ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் ஷரீஅத் நுபுவ்வத்திற்கான வாதம் செய்தார்களா?
கேள்வி: ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் அவர்கள் தன்னுடைய பல்வேறு நூல்களில் தான் ஷரிஅத் அற்ற நபி ஆவேன் என்று எழுதியுள்ளார்கள். ஆனால் அர்பயீன் நம்பர் 4, பக்கம் 6 இன் மூலப்பகுதி மற்றும் அடிக்குறிப்பில் அவர்கள் "நான் ஷரீஅத் நபி ஆவேன்" என்றும் எழுதுகின்றார்கள்.
பதில்: இது முற்றிலுமான பொய்யாகும். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அர்பயீன் மட்டுமல்ல வேறு எந்த நூலிலும் தான் ஷரீயத் துடைய நபி என்று ஒருபோதும் எழுதவில்லை. மாறாக ஹுஸூர் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய இறுதி நூலில் இந்த குற்றச்சாட்டிற்கான மறுப்பை ஆணித்தரமாக வழங்கியுள்ளார்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எழுதுகிறார்கள்:
"என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு அதாவது நான் திருக்குர்ஆனை அவசியமற்றதாகவும் மேலும் எனக்கென்று தனி கிப்லா, கலிமா மற்றும் இஸ்லாத்தின் ஷரீயத்தை ரத்து செய்யக் கூடிய ஒரு நபியாக என்னை நான் கருதுகின்றேன் என்று என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு முறையானதல்ல. மாறாக இப்படிப்பட்ட வாதத்தை (நான்) குஃப்ராக கருதுகிறேன். இவ்வாறான நுபுவ்வத் வாதம் என்னுடையதல்ல. மேலும் இது முற்றிலுமாக என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாற்றே ஆகும், என்று இன்று மட்டுமல்ல மாறாக தொடர்ச்சியாக என்னுடைய எல்லா நூல்களிலும் எழுதி வருகின்றேன்.
(அக்பாரே பதர் 26 மே 1908)
ஆக எதனை நீர் ஆதாரமாக அர்பயீன் நம்பர் 4, 6ஆவது பக்கத்தில் மூலப்பகுதி மற்றும் அடிக்குறிப்பிலிருந்து காட்டுகிறீரோ, அதில் ஒருபோதும் தான் ஷரீஅத்துடைய நபி என்று எழுதவில்லை. (மாறாக) ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதிரிகளை குற்றவாளி ஆக்குவதற்காக لو تقول (என்ற வசனத்தை) என்ற வசனத்திற்கு விளக்கமாக இவ்வாறு கூறினார்கள் அதாவது لو تقول வசனத்தில் கூறப்படும் 23 வருட கால அவகாசம், ஷரீயத்துடைய நபிமார்களுக்கு உரியதாகும் என்றால் இந்த வாதம் ஆதாரமற்ற தாகும்.
மேலும் எதிரிகளை குற்றவாளி மற்றும் பதிலற்றவர்களாக ஆக்குவதற்கு இவ்வாறு கூறினார்கள்:
"உங்கள் கருத்தின்படி ஷரீயத்துடையவர் என்றால் என்ன? எவருடைய வஹியில் கட்டளை மற்றும் தடை (சம்பந்தப்பட்ட போதனைகள்) இருக்குமோ அவரே ஆவார் என்றால் இந்தக் கருத்தின்படியும் எதிரிகள் குற்றவாளி ஆவார்கள். ஏனென்றால் என்னுடைய வஹியிலும் கட்டளை மற்றும் தடை (சார்ந்த போதனைகள்) இருக்கின்றன"
ஆக ஹஸ்ரத் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் எதிர்தரப்பினரை குற்றவாளி ஆக்கினார்களே தவிர ஷரீஅத்துடைய நபிக்கான தமது கொள்கை இதுவாகும் என்று கூறவில்லை.
இதற்குப் பிறகு மஸிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய வஹியை குறிப்பிடுகின்றார்கள், அதாவது
قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ اَبْصَارِہِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَہُمْ
(அர்பயீன் நம்பர் 4 ரூஹானி கஜாயின் பாகம் 7 பக்கம் 435-436)
இது திருக்குர்ஆனுடைய வசனமாகும். மேலும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மீது புதுப்பிக்கும் வகையில் இறங்கியுள்ளது. எனவே அன்னாருடைய வஹி, குர்ஆன் ஷரீஅத்தை புதுப்பித்து இவ்வுலகில் புதுமையாக வெளிபடுத்துவதற்காக உள்ளது. இதில் (இந்த வஹியில்) எந்த கட்டளைகளும், தடைகளும் புதியதாக இல்லை. ஆக அன்னாருடைய வாதம் ஷரீயத்துடையவர் என்பது அல்ல மாறாக ஷரீஅத்தை புதுப்பிக்கக்கூடியவர் என்பது தெளிவாகின்றது.
இந்த அடிப்படையில், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், 'அல்லாஹ் தஆலா எனது வஹியில் கட்டளை மற்றும் தடை (சார்ந்த போதனை)யை புதுப்பிக்கும் வகையில் இறக்கியுள்ளான்' என டிசம்பர் 1900 ல் வெளிவந்த அர்பயீன் நம்பர் 4, அதே பக்கம் 6 இன் அடிக்குறிப்பில் தெளிவாக எழுதி உள்ளார்கள்.
எவருடைய வஹியில் முன்புள்ள ஷரீயத்தின் கட்டளைகள் மற்றும் தடை (சார்ந்த போதனை)களை நீக்கக்கூடிய புது கட்டளைகள் மற்றும் புது தடைகள் இருக்குமோ அவரே ஷரீஅத்யுடையவர் என்பது இப்பொழுது தெளிவாகின்றது.
ஆனால் ஹஸ்ரத் மஸிஹ் (அலை) அவர்களுடைய வஹியில் ஒரு போதும் இவ்வாறு இல்லை.
எனவே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷரீஅத் நுபுவ்வத்திற்கான வாதம் செய்தார்கள் என்று கூறுவது வெறும் பொய்யும் இட்டுக்கட்டிக் கூறுவதாகும். சான்று காட்டப்பட்ட வாக்கியத்தில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (எதிரிகளின்) வாயை மூடும் வகையில் கொடுத்த பதில் எங்கே? தன் சார்பாக தனது ஒரு கொள்கையை எடுத்து வைப்பது எங்கே?
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்
உதவியது: தப்லீக் பாக்கெட் புக்
Post a Comment