அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் என்று கூறுபவர்களின் சிந்தனைக்கு.....!


ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஆங்கிலேய அரசை குறித்து இவ்வாறு சொன்னார்கள்:
........"கவனக் குறைவாக இருப்பவர்களே! இஸ்லாம் என்னும் கட்டிடத்தை உடைத்தெறிவதர்க்காக ஆங்கிலேயர்களாகிய இவர்கள் எந்த அளவில் முயற்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்து பாருங்கள். இவர்கள் தங்களுடைய குறிக்கோளை அடைவதற்க்காக உயிரையே பணயம் வைத்து செல்வத்தை தண்ணீரைப் போல் ஒட்டி கொண்டிருக்கிறார்கள். மற்ற மக்களின் சக்திகளை எல்லாம் செயலற்றதாக ஆக்க பெரும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மிகவும் வெட்கக்கேடான வழிகளில் படு மோசமான திட்டங்களை தீட்டி வருகின்றனர். சத்தியத்திற்கும் உண்மையான நம்பிக்கைக்கும் மாற்றமாக இஸ்லாமிய மார்க்கத்தை அழிப்பதற்கு மாபெரும் பொய்களை மிகவும் துணிச்சலுடன் இட்டுக் கட்டி கூறுகின்றனர். எனவே, சர்ச்சுகளிலிருந்து வெளியேறுவார்கள் என்று முன்னறிவிக்கப்பட்ட தஜ்ஜால் இவர்களேயாகும் என்று நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்"
............ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் அரபி கவிதை ஒன்றில் இவ்வாறு கூறுகின்றார்கள்: 
"இறைவன் மீது ஆணையாக, தஜ்ஜால்களே! நான் உங்களுடைய சிலுவையை நிச்சயமாக உடைக்கத்தான் போகிறேன், இதனால் எனது உடல் துண்டு துண்டாக்கப்பட்டாலும் சரியே!"
........இவ்வாறு இஸ்லாத்திற்காக அறப்போர் நிகழ்த்திக் கொண்டிருந்த ஒருவரை ஆங்கிலேய ஆட்சி கிறித்துவ மார்க்கத்தை பாதுகாப்பதற்க்காக நியமனம் செய்தது என இந்த அறிவற்றவர்கள் கூறுகின்றனர். உண்மையில் சிலுவையை முறிப்பதற்காக தோன்றிய ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களை அன்றைய ஆலிம்கள் தான் கிறித்துவர்களுடன் சேர்ந்து கடுமையாக எதிர்த்தனர். 

......அமிர்த்சரில் கிறித்துவ பாதிரி மார்டின் ஹென்றி கிளார்க்குக்கும் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் இடையில் மாபெரும் வாதம் பிரதிவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் இஸ்லாத்திற்கும் கிறித்துவதிற்குமிடையில் நடைபெற்ற ஒன்றாகும்.
........அப்போது இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் கவனத்திற்காக அன்னார் பின்வருமாறு ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.
....."நடக்கவிருக்கும் இந்த விவாதத்தின் போது ஹஸ்ரத் ஈஸா நபியின் வாழ்வு மரணம் பற்றி பிரச்சனை வந்தால் அப்போது நிச்சயமாக நாங்கள் டாக்டர் மார்டின் கிளார்க்குடன் தான் இருப்போம். அவருக்குச் சாதகாமகதான் இருப்போம்..என்று சில ஆலிம்கள் கூறியிருந்ததாக அமிர்த்சரிலிருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது."
அதாவது அன்று ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருப்பவர்கள், அவர்களுடைய கடவுள் மரணமடையாமல் உயிருடன் இருக்கிறார் என்று கூறுகின்றவர்களா> அல்லது மரணித்து விட்டதென்று நிரூபிப்பவர்களா? இஸ்லாத்தின் துரோகி யார்? என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹாகிய மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் பினவருமாறு கூறுகின்றார்கள்:
........'கிறித்துவ பாதிரிகளின் பொய் பிரச்சாரங்கள் எல்லையை கடந்து
சென்றதும் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகளை நிறைவேற்றுவதர்க்காக இறைவன் என்னைத் தோற்றுவித்தான். என்முன் நின்று என்னை எதிர்க்கத் துணிவுள்ள பாதிரி எவராவது எங்காவது இருக்கின்றாரா? நான் பொருத்தமற்ற காலத்தில் தோன்றவில்லை. இஸ்லாம் கிறித்துவர்களின் கால்களால் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் நான் தோன்றியுள்ளேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த முன்னறிவிப்பும் செய்ததில்லை என்று கூறும் கிறித்துவ பாதிரிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். 
தற்போது எந்த நபி அவமரியாதைக்கு ஆளாக்கப்படுகின்றாரோ எவரைப் பொய்ப் படுத்துவற்கு இந்த கிறித்துவர்கள் இரவு பகலாய் முயன்று வருகின்றார்களோ அவர்தாம் உண்மையான இறைத் தூதரும், உண்மையாளர்களின் தலைவரும் ஆவார் என்று இறைவன் நிரூபித்து காட்டும் காலம்தான் இது".

சிலுவையை கொள்கையை முறியடிப்பதற்காக ஹஸ்ரத் மசீஹே மஊத் (அலை) அவர்கள் மேற்கொண்ட முயற்ச்சிகள் பயனளித்ததா என்பதௌ பற்றி மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்போம்.

மவ்லவி நூர் முஹம்மது நக்ஷபந்தி ஜிஷ்த்தி அவர்கள் மவ்லவி அஷ்ரஃப் அலி தானவியுடைய திருக் குர்ஆன் மொழிப் பெயர்ப்பின் முன்னுரையில், பக்கம் 30-இல் இவ்வாறு எழுதுகின்றார்கள்:
"அந்த காலத்தில் பாதிரி லெபராய் என்பவர் பாதிரிகளின் ஒரு பெருங்கூட்டத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். மிகவும் குறுகிய காலத்திற்குள் முழு இந்தியாவையும் கிறித்துவ மதத்தின் கீழ் ஆக்கிவிடுவோம் என்று கங்கணம் கட்டி கொண்டு, அவர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டார்கள். இங்கிலாந்திலுள்ள மக்களிடமிருந்து பேரும் அளவில் பணம் உதவியை வருங்காலத்தில் தொடர்ந்து உதவி கிடைத்து கொண்டிருக்கும் என்ற வாக்குறுதியையும் பெற்று இந்தியாவில் பிரவேசித்து பெரும் புயலையே ஏற்படுத்தினார்கள். ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் பூத உடலுடனும், உயிருடனும் இன்று வரை வானத்திலிருந்து வருகின்றார்கள் மற்ற நபிமார்களெல்லாம் பூமியில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கை கிறித்துவ மார்க்கத்திற்கு சாதகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இந்த சூழ்நிலையில் மவ்லவி குலாம் அஹ்மத் காதியானி தோன்றி "நீங்கள் கூறி கொண்டிருக்கும் ஈஸா மசீஹ் ஏனைய மனிதர்களைப் போல் இந்த பூமியிலேயே மரணம் அடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டார் என்றும் எந்த ஈசப்னு மர்யமின் வருகையை பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளதோ அது நானே என்றும் நீங்கள் நல்லெண்ணம் உள்ளவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறி பாதிரி லெனின் லெப்ராய்க்கு தடுமாற்றத்தை உண்டாக்கினார். இவ்வாறு அவரையும் அவருடன் வந்த பாதிரி மார்களையும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துவரை பின் தொடர்ந்து துரத்தியடித்துவிட்டார்கள்."

ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களின் இத்தகு நற்பணிகளால் ஆங்கிலஆட்சிக்கோ கிறித்துவ மார்க்கத்திற்கோ ஆள இஸ்லாத்திற்குதான் பலன்கள் கூட கிடைத்து கொண்டிருந்தன.

அஹ்மதிய்யத்தைப் பற்றி நான்கு ஆராய்ந்துள்ள கிறித்துவ சிந்தனையாளர்களுள் சிலரின் கருத்துகளை நான் இங்கு தருகிறேன்.

ஸ்காண்டிநேயாவிலுள்ள கிறித்துவ சபைகள், அஹ்மதிய்யத்தைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தினார்கள். 1959 இல் அந்த குழுவின் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. அக்குழுவின் உறுப்பினராகிய Birtel Wiberg என்பவர் அந்த அறிக்கையில் பின்வருமாறு எழுதியுள்ளார். "இயேசு தேவகுமாரன் என்பதைப்பற்றி அஹ்மதிய்யா இயக்கம் செய்கின்ற ஆட்சேபனைகளிலிருந்து இந்த இய்க்கம் கிறித்துவ மதத்தைத் தனது கடும் விரோதியாக எண்ணுகின்றது என்று தெரிகிறது. இஸ்லாத்திலிருந்து மறைந்து போன மகத்துவத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்காக அது பாடு படுகிறது. அதாவது முஹம்மது நபி அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு நூற்றாண்டில் அதற்கு கிடைத்த அதே மகத்துவத்தை மீண்டும் நிலை நாட்ட அது நினைக்கின்றது. ஆனால் இதில் இவர்கள் வெற்றி பெருவார்களா என்பதை வருங்காலம்தான் கூற வேண்டும். இவ்வியக்கம் செயலாற்றும் சக்தியும் திறமையும் கொண்ட ஒன்றாகும் என்பது நன்றாக தெரிகின்றது."
மேற்கூறப்பட்ட கருத்தைத் தெரிவித்தவர் ஓர் ஐரோப்பியரும் ஆராய்ச்சியாளரும் ஒரு பாதிரியுமாவார் இவர் அஹ்மதிய்யா இயக்கத்தின் சக்தியையும் திறமையையும் தான் காண முடிந்தது. ஆனால் அவர் ஓர் இறை ஞானியும் ஆன்மீக பார்வையும் உள்ளவராக இருந்திருந்தால், அஹ்மதிய்யத்தின் பின்னால் செயலாற்றும் சக்தியை மட்டுமல்லாமல், எல்லாம் வல்ல இறைவனின் சக்தியையும் கண்டிருப்பார்.

ஹாலாந்தை சார்ந்த கிரைமர் என்ற பெயருள்ள புகழ்பெற்ற ஒரு கிறிஸ்துவ பாதிரி காகியானுக்கு வந்திருந்தார். அவர் தமது கருத்தை "Muslim  World"  என்ற இதழில் ஏப்ரல் 1931 இல் இவ்வாறு வெளியிட்டிருந்தார்.
"இந்தியாவிலுள்ள முஸ்லிம்களிடத்தில் பொதுவான ஒரு நிராசை நிறைவேறி வருகிறது. இதற்கு மாற்றமாக அஹ்மதிய்யா இயக்கத்தில் புத்துயிரை காண முடிகிறது. இதன் காரணமாக இந்த இய்க்கம் கவனத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய எல்லா சக்திகளையும் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக செலவு செய்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் ஈடுபட மாட்டார்கள். 
எந்த ஆட்சியின் கீழ் இவர்கள் வாழ்கின்றார்களோ அந்த ஆட்சியுடன் நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக இருக்கின்றனர். எந்த அரசாங்கத்தின் கீழ் தங்களுடைய பிரச்சாரப் பணிகள் தடையின்றி நடைபெற முடியும் என்பதை பற்றிதான் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர், இவர்கள் இஸ்லாத்தை ஒரு மார்க்க பிரிவினை அல்லது ஓர் கண்ணோட்டத்தில் காணவில்லை மாறாக இவர்கள் இஸ்லாத்தை ஓர் உண்மை என்றும் சத்தியம் என்றும் நம்பிக்கை கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையாகவே இவ்வியக்கம் இக்காலத்தில் முஸ்லிம்களிலுள்ள ஓர் அற்புதமான இயக்கமாக இருக்கின்றது. இது இஸ்லாமிய கொள்கையை பரப்புவதை நோக்கமாக கொண்ட முஸ்லிம்களுடைய ஒரே ஒரு ஜமாத்தாக இருக்கின்றது."

ஹாலாந்தில் அஹ்மதிய்யா இயக்கம் உருவான போது அங்குள்ள டாக்டர் ஹியூபன் என்பவர் இவ்வியக்கதிற்கு எதிராக மிகவும் பயங்கரமான முறையில் ஆட்சேபனைகள் செய்து கட்டுரை எழுதினார். இவ்வியக்கம் மிகவும் பயங்கரமானது என்றும், இதனை முஸ்லிம் இல்லாத ஓர் இயக்கமாக கருத வேண்டும் என்றும் கிறிஸ்துவ உலகத்தி எச்சரித்தார்.
அப்போது அங்கிருந்து வெளியான M66     என்ற ஓர் கத்தோலிக்க பத்திரிக்கை அவருடைய கருத்தை மறுத்து கீழ்க்கண்டவாறு வரைந்தது:
"பேராசிரியர் டாக்டர் ஹியூபன் அஹ்மதிய்யா இயக்கத்தை பற்றி எழுதிய கருத்து தவறானது ஆகும். அஹ்மதிய்யா இயக்கம் இஸ்லாத்தின் மருமலர்ச்சிக்கும், புத்துணர்ச்சிக்கும் பாடுபடும் ஓர் அமைப்பாகும். இதனால்தான் இவ்வியக்கம் கிறிஸ்துவர்களுக்கு பயத்தையும், பீதியையும் உண்டாக்கும் ஓர் இயக்கமாக விளங்குகின்றது. இவ்வியக்கம் இஸ்லாத்தின் பிரதிநிதி என்ற பெயருக்கு மிக்க தகுதியும் உரிமையும் உள்ளதாகும். இவ்வியக்கதிற்கு மற்ற முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய நிலமையுடன் உள்ளது.
இன்று கிருஸ்துவர்களுக்கும், அஹ்மதிய்யா இயக்கத்தின் விரோதிகளான ஆலிம்களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் இவ்வியக்கத்திற்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவிலுள்ள பம்பாயிலிருந்து வெளியாகும் 'ஜதீத் உருது' எனும் முஸ்லிம் பத்திரிக்கை ஒன்று புது டில்லியிலிருந்து வெளிவரும் 'நயீ துனியா' என்ற பத்திரிக்கையை மேற்கோள் காட்டி கீழ் கண்டவாறு வரைகின்றது,
"தங்களை அஹ்மதி முஸ்லீம்கள் என்று அழைத்து வரும் அஹ்மதிகள், ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் கிறிஸ்துவ மார்க்கத்தை பலவீனப் படுத்துவதில் ஈடு பட்டு இருக்கின்றனர், கிறிஸ்துவ பாதிரிகள், இவர்களிடம் தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பாக்கிஸ்தானில் இயக்கத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிகளில் கிர்ஸ்துவர்களுடைய கைகள் மறைமுகமாக செயலாற்றி கொண்டிருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். காதியானிகளுக்கு கிருஸ்துவர்களை எதிர்பதற்க்கான சக்தியே எஞ்சி இருக்கக்கூடாது என்ற அளவிற்கு பிற முஸ்லிம்களின் கைகளால் காதியானி ஜமாத்தை பலவீனப் படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ பாதிரிகள் முயன்று வருகின்றனர். கிறிஸ்துவ பிரச்சாரர்கள் தங்களுடைய பண பலத்தால் எல்லாவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தங்களுக்கு பாதங்களுக்கு கீழே வெடி மருந்தை வைத்து தங்களையே அழிவிற்குள்ளாக்கியவர்கள் யார் என்பதை பற்றி முஸ்லீம்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

"அஹ்மதிய்யா இயக்கம் ஐரோப்பா அல்லது ஆப்பிரிக்கா நாடுகளில் எப்போதெல்லாம் முக்கியமான பிரச்சாரப் பணிகளை மேற்கொள்கின்றதோ அப்போதெல்லாம் கிறிஸ்துவர்களை, பாகிஸ்தானிலுள்ள முஸ்லீம்கள் தூண்டி விட்டு அவர்களின் கைகளால் அஹ்மதிய்யா இயக்கத்திற்கு கேடுகளை விளைவித்து கொண்டிருக்கின்றனர்." (ஜதீத் உருது பம்பாய், 20-12-84)

இன்று பாக்கிஸ்தானில் அஹ்மதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் நடவடிக்கைகளில் பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்துவ இயக்கங்களின் பங்கு என்ன என்பதை இப்போது நான் (அதாவது நான்காவது கலீஃபதுல் மசீஹ் (ரஹ்)) உங்களுக்கு எடுத்து காட்டுகின்றேன்.

லாஹூர் உயர் நீதி மன்றத்தில் பாகிஸ்தான் நேஷனல் கிறிஸ்டியன் பார்ட்டியின் தலைவர் மிஸ்டர் பத்ரோஸ்குல் ஓர் ரிட்மனு தாக்கல் செய்துள்ளார்.
2-12-1983 இல் தாக்கல் செய்யபட்டுள்ள இதில் அஹ்மதிகளுடைய நடவடிக்கைகளில் இருந்து பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்துவர்களை காப்பாற்றி, அஹ்மதிய்யா இயக்கத்தை விரும்பத் தகாத அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து அவர்களுடைய எல்லா பிரசுரங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும், அவர்களுடைய மஸ்ஜிதுகளையும், கேந்திரங்களையும் மூடி விட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 

கிறிஸ்தவர்களின் இந்த விருப்பத்திற்கு ஏற்றவாறே இன்று பாக் அரசாங்கம் அஹ்மதிய்யா இயக்கதுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான அவசர சட்டத்தை அறிவித்த பிறகு ஒரு சிறந்த நிறுவனத்தின் தலைவரான சவ்த்ரி சலீம் அக்தர் இந்த அவசர சட்டத்தை மிக்க மகிழ்ச்சியோடு ஆமோதித்தும், ஆதரித்தும் பின்வருமாறு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்:
 "பாகிஸ்தான அதிபர் ஜியாவுல் ஹக் மிகவும் துணிச்சலான நடவடிக்கை எடுத்து முஸ்லிம்களை மட்டும் அல்லாமல் பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினர்களின் உள்ளங்களையும் வென்றுள்ளார்கள். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இவ்வியக்கத்தின் செயல்கள் இஸ்லாத்திற்கு மட்டுமல்லாமல் கிருஸ்தவ மார்க்கத்திற்கும் மாபெரும் இடையூறுகளாக இருக்கின்றன."

சவ்த்ரி சலீம் அக்தர் என்ற கிறுஸ்தவர் பாக் அதிபருக்கு கொடுத்த ஒரு வேண்டு கோளில், அஹ்மதிகளுடைய எல்லா நூட்களையும் சட்ட விரோதமானது என்று பிரகடனம் செய்து அவற்றை பறிமுதல் செய்து நெருப்பில் போட்டு சாம்பலாக்கி விட வேண்டும் என்று கூறி உள்ளார். 

சவ்த்ரி சலீம் அக்தர் பாக் அதிபருக்கு வாழ்த்து கூறி உள்ளார். நான் சவ்த்ரி சலீமுக்கு வாழ்த்து கூறுகின்றேன். ஏனெனில் பாக் அதிபர் இவருடைய விருப்பதிற்கு ஏற்ப தீவிரமாக செயல்பட தொடங்கிருக்கின்றார். அஹ்மதிய்யா இயக்கத்தின் அதிகமான நூல்கள் பறிமுதல் செய்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஏராளமான அஹ்மதிகள் கைது செய்யப்படுகின்றனர். இத்தகு நடவடிக்கைகளின் மூலம் பாக் அரசாங்கம் கிறுஸ்தவ மதத்திற்கு மாபெரும் தொண்டு செய்து கொண்டு இருக்கிறது.

ஒரு பக்கம் அஹ்மதிய்யா இயக்கம்  ஆங்கிலேய கிறித்தவர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு ! ஆனால் மறுபக்கம் கிறித்துவ மார்க்கத்தின் பாதுகாப்பிற்கும் இரட்சிப்பிற்கும் இஸ்லாமிய அரசு என கூறிக் கொள்ளும் பாக் அரசு இவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களுடைய நலன், எழுச்சி, முன்னேற்றம் முதலியவற்றை பொருத்தவரையில் முல்லாக்கள் என்ற இந்த ஆலிம்களுக்கு எவ்விதமான கவலையும் எவ்வகையான அக்கறையும் இருப்பதில்லை. இவர்களுடைய உள்ளங்களில் உலக முஸ்லிம்களைப் பற்றி ஒரு கடுகளவாவது கருணையும் இறக்கமும் அனுதாபமும் இருப்பதில்லை. இதன் விளக்கங்களையும் நான் கூறிவிடுகிறேன்.

1953 இல் பாகிஸ்தானில் அமைக்கப்பட்ட ஒரு விசாரணைக் கமிஷனில் நீதிபதிகள் இந்த ஆலிம்களிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அதாவது இங்கு பாகிஸ்தானில் முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மையினர்களை இரண்டாம் தர குடி மக்களைப் போன்று நடத்த வேண்டும் என்றும், அவர்களுடைய உரிமைகளைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்களுக்கு அரசாங்கப் பதவிகள் எதுவும் கொடுக்கக்கூடாது என்றும் நீங்கள் கூறுகின்ற உங்களுடைய கருத்து சரியானதென்றால், இந்தியாவிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களை அங்குள்ள அரசாங்கம் இதே போன்று நடத்தினால் உங்களுடைய கருத்தின்படி அது சரியா என்று கேட்டார்கள். 

செய்யத் முஹம்மத் அஹ்மத் காதிரி இக்கேள்விக்கு இவ்வாறு பதில் கூறினார். இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஹிந்துக்களுக்கு ஹிந்து தர்மத்திற்கு ஏற்றவாறு அரசை அமைப்பதற்குரிய உரிமை உண்டு. அவர்கள் தங்களுடைய மனு சாஸ்திரத்தின் படி முஸ்லிம்களுடன் மிலேச்சார் சூத்திரர்களைப் போன்று இவர்களுடன் பரிமாறுவது போல் பரிமாறினால் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. 

மேற்கூறப்பட்ட கேள்விக்கு மௌலவி மௌதூதி பின் வருமாறு பதிலளித்தார்:
இந்தியாவிலுள்ள இந்துக்கள், முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தில் பங்கோ, குடிமகன் என்ற உரிமையோ கொடுக்காமல் இருக்கலாம். (விசாரணை கமிஷன் அறிக்கை, பக்கம் 245)

மௌலவி அத்தாவுல்லாஹ் ஷாஹ் புகாரி பதிலளிக்கையில், முஸ்லிம் அல்லாத நாடுகளில் வசிக்கும் 64 கோடி முஸ்லிம்கள், தங்களைப் பற்றி அவர்களேதாம் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு இதில் எந்தவிதமான சம்பந்தமுமில்லை" என்று கூறினார்.

அதாவது இந்தியாவிலோ பாலஸ்தீனிலோ வேறு ஏதாவது முஸ்லிம் அல்லாத ஆட்சியிலோ முஸ்லிம்கள் கொடுமைகளுக்கும், கொலைகளுக்கும் ஆளானால் இந்த முல்லாக்களுக்கும் கொள்ளை ஆலிம்களுக்கும் எவ்விதமான வருத்தமோ எவ்வகையான வேதனையோ ஏற்படுவதில்லை.
ஆனால் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் இதயத்தின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதையும் பாருங்கள். அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"என்னை பயங்கரமாக எதிர்க்கும் ஒருவர் தம்மை முஸ்லிம் என்று கூட கூறினால், அவரின் மீது என்னுள்ளத்தில் வெறுப்போ வைராக்கியமோ ஒரு போதும், இருப்பதில்லை. ஏனென்றால் அவர் எனது அன்பிற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் நேசமுள்ளவராக இருக்கின்றார்.

ஒரு புகழ் பெற்ற  மார்க்க அறிஞரும் அரசியல் தலைவருமான மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த நற்பணியை பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள்:
"மிர்சா சாஹிப் இஸ்லாத்திற்காக செய்த இந்த சேவையை வருங்கால வழி தோன்றல்கள் மாபெரும் உபகாரமாகவும் நன்மையாகவும் காண்பார்கள். பேனாவினால் இஸ்லாத்தின் ஜிஹாத் செய்தவர்களுள் மிர்ஸா சாஹிப் முதல் அணியில் நின்று கொண்டு இஸ்லாத்திற்காக போராடினார்கள். முஸ்லிம்களுடைய நாடி நரம்புகளின் சூடும் இரத்தமும் இருக்கும் வரை அவர்களுடைய உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய அபிமானம் இருக்கும் வரை மிர்ஸா சாஹிபின் அதி மகத்தான சேவைகளை மறக்கவே முடியாது. அச்சேவைகள் என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவை ஆகும்."

மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தெரிவித்த இந்த நல்லெண்ணத்தை வைத்து முஸ்லிம்களிடம் நான் கேட்கிறேன், உங்களுடைய உள்ளங்களில் இஸ்லாத்திற்காக சேவை செய்ய வேண்டும் என்ற என்ன இருக்கிறது என்றால், உங்களுடைய நாடி நரம்புகளில் இஸ்லாத்தின் சூடும் இரத்தமும் இருக்கின்றதென்றால், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) இஸ்லாத்திற்காக செய்த வெற்றிக்காரமான நற்பணிகளை நினைவு கூறாமல் இருக்க முடியாது.

நான் உங்களிடம் கேட்கிறேன், ஒவ்வொரு அஹ்மதிக்கும் உங்களிடம் கேட்பதற்கான அனுமதி உண்டு. உங்களுடைய உயிரோட்டமுள்ள இரத்தம் எங்கே மறைந்து விட்டது. இன்று நீங்கள் நேர் விரோதமாக பேசுகின்றீர்கள். இன்று கிருத்தவ மார்க்கம் தனது நலனுக்காக அவரை உருவாக்கியதென்று கூறுகின்றீர்கள். உங்களுடைய இஸ்லாமிய அபிமானம் எங்கே போய் மறைந்து விட்டது? சற்று சிந்தித்து பாருங்கள், உங்களுடைய இரத்தத்தை எது உறிஞ்சி குடித்து விட்டது?

சில வவ்வால்கள் மனிதனுடைய கழுத்தில் ஒட்டிக் கொண்டு அவனுடைய இரத்தத்தை உறிஞ்சி குடிபதுண்டு. இன்று எந்த வவ்வால்கள் உங்களுடைய நாடி நரம்புகளை பல்லால் கடித்து இஸ்லாமிய இரத்தத்தை உங்களுக்கு தெரியாமலையே உறிஞ்சி குடித்து கொண்டிருக்கிறது?

உங்களுடைய உடம்பில் இஸ்லாமிய இரத்தம் ஓடி கொண்டு இருக்கிறதென்றால், இறைவன் மீது ஆணையாக நீங்கள் வாக்களிக்கப்பட்ட மசீஹை சபிப்பதற்கு பதிலாக அவர்களை புகழ்ந்து பாராட்டி கொண்டே இருப்பீர்கள். தமது உயிர், மானம், மரியாதை, பொருள், சந்ததிகள், பெற்றோர்கள் எல்லாவற்றையும் இஸ்லாத்திற்காக அற்பணம் செய்தவரும், எல்லாவிதமான தியாகங்களையும் இஸ்லாத்திற்காக மேற்கொண்டவருமான, இஸ்லாத்தின் அந்த முஜாஹிதுக்கு நீங்கள் என்றென்றும், ஸலவாத்தும், சலாமும் சொல்லி கொண்டேயிருப்பீர்கள்.

ஒரே எண்ணாத்துடன் அவர்கள் எழுந்தார்கள் அந்த எண்ணத்திற்காகவே வாழ்ந்தார்கள். அவ்வேண்ணங்கள் பூர்தியாக வேண்டும் என்ற ஆவலுடனேயே இந்த உலகத்தை விட்டு சென்றார்கள். அதாவது உலகெங்கும் தமது எஜமானராகிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனை பரவ வேண்டும், நமது எஜமானராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருக் குர்ஆனின் சட்டங்கள் உலகெங்கும் செயல்படுத்தப்பட வேண்டும், முழு உலகிலும் அவர்களின் பெயர் மதிப்புடனும், மரியாதையுடனும் கூறப்பட வேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்ட இஸ்லாத்தின் மாபெரும் தியாகியை நீங்கள் இஸ்லாத்தின் மாபெரும் துரோகி என்கின்றீர்கள்.

இறைவன் மீது ஆணையாக உங்களுடைய இந்த சதியும், ஏமாற்று வேலையும் ஒரு போதும் பலன் தருவதில்லை. நாங்கள் அதற்கு விட மாட்டோம். இஸ்லாத்தின் துரோகி யார்? இஸ்லாத்தின் முன்னணித் தொண்டர்கள் யார்? என்பதை உலகிறக்கு நாங்கள் எடுத்துக் காட்டியே தீருவோம். இன்ஷா அல்லாஹ்.........(பாகிஸ்தான் அரசின் "வெள்ளை அறிக்கை" க்கு மறுப்பாக ஹஸ்ரத் நான்காவது கலீஃபதுல் மசீஹ் மிர்ஸா தாஹிர் அஹ்மத் (ரஹ்) அவர்கள் 8-2-1985 இல் ஆற்றிய குத்பா பேருரையின் தமிழாக்கம்)

http://www.alislam.org/library/browse/book/British_Government_and_Jihad/
https://www.alislam.org/v/k-Aaina.html
  

No comments

Powered by Blogger.