பொய்வாதி அலெக்ஸாண்டர் டூயியின் அழிவும்-ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பும்


அலெக்ஸாண்டர் டூயியின் முடிவு கிறித்தவர்களுக்கு பொதுவாகவும் அமெரிக்கர்களுக்கும் மேற்கத்திய உலகுக்கும் குறிப்பாகவும் ஓர் அடையாளமாகும். ஸ்காட்லேண்டில் பிறந்த டூயி அமரிக்க குடியுரிமை பெற்று 1892-ல் பிரச்சாரப் பணியை தொடங்கினார். அற்புத சுகமளிப்பவராக பிரபலமான டூயியை சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. 1901 –ம் ஆண்டு டூயி இயேசுவின் இரண்டாவது வருகைக்கு முன்பாக இறைவன் தன்னை எலியாவாக அனுப்பியுள்ளதாக வாதித்தார். எவ்வாறு இயேசுவின் முதல் வருகையின் சற்று முன்பாக எலியா வந்தாரோ அதைப்போன்று இரண்டாம் வருகையின் எலியா தாமே என வாதிட்டார்.

இயேசுவின் வருகையை ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவரது இந்த வாதத்தினால் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அவர் ஒரு இடத்தை வாங்கினார் அந்த இடத்தில்தான் இயேசு இறங்கப்போவதாக அறிவித்தார். மக்கள் ஆர்வத்துடன் அங்கு நிலம் வாங்கி வீடுகளை கட்ட அது ஒரு நகரமாக மாறியது. டூயி அதனை சீயோன் நகரம் என அழைத்தார். அந்த நகரை டூயி ஒரு முடிசூடா மன்ன்னாக ஆண்டுவந்தார். விரைவிலேயே அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. அவர் தமது ” ஊழியக்கார்களை” கிறத்தவ நாடுகளுக்கு பிரச்சாரத்திற்காக அனுப்பிவைத்தார்.

இஸ்லாத்தின் மீது கடுமையாக பகையுணர்வு கொண்டிருந்நத டூயி அதனை பழித்துப் பேசிவந்தார். 1902 –ல் முஸ்லிம்கள் கிறித்தவர்களாக மாறாவிட்டால் அவர்கள் மீது அழிவு விதிக்கப்பட்டுள்ளது என்று முன்னறிவிப்பு செய்தார். 5 ஆகஸ்ட் 1903 –ல் சீயோனின் கைகளில் இஸ்லாத்தின் முடிவு ஏற்படும் என்று எழுதியிருந்தார்.

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஆண்ட்ரூ "நியூஸ் ஆஃப் ஹீலிங்க்" என்ற தனது ஒரு பத்திரிக்கையில் இவர் இவ்வாறு எழுதுகின்றார்:
"இஸ்லாம் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிந்து விடுகின்ற அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்று நான் துஆ செய்கின்றேன். தேவனே நீ இவ்வாறே செய்வாயாக. தேவனே இஸ்லாத்தை அழித்துவிடுவாயாக." 


இவர் 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அன்று தனது இதே பத்திரிக்கையில் இவ்வாறும் எழுதியிருந்தார்;
"நான் உண்மையான் நபி இல்லை என்றால் இந்த பூமியில் வேறு எவரும் தேவனின் உண்மையான நபி இல்லை"

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் அதற்கான பதிலை ஒரு பிரசுரமாக வெளியிட்டார்கள். அதில் டூயி உலக முஸ்லிம்களின் அழிவை குறித்து முன்னறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தாம் இறைவன் புறமிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹாக வந்திருப்பதாகவும் டூயி தன்னுடன் ஒரு பிரார்த்தைனை போட்டிக்கு வரவேண்டும் என்றும் அதன் முடிவை உலகம் அறிந்து கொள்ளும் என்றும் அறிவித்திருந்தார்கள்.

டூயியின் பிரபலத்தின் காரணத்தால் இந்த பிரசுரம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பத்திரிக்கைகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அமெரிக்காவிலும் ஐரொப்பாவிலும் ஏராளமான பத்திரிக்கைகள் இது குறித்து பேசின. சுமார் 40 பத்திரிக்கைகள் தமது நகலை காதியானுக்கும் அனுப்பியிருந்தன.

இந்த விளம்பரத்தின் விளைவாக சுமார் 25 இலட்சம் மக்கள் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் பிரார்த்தனை போட்டிக்கான சவாலை குறித்து அறிந்தனர்.

டூயி இந்த பிரசுரத்திற்கு எந்த பதிலையும் தரவில்லை. ஆனால் இஸ்லாத்தை
தாக்கி பேசுவதில் மேலும் முனைப்பு காட்டினார். டூயி தனது பகைமையில் முன்னேறிச் செல்வதை கண்ட ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் 1903 –ல் மற்றொரு பிரசுரம் வெளியிட்டார்கள். அது டூயி மற்றும் பிகாட்டை குறித்த முன்னறிவிப்புக்ள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. பிகாட் என்னும் இஸ்லாத்தின் எதிரி இங்கிலாந்தை சேர்ந்தவராவார். அந்த பிரசுரத்தில் ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்டுவதற்காகவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாகவும். அமெரிக்க மக்களுக்க்கு தமது உண்மைக்கான ஒரு அடையாளத்தை காட்ட விரும்புவதாகவும் கூறியிருந்தார்கள்.

அடையாளம் என்னவெனில் டூயி தன்னுடன் பிரார்த்தனை போட்டிக்கு வந்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த சவாலை ஏற்றுக் கொண்டால் தனது வாழ்நாளிலேயே டூயி மிகுந்த துயரத்துடனும் வேதனையுடனம் மரணித்துவிடுவார் என்று கூறியிருந்தார்கள். மேலும் டூயிக்கு ஏற்கனவே இந்த சவால் தரப்பட்டதாகவும் டூயி அதனை ஏற்று கொள்ளவில்லை என்றும் மேலும் அவருக்கு 7 மாத கால அவகாசம் தரப்படுவதாகவும் இந்த கால கட்டத்திற்குள் டூயி தமது பதிலை தர வேண்டுமெனவும் கூறியிருந்தார்கள். மேலும் அந்த பிரசுரத்தின் இறுதிப்பகுதியில் டூயியின் சீயோனுக்கு அழிவு விதிக்கப்பட்டுள்ளது என்றும் இறைவா நீ பிகாட், டூயியின் ஏமாற்றுத்தனத்தை மக்களுக்கு வெளிப்பட செய்வாயாக என்றும் எழுதியிருந்தார்கள்.


இந்த பிரசுரமும் அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும் மிகப் பரந்த அளவில் வெளியிடப்பட்டது நாளிதழ்களும் பத்திரிக்கைகளும் இது குறித்து செய்தி வெளியிட்டன. பிரிட்டனின் கிளாஸ்கோ ஹெரால்ட், அமெரிக்காவின் நியுயார்க் கமர்ஷியல் அடவடைஸர் போன்ற பத்திரிக்க்கைகள் இந்த பிரார்த்தனை போட்டியின் சுருக்கத்தை வெளியிட்டன.. இதன் மூலம சமார 25 இலட்சம் மக்கள் வரை இந்த செய்தி சேர்ந்தது.

இந்த பிரசுரம் வெளியிடப்பட்ட போது டூடூயியின் புகழ் உச்சத்தில் இருந்த்து. அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. பணம்படைத்த அவர்களிடமிருந்து ஆண்டுபோறும் ஆயிக்கணக்கான டாலர்கள் பரிசாக பெற்றுவந்தார். டூயிக்கு பல தொழில் நிறுவனங்களும் இருந்தன. அவரது வங்கி இருப்புதொகை 20 மில்லியன் டாலர்களாக இருந்தது. இவர் மிகச்சிறந்த ஆரோக்கியத்தில் இருந்தார். தொடுதல் மூலம் ஆரோக்கியம் கிடைப்பது தனது சிறப்பான அற்புதம் என்று அவர்கூறி வந்தார். டூயிக்கு பணம், பக்தர் கூட்டம், ஆரோக்கியம், செல்வாக்கு ஆகியன எல்லாம் பெருமளவு இருந்த்து.

இரண்டாவது பிரசுரம் வெளிடப்பட்ட போது மக்கள் அவரிடம் அவர் ஏன் பதில் கூறவில்லை என கேட்டனர். அதற்கு அவர் இந்தியாவிலிருந்து ஒரு முகமதிய மெசாயா இயேசு கிறிஸ்து காஷ்மீரில் அடங்கப்பட்டிருக்கிறார் என்று மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி வருகிறார். நான் அவருக்கு ஏன் பதில் கூறுவதில்லை என மக்கள் கேட்கின்றனர். நான் இது போன்ற ஈக்களுக்கு பதில் தருவேன் என நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அவற்றின் மீது எனது காலை வைத்தால் அவற்றின் வாழ்வு அழிந்து போய்விடும். பிழைத்து போகட்டும் என விட்டுவைத்துள்ளேன்”. (நியூஸ் ஆஃப் ஹீலிங் வருடம் 1903 டிசம்பர் 26)

இவ்வாறு கூறியதன் மூலம் அதுவரை போட்டியை ஏற்றுக்கொள்ளாமலிருந்த டூயி முட்டாள்தனமாக போட்டியில் நுழைந்தவராகிவிட்டார். டூயி நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த போட்டியில் நுழைந்தாலும் தனது வாழ்நாளிலேயே அவர் மிகுந்த துக்கத்துடனும் வேதனையுடனும் உலகைவிட்டு செல்வார் என்று ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் (அலை) அவர்கள் கூறியதை அவர் மறந்துவிட்டார். டூயி ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் (அலை) அவர்களை ஒரு ஈ என்றும் தன்னால் அதனை நசுக்க முடியும் என்றும் கூறியதிலிருந்து இந்த போட்டியில் நுழைந்து இறை தண்டனையை வரவழைத்து கொண்டார். டூயியின் பெருமையும் அகங்காரமும் மேலும் வளர்ந்த்து. இவ்வாறு அந்த ஆன்மீக போட்டி படிப்படியாக உருவம்பெற்று வெளிப்படையானதாக மாறிவிட்டது. அவரது இந்த கடைசி அறிவிப்பிற்கு பிறகு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்விஷயம் குறித்து எதுவும் எழுதவில்லை. திருக்குர்ஆனின் ”நீர் எதிர்பார்திருப்பீராக, அவர்களும் எதிர்பார்திருப்பார்கள்” என்ற வசனத்திற்கேற்ப விவகாரத்தை இறைவனிடம் விட்டு விட்டார்கள்.


இறைவனின் பிடி இறுகத்தொடங்கியது. எந்த காலை கொண்டு இறைவனின் மஸீஹை நசுக்கிவிடுவேன் என்று கூறினாரோ அந்த கால் செயலிழந்துவிட்டது. அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தரையில் நிற்கமுடியாத நிலையில் தனது பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்து விட்டு பக்கவாதத்திலிருந்து குணம் பெறுவதற்காக அதற்கேற்ற சூழலை கொண்ட ஒரு தீவு நோக்கி புறப்பட்டார். ஆனால் இறைவனின் கோபமும் அவரைப் பின் தொடர்ந்தது. இறைவனின் மஸீஹை அவர் புழு என கூறினார். இப்போது அவரே புழு போன்று ஆகிவிட்டார். அவர் பெரிதும் பீற்றிவந்த அற்புத சிகிச்சையும் ஆனந்த ஆகோக்கியமும் அவரை விட்டும் நீங்கியது. அவர் வீட்டைவிட்டு சென்ற பின்னர் அவரைப் பின்பற்றியவர் வியந்தனர். பிறருக்கு ”அற்புத சிகிச்சை ” அளிக்கும் டூயி தனக்குத்தானே குணமளிக் முடியாமல் போனது ஏன்? அவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

அவரது வீட்டிற்கு இதுவரை செல்லமுடியாத அவர்கள் தற்செயலாக அவரது வீட்டை சோதனையிட்ட்போது அங்கு உயர் ரக மதுபாட்டில்கள் இருப்பதை கண்டனர். அவரது மனைவியும் மகனும் டூயி தன்னை பின்பற்றுபவர்களிடம் போதை கூடாது என கூறினாலும் இரகசியமாக அவர் அதிகம் குடிப்பவர் என கூறினர். அவரது மனைவியோ தான் அவரிடம் விசுவாசத்துடனே நடந்து கொண்டதாகவும், அவரோ பணக்கார பெண் ஒருத்தியை மணப்பதற்கு திட்டமிடுவதாகவும் கூறி அந்த பெண் டூயிக்கு எழுதிய கடிதங்களையும் காட்டினார். இதற்காகவே பலதார மணம் கூடாது என கூறி வந்த டூயி இந்த சட்டத்தை தற்போது திருத்தியமைக்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார். இதை கேட்டு அதிர்ந்து போன அவரது சகாக்கள் அவரது வங்கி இருப்பை சோதனையிட்டனர். அப்போது அவர் பல இலட்சம் டாலர் முறைகேடு பண்ணியிருப்பது தெரியவந்த்து. மேலும் நகரில் உள்ள இளம் பெண்களுக்கு அதிகமாக பரிசு தொகைகளை வழங்கியிருப்பதும் தெரிய வந்தது.

இந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்ததும் அவரது முன்னணி சகாக்கள் அவரை கைகழுவிவிட முடிவு செய்தனர். அவர்கள் அவருக்கு அனுப்பிய டெலிகிராமில் உமது ஊதாரித்தனமான செலவினங்களையும், இரட்டை வேடத்தையும், முரண்பாடுகளையும், மிகைப்படுத்தலகளையும், ஒழுக்கம் கெட்ட தனத்தையும் இந்த அமைப்பு ஏகமனதாக கண்டிக்கிறது எனவே உமது பதவியிலிருந்து நீர் தள்ளப்படுகிறீர்”


டூயியால் இந்த குற்றச் சாட்டுகளை மறுக்க முடியவில்லை. இறுதியில் அவரது அனைத்து சகாக்களும் அவரை விட்டு விலகினர். ஒரு இறுதி முயற்சியாக டூயி தமது பின்பற்றுபவர்களையெல்லாம் ஒன்று கூட்டி அவர்களிடம் உரையாற்றி அவர்களை தம்பக்கம் இழுக்க முயற்சி செய்தார். இதற்காக அவர் ரயிலில் வந்திறங்கியபோது .அவரை வரவேற்க வெகு சிலரே வந்திருந்தனர். அவரை எவருமே கவனிக்கவில்லை. நீதிமன்றங்களுக்கு சென்றார். அங்கும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது பக்கவாத நோய் அவரை முற்றிலும உதவியற்றவராக ஆக்கிவிட்டது. அவரது நீக்ரோ வேலையாட்கள் அவரை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு தூக்கி சென்றனர். அவர் மிகவும் துக்கத்திலும் வேதனையிலும் வாழ்ந்து வந்தார். அவரது சில நண்பர்கள் மட்டுமே இந்த கடைசி நாட்களில் சந்தித்து வந்தனர். அவர்கள் அவரது நோயிற்கு முறையான சிகிட்சை எடுத்துகாள்ளுமாறு கூறியதற்கு அவர் மறுத்துவிட்டார். நோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்ளகூடாது என்று பிறருக்கு போதித்த அவர் தனககு எவ்வாறு எடுத்து கொள்வார்?

ஒரு இலட்சம் பேராயிருந்த அவரை பின்பற்றியவர்கள் 200 பேராகிவிட்டனர். நீதிமன்றங்களிலும் அவருக்கு தோல்வியே எற்பட்டது. தொடர்ந்து வந்த துன்பங்களை தாங்க முடியாமல் அவர் சுயபுத்தியை இழந்து பைத்தியமாகி விட்டார். இந்த நிலையில் ஒரு முறை அவரை கம்பீரமான தோற்றத்துடன் எலியாவாக பார்த்திருந்த அவரது சில சீடர்களிடம் தனது பெயர் ஜெர்ரி என்றும் முந்தைய இரவு ஷைத்தானுடன் போர் புரிந்தார் என்றும் அப்போரில் அவரது தளபதி கொல்லப்பட்டார் என்றும் அவருக்கு காயம் ஏற்பட்டது என்றும் உளறினார்!. அவரது சகாக்கள் அவருக்கு பைத்தியமாகி விட்டதை அறிந்து கொண்டனர். அவரது கடைசி தோழர்களும் அவரை விட்டுச் சென்றனர். 

பிறகு டூயி மரணிப்பதற்கு 15 நாட்களுக்கு முன் அல்லாஹ் இந்த வெற்றிற்கான தகவலை வழங்கிவிட்டான். 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி அன்று "அல்லாஹ் தஆலா மாபெரும் வெற்றிற்குரிய அடையாளத்தை வெளிப்படுத்துவான். இது முழு உலகிற்கும் ஓர் அடையாளமாக இருக்கும்" என்று ஒரு பத்திரிக்கையில் வெளியிட்டார்கள்.

இதன் அடிப்படையில் சரியாக 15 நாட்கள் கழித்து
வேதனைக்கும் துக்கத்திற்கும் உட்பட்டு மார்ச் 8, 1907 –ல் மரணித்தார். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு துல்லியமாக நிறைவேறியது. அவர்  அந்த இறுதி நாட்களில் அவருடன் இருந்ததவர்கள் 4 பேர்!. அவரிடம் இருந்த சொத்து 30 ருபாய!.. (Ref :- “Invitaion to Ahmadiyyat” by Hazrat Mirza Basheerudeen Mahmood Ahmad)

1 comment:

Powered by Blogger.