 150 மொழிகளுக்கு மேல் வெளிவந்துள்ளது. இன்று உலகளவில் இது பிரபலமாக உள்ளது என்பதற்கும் பல சான்றுகளும் உள்ளது. ஆனால் இந்த கட்டுரையைத் தவிர உள்ள ஏனைய கட்டுரைகள் எல்லாம் இப்போது எங்கே? எல்லா கட்டுரைகளும் இன்று விலையில்லாமல் போய்விட்டதன் காரணம் என்ன? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒருவர் தன்னை நபி என்றும், அல்லாஹு என்னிடம் பேசுகிறான் என்றும் வாதம் செய்துள்ளார். மேலும் இந்த குறிப்பிட்ட கட்டுரையைப் பற்றி முன்னறிவிப்பும் செய்கிறார். அவர் சொன்னதைப் போன்றும் நடைபெறுகிறது. இது ஒரு சாதாரண மனிதரால் சத்தியமாகக் கூடியதா? திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹஸ்ரத் அஹ்மத் –அலை- அவர்கள் எழுதிய இந்த கட்டுரை அன்னார் உண்மையாளர் என்பதற்கு ஒரு மாபெரும் சான்றாக திகழ்கின்றது.

இந்த நூலை ஆங்கிலத்தில் படிக்க
: இங்கே கிளிக் செய்யவும்
மலையாளத்தில் வாசிக்க : இங்கே கிளிக் செய்யவும்
விரைவில் தமிழ் மொழியாக்கம்
நெட்டில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...
Post a Comment