Home

என் வருகையின் நோக்கம்




ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) கூறுகின்றார்கள்:
இறைவனுடைய ஏகத்துவத்தையும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் மகத்துவத்தையும் உலகில் நிலைநாட்டுவதுதான் என் வருகையின் முக்கியமான நோக்கம். நான் நபிகள் நாயகத்தின் ஊழியனாக இருக்கின்றேன் அவர்களின் நபித்துவத்தின் ஒளியிளிருந்துதான் எனக்கு ஒளி கிடைத்திருக்கின்றது. அன்றி எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை. அதனால் எனது பூரணமான நம்பிக்கையாவது நபிகள் நாயகத்திற்கு பிறகு அவர்களுடன் எந்த வித தொடர்புமில்லாமல் இறைவன் புறமிருந்து நேரடியாக நான் வந்துள்ளேன் என்று எவராவது சுயமாக வாதம் செய்தால் அவர் சபிக்கப் பட்டவர் என்பதாகும்.நபிகள் நாயகத்தை பின்பற்றாமல் எவராலுமே இறைவன் புறமிருந்து வர முடியாது என்று என்றென்றைக்கும் இறைவன் புறமிருந்து முத்திரை இடப்பட்டிருக்கின்றது.
(மல்பூசாத் பாகம் 3 பக்கம் 287 )

No comments

Powered by Blogger.